MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பட்ஜெட் நாளை தாக்கல்: எதிர்க்கட்சித் தலைவர் கைது – துரைமுருகன் கண்டனம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பட்ஜெட் நாளை தாக்கல்: எதிர்க்கட்சித் தலைவர் கைது – துரைமுருகன் கண்டனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - பட்ஜெட் நாளை தாக்கல்: எதிர்க்கட்சித் தலைவர் கைது – துரைமுருகன் கண்டனம்

தமிழ்நாடு

பட்ஜெட் நாளை தாக்கல்: எதிர்க்கட்சித் தலைவர் கைது – துரைமுருகன் கண்டனம்

Fernandez
Last updated: ஆகஸ்ட் 4, 2026 1:01 மணி
Fernandez
Share
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவிக்கும் புகைப்படம்
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்
SHARE

நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று காவல்துறையால் கைது செய்யப்பட்டதற்கு தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது ஆணவ அடக்குமுறை என்றும், பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பயந்து நடத்தப்பட்ட பாசிச நடவடிக்கை என்றும் அவர் விமர்சித்துள்ளார். இந்த கைது நடவடிக்கையால் எதிர்க்கட்சித் தலைவரை அச்சுறுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், 'பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், அவையில் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை எதிர்கொள்ளத் துணிச்சலற்ற கோழை த.வெ.க. அரசு காவல்துறையை ஏவி அவரைக் கைது செய்துள்ளதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். நேற்று தஞ்சையில் விவசாயிகளுக்காகக் கழகம் எழுப்பிய கோரிக்கைகள் குறித்து வாய்திறக்காத அரசு, அந்தப் போராட்டத்தின் எழுச்சியைக் கண்டு தொடை நடுங்கி, ஜனநாயகத்தின் முக்கியத் தூணான எதிர்க்கட்சித் தலைவரையே அடிப்படையற்ற பொய் வழக்கில் கைது செய்துள்ளது அராஜகத்தின் உச்சகட்டம்! இது மிக மோசமான ஜனநாயகப் படுகொலை!' என்று தெரிவித்துள்ளார்.

மேலும், மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் தனது 'Apprentice' ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், மாநிலம் முழுவதும் மக்களை வாட்டும் மின்கட்டணப் புகார்கள் குறித்தும், விவரம் இல்லாத அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்தும், 'இம்' என்றால் சிறைவாசம் என்ற ஆணவத்தைப் பிரதிபலிக்கும் அடக்குமுறைகள் குறித்தும், பாலியல் வழக்குகளில் அடுத்தடுத்து சிக்கும் த.வெ.க. நிர்வாகிகள் குறித்தும், டெல்டா விவசாயிகள் கண்ணீர் சிந்த வைக்கும் காவிரிப் பிரச்சினையில் மாண்புமிகு முதலமைச்சரின் மௌனம் மற்றும் மெத்தனம் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் நாளை தொடங்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் கேள்விகளை எழுப்பவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தக் கேள்விகளுக்கு அஞ்சி நடுங்கிய அரசு, தஞ்சாவூரில் பேசாத ஒன்றைப் பேசியதாகப் புனைந்து, கற்பனைக் குற்றச்சாட்டின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை (FIR) ஒன்றைப் போட்டு, உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலையும் மீறி அவசர அவசரமாகக் கைது செய்துள்ளது என்றும், இது அடாவடி தவெக அரசின் அராஜகத்தின் உச்சகட்டம் என்றும் துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார்.

கொடுங்கோல் ஆட்சியின் அலங்கோலத்தை அரங்கேற்ற இந்த அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். பாசிசத்தின் உச்சகட்டமாக எங்கள் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களைப் பொய் வழக்கில் கைது செய்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் விஜய், தற்போது நடத்தி வருவது தி.மு.க. கூட்டணியிடம் இருந்து கடன் வாங்கிய கட்சிகளுடன் ஆதரவிலான ஆட்சி என்பதை 'அதிகார போதையில்' மறந்து, மகுடி வாசித்துக் கொண்டிருக்கிறார் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

மாண்புமிகு முதலமைச்சர் விஜய் இப்படி தி.மு.க.வையும் மிரட்ட முடியாது, எங்கள் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்களையும் அச்சுறுத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். 'நாங்கள் இதையும் சந்திப்போம், எதையும் சந்திப்போம்! சட்டப்பேரவையில் பதில் சொல்லாவிட்டாலும் மக்களுக்கு இந்த அரசு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்!' என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:BudgetDMKDuraimuruganTamil Nadu PoliticsTVEKUdhayanidhi StalinVIJAYஉதயநிதி ஸ்டாலின்தமிழக அரசியல்தவெகதிமுகதுரைமுருகன்பட்ஜெட்விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article பிரஷர் குக்கரின் மூடி மற்றும் ரப்பர் கேஸ்கட் குக்கர் மூடி ஆபத்து: ரப்பரை உடனே சுத்தம் செய்யுங்கள்!
Next Article பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவிக்கும் படம் 502 செவிலியர் பணியிடங்கள் நீக்கம்: தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி
தமிழ்நாடு

பாடகி எஸ்.ஜானகி: பாடலாசிரியர், இசையமைப்பாளர் – ஒரு பார்வை

பாடகி எஸ்.ஜானகி, 25 மொழிகளில் பாடியுள்ளார். பல பாடல்களை எழுதி இசையமைத்துப் பாடியுள்ளார். 17 மொழிகளில் பாடிய ஒரே பாடகி என்ற பெருமைக்குரியவர்.

3 Min Read
பிரபல தொழிலதிபர் பி.ஆர்.சுந்தர் கைது செய்யப்பட்டார்
தமிழ்நாடு

பிரபல தொழிலதிபர் பி.ஆர்.சுந்தர் பெங்களூருவில் கைது: பாலியல் புகார் பரபரப்பு

பிரபல தொழிலதிபர் பி.ஆர்.சுந்தர், செய்தி வாசிப்பாளர் பாலியல் புகார் தொடர்பாக பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். இவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

2 Min Read
தமிழ்நாடு

பி.எஸ்.ராமன், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்தார்

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக இருமுறை பதவி வகித்த பி.எஸ்.ராமன், புதிய அரசு அமைந்துள்ள நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

1 Min Read
முதல்-அமைச்சர் விஜய் மருத்துவ காப்பீடு தொகை உயர்வு மற்றும் புதிய மருத்துவமனை அறிவிப்பு
தமிழ்நாடு

மருத்துவ காப்பீடு ரூ.25 லட்சம்: முதல்வர் விஜய் அறிவிப்பு

தமிழகத்தில் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகை ரூ.25 லட்சமாக உயர்த்தி, முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். மேலும், பெரம்பூரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு உயர் சிறப்பு…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?