கருப்பு எள்ளின் மருத்துவ குணங்கள்: எலும்பு முதல் இதயம் வரை நன்மைகள்!

கருப்பு எள்ளில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இதை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக, எள்ளுருண்டையாக தயாரித்து உண்பதன் மூலம் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம். எலும்பு தேய்மானத்தால் அவதிப்படுபவர்கள் கருப்பு எள்ளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், எலும்பு தேய்மானம் ஏற்படுவதை தடுக்க முடியும். மேலும், உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கவும் கருப்பு எள் உதவுகிறது.

நம்முடைய இரத்தக் குழாய்களும் இதயமும் ஆரோக்கியமாக செயல்படுவதற்கு கருப்பு எள் பேருதவியாக இருக்கிறது. கால்சியம் சத்து நிறைந்த கருப்பு எள், ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டால் ஒரு கப் பாலில் உள்ள கால்சியச் சத்துக்கு சமமாகும்.

சுவையான மற்றும் ஆரோக்கியமான எள்ளுருண்டை செய்வது எப்படி என்பதைப் பார்ப்போம். முதலில், ஒரு பாத்திரத்தில் எள்ளை போட்டு, அது நன்றாக பொரியும் வரை வறுத்து தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர், வேர்க்கடலையையும் இதேபோல் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

வறுத்த எள் மற்றும் வேர்க்கடலையை ஆறவைத்து, மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். அதனுடன் அரை கப் நாட்டுச் சர்க்கரை சேர்த்து மீண்டும் ஒரு முறை அரைத்து எடுக்கவும். கடைசியாக, கைகளில் சிறிது நெய் தடவி, அரைத்த கலவையை சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்துக்கொண்டால், ஆரோக்கியம் மிகுந்த சுவையான எள்ளுருண்டை தயார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version