MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்: அண்ணாமலையுடன் இணைந்தனர்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்: அண்ணாமலையுடன் இணைந்தனர்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்: அண்ணாமலையுடன் இணைந்தனர்

லைஃப் ஸ்டைல்

பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்: அண்ணாமலையுடன் இணைந்தனர்

Admin
Last updated: ஜூன் 6, 2026 10:37 காலை
Admin
Share
SHARE

கோவையில் பாஜகவிற்கு பெரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகியுள்ளனர். கோவை தெற்கு மாவட்ட பாஜகவின் முன்னாள் தலைவர் கே.வசந்தராஜன், தனது 28 ஆண்டு கால பாஜக உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்திருக்கும் இந்த சூழலில், வசந்தராஜன் பாஜகவில் இருந்து விலகி, அண்ணாமலை உடன் இணைந்து பயணிக்கப் போவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், '1998ல் கிளை தலைவராக பாஜகவில் எனது அரசியல் பயணத்தை தொடங்கி, மாநில இளைஞரணி பொதுச்செயலாளர், மாவட்ட தலைவர், பாராளுமன்ற வேட்பாளர் என பல நிலைகளில் என்னை உயர்த்திய பாரதிய ஜனதா கட்சிக்கு எனது மனமார்ந்த நன்றிகள். 28 ஆண்டுகளாக தாமரையுடன் வாழ்ந்திருக்கிறேன். வாஜ்பாய், அத்வானி, மோடி போன்ற தலைவர்களின் தலைமையில் பாஜகவில் பயணித்தது எனது பூர்வ ஜென்ம புண்ணியம். தமிழகத்தில் ஊழல், குடும்ப ஆட்சி, போதைக்கு அடிமை போன்ற பிரச்சனைகளில் இருந்து மீட்டு, தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதே எனது சமூகப் பயணம். ஆனால், தற்போதைய தமிழக பாஜக சூழலில் அது நிறைவேறும் என்ற நம்பிக்கையை நான் முழுவதுமாக இழந்துவிட்டேன். கட்சிக்காக பாடுபட்ட இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும், அனைவரையும் தலைவர்கள் மரியாதையுடன் நடத்த வேண்டும் என்பதே எனது ஆவல். கனத்த இதயத்துடன் பாஜகவில் இருந்து விலகுகிறேன். தமிழக நலன், தேசிய சிந்தனை, ஊழலற்ற நேர்மையான வளர்ச்சி ஆகியவற்றை எதிர்பார்க்கும் அரசியல் பாதையில் அண்ணாமலை அண்ணனுடன் இணைந்து பயணிக்க எனது அரசியல் நண்பர்களுடன் முடிவு செய்துள்ளேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட முன்னாள் பாஜக தலைவரான வேதசுப்பிரமணியமும் பாஜகவில் இருந்து விலகியுள்ளார். தாம்பரத்தை அடுத்த செம்பாக்கத்தைச் சேர்ந்த இவர், 1998 முதல் 28 ஆண்டுகளாக பாஜகவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வந்துள்ளார். தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இருந்தபோது, செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவராக செயல்பட்ட இவர், பின்னர் தாம்பரம் சட்டசபை தொகுதி அமைப்பாளர், மாநில செயற்குழு உறுப்பினர் போன்ற பொறுப்புகளையும் வகித்துள்ளார். இவரும் அண்ணாமலையுடன் இணைந்து பணியாற்றப்போவதாக அறிவித்துள்ளார்.

பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி, அண்ணாமலையுடன் இணைவது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தமிழக அரசியல் களத்தில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AnnamalaiBJPTamil Nadu Politicsஅண்ணாமலைதமிழ்நாடு அரசியல்பாஜக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மனைவி மீது சந்தேகம்: 9 மாத குழந்தையை கொன்ற தந்தை!
Next Article சனிக்கிழமை எண்ணெய் குளியல்: வெறும் பழக்கமல்ல, ஆன்மீக ரகசியம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே

அமித் ஷா பதவி விலக சிஜேபி நிறுவனர் வலியுறுத்தல்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜூலை 20 அன்று மாணவர்கள் மீது…

ஜூலை 30, 2026

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு: கர்நாடகாவில் நாளை பந்த்

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து,…

ஜூலை 30, 2026

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: கனிமொழி கண்டனம்

மாநில பாடலான தமிழ்த்தாய் வாழ்த்தின் முன்னுரிமையை மூன்றாம்…

ஜூலை 30, 2026

முரளி ஸ்ரீசங்கர் வெள்ளிப் பதக்கம்: பிரதமர் மோடி பாராட்டு

பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் இந்திய வீரர் முரளி…

ஜூலை 30, 2026

இந்தியாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓராசிரியர் பள்ளிகள்: தமிழகம் எத்தனையாவது இடம்?

இந்தியாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் ஒரே…

ஜூலை 30, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

காங்கிரஸ் தலைவர் மாற்றம்: யார் அந்த மூத்த தலைவர்?

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஏழு மாநில சட்டசபை தேர்தல்களை எதிர்கொள்ள புதிய தலைவர்…

1 Min Read
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன்
தமிழ்நாடு

தவெக கூட்டணியில் விசிக: திருமாவளவன் அறிவிப்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) இனி தமிழக வளர்ச்சி முன்னணி (தவெக) கூட்டணியில் அங்கம் வகிக்கும் என அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சென்னையில்…

2 Min Read
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
தமிழ்நாடு

காங்கிரஸின் துரோகங்கள் உலகிற்கே தெரியும்: நயினார் நாகேந்திரன்

காங்கிரஸ் கட்சியின் துரோகங்கள் உலகிற்கே தெரியும் என்றும், தமிழகத்தின் உரிமைகளை பறித்ததாக கூறும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்றும் நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்துள்ளார்.

2 Min Read
தமிழ்நாடு

அண்ணாமலையின் புதிய இயக்கம்: இளைஞர்கள் ஏராளம் சேர்ப்பு!

அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் இளைஞர்கள் பெருமளவில் இணைந்து வருகின்றனர். விரைவில் நேரடி உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட உள்ளது. இது தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?