பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் அதிரடி நீக்கம்

பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம்

பாஜகவின் மாநில பிற்படுத்தப்பட்டோர் பிரிவு செயலாளராக திவ்யா சேஷாத்ரி என்பவர் செயல்பட்டு வருகிறார். இவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர், கடந்த 2024ஆம் ஆண்டு முதல் திருச்சியில் வசித்து வருகிறார். இந்நிலையில், பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு எம்.முருகானந்தம் தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தியதாகவும், மிரட்டல் விடுத்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கட்சியின் தேசியத் தலைமையிடம் திவ்யா சேஷாத்ரி புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரில், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், விசாரணை முடியும் வரை கருப்பு முருகானந்தத்தை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும், பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின், தேசியப் பொதுச்செயலாளர் (அமைப்பு) பி.எல். சந்தோஷ், மாநிலப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பிற மூத்த தலைவர்களிடமும் அவர் அதிகாரப்பூர்வமாக புகார் மனுவை அளித்துள்ளார்.

தனது புகாரில், கருப்பு முருகானந்தம் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதாகவும், தனது பொறுப்பில் உள்ள குழந்தைகளின் பள்ளி ஆவணங்களில் பாதுகாவலராக தனது பெயரை குறிப்பிட்டதாகவும் திவ்யா சேஷாத்ரி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட தனக்கு ஆதரவளிப்பதாக அவர் உறுதியளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கருப்பு முருகானந்தத்துடன் உறவில் இருந்ததால் தான் கர்ப்பமடைந்ததாகவும், தனது விருப்பத்திற்கு மாறாக கருக்கலைப்பு செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் திவ்யா சேஷாத்ரி தனது புகாரில் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பாஜக மாநில பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து கருப்பு முருகானந்தம் உடனடியாக நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால், அவரை பொறுப்பில் இருந்து நீக்கி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உத்தரவிட்டுள்ளார். இந்த அதிரடி நடவடிக்கை பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version