தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை: வைகோ வரவேற்பு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

தமிழக சட்டப்பேரவையில், அனைத்து நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை அளிக்க வேண்டும் என்ற தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதற்கு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது மனமார்ந்த வரவேற்பைத் தெரிவித்துள்ளார். இது தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு முக்கியமான அங்கீகாரமாக அவர் கருதுகிறார்.

இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் பிற பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன்பு, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும்" என முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வந்து ஒருமனதாக நிறைவேற்றியது மிகவும் வரவேற்கத்தக்க செயல் ஆகும். இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றிய முதல்வர், முதன்முதலில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சிக் காலத்தில், மனோன்மணீயம் சுந்தரனார் அவர்களால் 1891-இல் எழுதப்பட்ட ‘மனோன்மணீயம்’ நாடக நூலின் பாயிரத்திலிருந்து எடுக்கப்பட்ட ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடலை, 1970 நவம்பர் 23-ஆம் தேதி முதல் அரசு விழாக்களில் முதலில் பாட வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டு, அது செயல்பாட்டுக்கு வந்ததையும் நினைவு கூர்ந்தார். மேலும், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், 2021 டிசம்பர் 12-ஆம் தேதி முதல் இந்த வாழ்த்துப் பாடலுக்கு மாநிலப் பாடலாக அதிகாரபூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் அர்லேகர் அவர்கள், ஒன்றிய பாஜக அரசின் செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ‘வந்தே மாதரம்’ பாடலை முதலில் பாடச் செய்தது, தமிழ் மக்களுக்கு விடப்பட்ட ஒரு நேரடி அறைகூவல் ஆகும். தேசிய இனங்களின் மொழி உரிமைகளைப் பறித்து, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ‘ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம்’ என்ற கோட்பாட்டை நிலைநிறுத்தி, இந்துராஷ்டிரத்தை அமைப்பதற்கு அடித்தளம் அமைக்க ‘வந்தே மாதரம்’ பாடலைத் திணிப்பதற்கு ஒன்றிய பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியா என்பது பல்வேறு தேசிய இனங்களின் கூட்டமைப்பு என்பதை டெல்லி ஆட்சியாளர்கள் உணர வேண்டும். இந்தச் சூழலில், தமிழ்நாடு அரசு தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருப்பது மிகவும் பாராட்டுக்குரியதாகும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version