MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள்!

தமிழ்நாடு

பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள்!

Fernandez
Last updated: செப்டம்பர் 26, 2026 6:33 காலை
Fernandez
Share
பிறப்பு சான்றிதழ் வழங்கும் அரசு அலுவலகம்
பிறப்பு சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பப் படிவம்
SHARE

குழந்தைகளின் பிறப்பை உறுதிசெய்து, அதிகாரப்பூர்வமாக பதிவு செய்து வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழ், அரசின் முக்கிய ஆவணமாகும். இது குழந்தையின் முதல் உரிமையாகவும் கருதப்படுகிறது. பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயர், பிறந்த தேதி, நேரம், இடம், மருத்துவமனை, பெற்றோர் பெயர் போன்ற முக்கிய விவரங்கள் இடம்பெறுகின்றன.

பள்ளி சேர்க்கை, ஆதார் அட்டை, வகுப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை போன்ற பல அத்தியாவசிய ஆவணங்களைப் பெறுவதற்கு பிறப்புச் சான்றிதழ் முதன்மையானதாக உள்ளது. பொதுவாக, குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பதிவு செய்து, இலவசமாக பிறப்புச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளும் வசதி உள்ளது.

சில சமயங்களில், குழந்தை பிறந்த சில நாட்களில் பெயர் வைக்கப்படாததால், பெற்றோர் குழந்தையின் பிறப்பை மட்டும் பதிவு செய்து, பெயர் இல்லாத சான்றிதழைப் பெறலாம். பின்னர், குழந்தைக்குப் பெயர் சூட்டப்பட்ட பிறகு, பெயரைச் சேர்த்து புதுப்பிக்கப்பட்ட சான்றிதழைப் பெற வேண்டும். அப்போதுதான் அந்தச் சான்றிதழ் முழுமையானதாக மாறும்.

இந்நிலையில், பெயர் சேர்க்காமல் உள்ளவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துவத்துறை வழங்கியுள்ளது. இதுகுறித்து பொது சுகாதார இயக்குநர் மற்றும் மாநில முதன்மை பிறப்பு, இறப்பு பதிவாளர் சோமசுந்தரம் வெளியிட்ட அறிவிப்பின்படி, 27.11.2011-க்கு முன்னர் (15 வருடங்களுக்கு முன்னர்) பிறந்து, பிறப்பு பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு, பெயர் பதியப்படாமல் இருக்கும் பதிவுகளுக்கு, பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்ப்பதற்கான இறுதி அவகாசம் 26.09.2026 வரை வழங்கப்பட்டுள்ளது.

எனவே, பிறப்புச் சான்றிதழில் உங்கள் குழந்தையின் பெயரைச் சேர்க்க செப்டம்பர் 26ஆம் தேதியே கடைசி நாள் ஆகும். இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கல்விச் சான்று, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒரு ஆவணத்தை சமர்ப்பித்து பெயரைச் சேர்த்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெயர் சேர்க்க விண்ணப்பிக்க வேண்டிய அலுவலகங்கள்:
* பிறப்பு இறப்பு பதிவாளர், கிராம நிர்வாக அலுவலகம்
* பிறப்பு இறப்பு பதிவாளர், பேரூராட்சி அலுவலகம்
* பிறப்பு இறப்பு பதிவாளர், நகராட்சி அலுவலகம்
* பிறப்பு இறப்பு பதிவாளர், மாநகராட்சி அலுவலகம்
* சுகாதார ஆய்வாளர்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள்

கட்டணம் குறித்த விவரங்கள்:
பொதுவாக, குழந்தை பிறந்து 21 நாட்களுக்குள் பதிவு செய்து, பெயர் சேர்க்காமல் இருப்பவர்கள் ஒரு வருடத்திற்குள் பெயரைச் சேர்க்க எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. ஆனால், ஒரு வருடத்திற்குப் பிறகு மற்றும் 15 வருடங்களுக்குள் தாமதமாகப் பெயர் சேர்க்க ரூ. 200 கட்டணம் செலுத்த வேண்டும். அதன்படி, தற்போது ரூ. 200 கட்டணம் செலுத்தி, பெற்றோர் எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி அளித்து பெயரைச் சேர்த்துக் கொள்ளலாம். இதுவே இறுதி வாய்ப்பு என்றும், இதன் பின்னர் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Birth CertificateLast DateName Additionகடைசி நாள்தமிழ்நாடு அரசுபிறப்பு சான்றிதழ்பிறப்பு பதிவுபெயர் சேர்த்தல்பொது சுகாதாரம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசுகிறார் விஜய்யின் பேச்சுக்கு ஸ்டாலின் பதிலடி: அற்ப அரசியல் ஆதாயம் தேடவில்லை
Next Article ஆரோக்கியமான பப்பாளிப் பழம் நரம்பு இறுக்கத்தைத் தடுக்கும் அற்புதப் பழம்: பப்பாளி!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த செய்தியாளர் சந்திப்பு

பஞ்சாபில் பாஜக-அகாலி தளம் கூட்டணி: தேர்தல் பலன் கிடைக்குமா?

பஞ்சாபில் பாஜகவும் சிரோமணி அகாலி தளமும் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணி…

நவம்பர் 24, 2026

யானைகளை இடமாற்றம் செய்யக் கோரி காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா

கர்நாடகாவில் காட்டு யானைகள் தாக்கி 2 பேர்…

நவம்பர் 24, 2026

திருப்பதி உண்டியலில் ரூ.3.81 கோடி காணிக்கை: பக்தர்கள் பரவசம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரு நாள் உண்டியல்…

நவம்பர் 23, 2026

சிந்து நதி நீர் ஒப்பந்தம்: பேச்சுவார்த்தைக்கு தயார் – பாகிஸ்தான் அமைச்சர்

புதுடெல்லியில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில்…

நவம்பர் 23, 2026

இந்தியாவிற்கு வெளிநாட்டு முதலீடு தேவை: காங்கிரஸ்

இந்தியாவின் மூலதனச் சந்தைகளில் வெளிப்படைத்தன்மைக்கு பதிலாக வெளிநாட்டு…

நவம்பர் 22, 2026

You Might Also Like

முதலமைச்சர் விஜய் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்கிறார்
தமிழ்நாடு

பள்ளிகளில் காலை உணவு திட்டம்: முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்

தமிழக அரசுப் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று (22-ந்தேதி) தொடங்கி வைக்கிறார். லண்டன் பயணம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தற்போது…

1 Min Read
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் பேசுகிறார்
தமிழ்நாடு

யுபிஐ சேவைக்கு கட்டணம் இல்லை – நிர்மலா சீதாராமன் உறுதி

யுபிஐ சேவைக்கு கட்டணம் இல்லை - நிர்மலா சீதாராமன் உறுதி. இந்தியர்கள் எந்தவித பரிவர்த்தனைக் கட்டணமும் செலுத்தாமல் இந்த உடனடி டிஜிட்டல் சேவையைத் தொடர்ந்து பயன்படுத்துவார்கள் என…

2 Min Read
தமிழக பட்ஜெட் அறிவிப்பை வெளியிடும் அமைச்சர்
தமிழ்நாடு

தமிழக பட்ஜெட்: கிராமப்புற பெண்களுக்கு இலவச கறவை மாடுகள் அறிவிப்பு

தமிழக பட்ஜெட்டில் கிராமப்புற பெண்களுக்கு ஆண்டுதோறும் 10,000 இலவச கறவை மாடுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருமண உதவி, முதியோர் நலன், தாய்மார்களுக்கு தங்க மோதிரம்…

1 Min Read
முதலமைச்சர் விஜய் மதுரை விமான நிலையத்தில் வரவேற்பை ஏற்றுக்கொள்கிறார்
தமிழ்நாடு

மதுரைக்கு முதல்வர் விஜய் வருகை: ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தொடக்கம்

முதலமைச்சர் விஜய் இன்று மதுரை வருகை தந்து, 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை தொடங்கி வைக்கிறார். மேலும், காந்தி அருங்காட்சியகத்தை திறந்து வைத்து, மீனாட்சி அம்மன் கோயிலிலும்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?