இதயம் காக்கும் பீட்ரூட்: ஆரோக்கிய நன்மைகள் ஏராளம்!

நம் அன்றாட உணவில் இடம்பெறும் காய்கறிகள் உடலுக்குத் தேவையான பல்வேறு விட்டமின்களை வழங்குகின்றன. அந்த வகையில், பீட்ரூட் மறதியைக் குறைப்பது, பிறப்புக் குறைபாடுகளின் ஆபத்தைக் குறைப்பது, எலும்புகளை வலுப்படுத்துவது, இரும்புச்சத்து குறைபாட்டை நீக்குவது, குடல் மற்றும் செரிமானத்திற்கு உதவுவது என பல நன்மைகளை அள்ளித் தருகிறது.

பீட்ரூட்டில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானதாகும். இது வீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், தமனிச் சுவர்களைச் சீரமைக்கவும், கெட்ட கொழுப்பைக் (LDL) குறைத்து நல்ல கொழுப்பை (HDL) அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும், பீட்ரூட்டில் அதிக அளவில் உள்ள ஆன்டி ஆக்சிடெண்ட் பண்புகள் இதயம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கின்றன.

விலை மலிவான பூண்டில் அழற்சி எதிர்ப்பு பண்புகளும், கெட்ட கொழுப்பைக் குறைக்கும் தன்மையும் உள்ளன. இது இயற்கையான முறையில் இரத்தத்தை மெலிதாக்கும் பொருளாகவும் செயல்படுகிறது. ஆர்கானிக் தேநீரில் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் ஆற்றல் மிக்க பண்புகள் உள்ளன. இது தமனிகளில் பிளேக் உருவாவதைத் தடுக்கிறது.

திராட்சை, மாதுளை, பெர்ரி போன்ற பழங்களில் அதிக ஆன்டி ஆக்சிடெண்ட் உள்ளது. வைட்டமின் ஈ நிறைந்த சூரியகாந்தி விதைகள், வேர்க்கடலை, பாதாம், எள் போன்றவையும் தமனிகளைச் சீரமைக்கப் பயன்படுகின்றன. தேங்காய் எண்ணெய், பசு நெய், கடுகு எண்ணெய் போன்றவை நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து, வீக்கத்தை எதிர்த்துப் போராட உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version