MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: கால் விரல்கள் போனது, பணமில்லை: பாவா லட்சுமணன் உருக்கமான பேட்டி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கால் விரல்கள் போனது, பணமில்லை: பாவா லட்சுமணன் உருக்கமான பேட்டி

தமிழ்நாடு

கால் விரல்கள் போனது, பணமில்லை: பாவா லட்சுமணன் உருக்கமான பேட்டி

Admin
Last updated: ஜூன் 30, 2026 11:04 காலை
Admin
Share
SHARE

தமிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்கள் இருந்தாலும், இவரின் நகைச்சுவைக்கு தனி வரவேற்பு உண்டு. வடிவேலுடன் இவர் நடித்த 'மாயி' படத்தின் காமெடி காட்சிகள் இன்றும் பலரால் ரசிக்கப்படுகிறது. 'வாம்மா மின்னல்' என இவர் அடித்த காமெடி பலரின் ஃபேவரைட். யாருக்காவது ஜாமீன் கிடைக்கவில்லை என்றால், 'வாளமீன் இருக்குங்குறாங்க வஞ்சிர மீன் இருக்குங்குறாங்க. ஆனா, ஜாமீன் மட்டும் இல்லைங்குறாங்க' என்ற இவரது வசனத்தை மீம்ஸ்களாக நெட்டிசன்கள் வைரலாக்குவார்கள்.

அப்படிப்பட்ட நடிகர் பாவா லட்சுமணன் தற்போது நீரிழிவு நோயாலும், பொருளாதார நெருக்கடியாலும் பாதிக்கப்பட்டு தவித்து வருகிறார். உடல்நலப் பிரச்சினையால் அவரது கால் விரல்களில் சில அகற்றப்பட்டதாகவும், இதனால் திரைப்பட வாய்ப்புகள் குறைந்ததாகவும் அவர் பல்வேறு பேட்டிகளில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒரு விபத்துக்குப் பிறகு ஏற்பட்ட தொற்று காரணமாக காலில் பாதிப்பு ஏற்பட்டதாகவும், தன்னால் நடக்க முடியாது என்ற வதந்தி பரவியதால் வாய்ப்புகள் குறைந்ததாகவும் பாவா லட்சுமணன் கூறியிருந்தார்.

தற்போது நிரந்தரமாக தங்குவதற்கு வீடுகூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவ செலவுகளை சமாளிக்க முடியாமல் தவித்து வருவதாகவும் அவர் கண்ணீருடன் தெரிவித்திருந்தார். அவரது நிலை குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து பலரும் உதவிக்கரம் நீட்டத் தொடங்கினர். முக்கியமாக, லெஜண்ட் சரவணன் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். இது திரையுலகில் வரவேற்பைப் பெற்றுள்ளது. மருத்துவச் செலவுகளுக்காக வழங்கப்பட்ட இந்தத் தொகை, தற்போது சிகிச்சை பெற்று வரும் பாவா லட்சுமணனுக்கு உடனடி உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

குடும்பத்தைப் பற்றி பேசிய அவர், 'எனக்குத் திருமணமே ஆகவில்லை; ஒருவேளை மனைவி, பிள்ளைகள் என்று குடும்பம் இருந்திருந்தால் நான் ஏன் மற்றவர்களிடம் கையேந்தி உதவி கேட்கப் போறேன்? எனக்கு இருக்கும் ஒரேயொரு அக்காவும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பொருளாதார வசதியுடன் இல்லை. வேறு வழியின்றி திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் எனக்கு ஏதாவது உதவி செய்ய மாட்டார்களா என்று ஆவலோடு எதிர்பார்க்கிறேன்' எனத் தனது தற்போதைய வறுமை நிலை மற்றும் தனிமை குறித்து உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:உதவிதமிழ் சினிமாநடிகர்நடிகர் நலன்பாவா லட்சுமணன்லெஜண்ட் சரவணன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு: இன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு
Next Article கேரளாவில் எலிக்காய்ச்சல்: 2 பேர் பலி, 9 பேருக்கு தீவிர சிகிச்சை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அயோத்தி ராமர் கோவில்

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட…

ஜூலை 5, 2026

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு: நீச்சல் குளங்களுக்கு தடை

பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையால் அணைகளில் நீர்…

ஜூலை 5, 2026

சனந்த் செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

குஜராத்தின் சனந்தில் புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர்…

ஜூலை 5, 2026

You Might Also Like

தமிழ்நாடு

திருநெல்வேலி – சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கம்!

திருநெல்வேலி - சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. ஜூலை மாதத்தில் குறிப்பிட்ட தேதிகளில் இயக்கப்படும் இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது.

1 Min Read
தமிழ்நாடு

50 லட்சம் நகை கொள்ளை: 3 பெண்கள் கைது, 42 பவுன் நகை மீட்பு

சென்னையில் அடகு கடைக்குள் புகுந்து 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளைக் கொள்ளையடித்த 3 பெண்கள் கைது. 42 பவுன் நகை, 7 கிலோ வெள்ளி மீட்பு.

1 Min Read
சினிமா

இயக்குனர் பாக்யராஜ் திடீர் மரணம்: திரையுலகம் அதிர்ச்சி

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் பாக்யராஜ், திடீர் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 Min Read
தமிழ்நாடு

தூத்துக்குடியில் 2.2 கிலோ கஞ்சா பறிமுதல்; 3 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 2 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?