MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பாபர் அசாம் புதிய சாதனை: இம்ரான் கான் சாதனையை சமன் செய்தார்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பாபர் அசாம் புதிய சாதனை: இம்ரான் கான் சாதனையை சமன் செய்தார்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - பாபர் அசாம் புதிய சாதனை: இம்ரான் கான் சாதனையை சமன் செய்தார்

விளையாட்டு

பாபர் அசாம் புதிய சாதனை: இம்ரான் கான் சாதனையை சமன் செய்தார்

Sri Prem Kumar R
Last updated: ஆகஸ்ட் 2, 2026 7:56 மணி
Sri Prem Kumar R
Share
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம்
SHARE

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியை வழிநடத்துவதன் மூலம், கேப்டனாக தனது 150-வது சர்வதேச போட்டியில் பாபர் அசாம் களமிறங்குகிறார். இந்த முக்கியத்துவம் வாய்ந்த போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் ஆகஸ்ட் 2 முதல் 6 வரை நடைபெறுகிறது.

பாகிஸ்தான் அணி கண்டிப்பாக வெல்ல வேண்டிய இந்த ஆட்டத்தில், லாகூரைச் சேர்ந்த 32 வயதான பாபர் அசாம் ஒரு புதிய சாதனையுடன் வரலாற்றுப் பக்கங்களில் இடம்பெற உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 150 போட்டிகளில் பாகிஸ்தான் அணியை வழிநடத்திய மூன்றாவது கேப்டன் என்ற பெருமையை இதன் மூலம் அவர் பெறுகிறார்.

இவருக்கு முன்பாக, இம்ரான் கான் மற்றும் மிஸ்பா-உல்-ஹக் ஆகிய இருவர் மட்டுமே பாகிஸ்தான் அணியை 150 அல்லது அதற்கு மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் வழிநடத்தி கேப்டன்களாக சாதனை படைத்துள்ளனர். 1992-ல் பாகிஸ்தான் அணிக்கு ஒருநாள் உலகக் கோப்பையை வென்று தந்த இம்ரான் கான், சர்வதேச போட்டிகளில் அதிகமுறை அந்நாட்டை வழிநடத்திய கேப்டனாக முதலிடத்தில் உள்ளார். அவர் 1982 முதல் 1992 வரையிலான காலகட்டத்தில் 187 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார்.

அதேவேளையில் மிஸ்பா-உல்-ஹக் 2008 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் 151 போட்டிகளில் அணியை வழிநடத்தியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சர்வதேச போட்டிகளில் அணியை வழிநடத்திய கேப்டன்களின் பட்டியலில் இம்ரான் கான் 187 போட்டிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து மிஸ்பா-உல்-ஹக் 151 போட்டிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

பாபர் அசாம் இதுவரை 149 போட்டிகளில் (21 டெஸ்ட், 43 ஒருநாள், 85 டி20) கேப்டனாகச் செயல்பட்டு மூன்றாவது இடத்தில் நீடிக்கிறார். இவர்களுக்கு அடுத்தப்படியாக வாசிம் அக்ரம் 134 போட்டிகளிலும், இன்சமாம்-உல்-ஹக் 119 போட்டிகளிலும், சர்பராஸ் அகமது 100 போட்டிகளிலும் பாகிஸ்தான் அணியை வழிநடத்தியுள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் கேப்டனாக இதுவரை 6820 ரன்கள் குவித்துள்ள பாபர் அசாம், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்னும் 180 ரன்கள் எடுத்தால், கேப்டனாக 7000 ரன்களைக் கடந்த இரண்டாவது பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையைப் படைப்பார். பாகிஸ்தான் கேப்டனாக அதிக ரன்கள் குவித்த சாதனையை மிஸ்பா தன்னிடம் வைத்துள்ளார். கேப்டனாக விளையாடிய 151 போட்டிகளில், 189 இன்னிங்ஸ்களில் மொத்தம் 7392 ரன்களைக் குவித்து மிஸ்பா தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.

கேப்டனாக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த பாகிஸ்தான் வீரர்களின் பட்டியலில் மிஸ்பா-உல்-ஹக் 151 போட்டிகளில் 7392 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். பாபர் அசாம் 149 போட்டிகளில் 15 சதங்களுடன் 6820 ரன்கள் குவித்து இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இவர்களைத் தொடர்ந்து இம்ரான் கான் 187 போட்டிகளில் 5655 ரன்களுடனும் அத்துடன் கேப்டனாக 318 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் ஒரு அணியை கேப்டனாக வழிநடத்திச் சென்ற உலக சாதனை இந்தியாவின் மகேந்திர சிங் தோனி வசமே உள்ளது. தோனி 2007 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில், மூன்று வகை கிரிக்கெட்டிலும் சேர்த்து இந்திய அணியை மொத்தம் 332 போட்டிகளில் கேப்டனாக வழிநடத்தியுள்ளார்.

Author

Sri Prem Kumar R

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Babar AzamCaptain RecordImran KhanPakistan Cricketஇம்ரான் கான்கேப்டன் சாதனைபாகிஸ்தான் கிரிக்கெட்பாபர் அசாம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நீட் தேர்வை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது நீட் எதிர்ப்பு மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: தமிழக அரசு அதிரடி
Next Article நடிகர் கார்த்தி மற்றும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கார்த்தியின் 30வது படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பாளர்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

விநாயகர் சிலை கரைக்கும் நிகழ்வு

விநாயகர் சிலை கரைப்பில் சோகம்: மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி

மத்திய பிரதேசத்தில் விநாயகர் சிலை கரைக்கும் போது மின்சாரம் பாய்ந்து 4 பேர்…

செப்டம்பர் 27, 2026

உத்தரகண்டில் ஆதரவற்ற முஸ்லிம் பெண்களுக்கு இலவச வீடு: அரசு முடிவு

முத்தலாக், நிக்காஹ் ஹலாலா போன்ற நடைமுறைகளால் பாதிக்கப்பட்ட…

செப்டம்பர் 27, 2026

காங்கிரஸ்-பாஜக கூட்டணி: பினராயி விஜயன் குற்றச்சாட்டு

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மீது போலீஸ்…

செப்டம்பர் 27, 2026

மாதா அமிர்தானந்தமயி பிறந்தநாள் விழா தொடக்கம்: சி.பி.ராதாகிருஷ்ணன், அமித் ஷா பங்கேற்பு

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் அம்ரிதபுரியில் அம்ரிதா…

செப்டம்பர் 27, 2026

தலைமைக் காவலரை சுட்டுக் கொன்ற மகன் கைது

சண்டிகர் காவல் துறை தலைமையகத்தில் தலைமைக் காவலராகப்…

செப்டம்பர் 27, 2026

You Might Also Like

விளையாட்டு

இந்தியா vs ஆப்கானிஸ்தான்: ஆட்டம் முன்பே இந்தியாவிற்கு 5 ரன்கள் போனஸ்!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணிக்கு ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே 5 பெனால்டி ரன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால், இந்திய அணி 5-0 என்ற கணக்கில்…

1 Min Read
விளையாட்டு

ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை: தோனி ஆடாமல் வெளியேறிய சிஎஸ்கே!

ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக, எம்.எஸ்.தோனி 2026 சீசனில் எந்த போட்டியிலும் விளையாடாமல் வெளியேறியுள்ளார். சிஎஸ்கே அணியின் தோல்வி அவருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

2 Min Read
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்
விளையாட்டு

கே.எல். ராகுல் துணை கேப்டன்? பிசிசிஐயின் புதிய வியூகம்!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கே.எல். ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு. ஸ்ரேயாஸ் ஐயர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதால் இந்த மாற்றம்.

2 Min Read
கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் திருமண புகைப்படங்கள்
விளையாட்டு

ரொனால்டோ – ஜார்ஜினா: திருமணத்தின் போதே விவாகரத்து ஒப்பந்தம்!

கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, காதலி ஜார்ஜினா ரோட்ரிக்ஸை ரகசிய திருமணம் செய்துகொண்டார். விவாகரத்து ஏற்பட்டால் சொத்து பிரிவினை, ஜீவனாம்சம் குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?