MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பொது இடங்களில் குப்பை வீசினால் அபராதம்: அவிநாசி நகராட்சி எச்சரிக்கை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பொது இடங்களில் குப்பை வீசினால் அபராதம்: அவிநாசி நகராட்சி எச்சரிக்கை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - பொது இடங்களில் குப்பை வீசினால் அபராதம்: அவிநாசி நகராட்சி எச்சரிக்கை

தமிழ்நாடு

பொது இடங்களில் குப்பை வீசினால் அபராதம்: அவிநாசி நகராட்சி எச்சரிக்கை

Fernandez
Last updated: செப்டம்பர் 19, 2026 11:40 காலை
Fernandez
Share
அவிநாசி நகராட்சி ஆணையர் பாலமுருகன் ஆய்வு செய்யும் காட்சி
அவிநாசி நகராட்சி திடக்கழிவு மேலாண்மை வள மீட்பு பூங்காவை ஆய்வு செய்யும் ஆணையர் பாலமுருகன்.
SHARE

அவிநாசி நகராட்சியில் பொது இடங்களில் குப்பைகளை வீசுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையர் பாலமுருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தூய்மையான நகராட்சியை உருவாக்கும் நோக்கில், திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026-ஐ சிறப்பாக செயல்படுத்தும் வகையில், குப்பைகளை நான்கு வகைகளாகப் பிரித்து சேகரிக்கும் புதிய நடைமுறை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அவிநாசி நகராட்சி ஆணையர் பாலமுருகன், தூய்மைப் பணியாளர்கள் பொதுமக்களிடமிருந்து சேகரித்த மக்கும் குப்பை, மக்காத குப்பை ஆகியவற்றை அவிநாசி திடக்கழிவு மேலாண்மை வள மீட்பு பூங்காவில் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, நகராட்சி சுகாதார ஆய்வாளர் அரவிந்தன், சுகாதார மேற்பார்வையாளர்கள் கோமதி, சிவசங்கர், மாதையன் ஆகியோர் உடனிருந்தனர்.

ஆய்வின்போது பேசிய ஆணையர் பாலமுருகன், அவிநாசி நகராட்சியை தூய்மையான நகராட்சியாக மாற்ற பொதுமக்கள் குப்பைகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து வழங்க வேண்டும் என்றும், பொது இடங்களில் குப்பைகளை வீசினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை விதிகள் அமலுக்கு வந்துள்ளதாகவும், அதன்படி குப்பைகளை மூலத்திலேயே நான்கு வகையாகப் பிரிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்படி, ஈரக் கழிவுகளான சமையலறை கழிவுகள், காய்கறி மற்றும் பழத்தோல்கள்; உலர் கழிவுகளான பிளாஸ்டிக், காகிதம், உலோகம், கண்ணாடி; சுகாதாரக் கழிவுகளான டயப்பர்கள், சானிட்டரி நாப்கின்கள்; மற்றும் சிறப்பு பராமரிப்புக் கழிவுகளான பியூஸ் போன பல்புகள், டியூப் லைட்டுகள், பேட்டரிகள், காலாவதியான மருந்துகள் போன்றவற்றை தனித்தனியாகப் பிரித்து வழங்க வேண்டும். குப்பைகள் சேகரிக்கப்படுவது முதல் முறையாக அழிக்கப்படுவது வரை ஒன்றிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளம் மூலம் கண்காணிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

புதிய விதிகளின் அடிப்படையில், வீடுகள், வணிகப் பகுதிகள், பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள், சந்தைப் பகுதிகள், தெருவோர வியாபாரிகள் என அனைவரும் நகராட்சியின் குப்பை வாகனங்களில் மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதாரக் குப்பை, சிறப்பு பராமரிப்பு குப்பை (அபாயகரமான குப்பை) என நான்கு வகைகளாகப் பிரித்து குப்பைகளைக் கொடுக்க வேண்டும். குப்பைகளைப் பிரித்துக் கொடுக்காத வீடுகள் மற்றும் வணிகப் பகுதிகளிலிருந்து குப்பைகள் பெறப்படாது என்றும், இந்த விதிகளை மீறுவோருக்கு நகராட்சி மூலம் கடும் அபராதம் விதிக்கப்படும் என்றும் ஆணையர் பாலமுருகன் கூறினார்.

மேலும், கழிவுநீர் கால்வாய்கள், பொது இடங்கள், தெருக்கள், அனைத்து மத வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ள பகுதிகள், ஆறுகள், நீர்நிலைப் பகுதிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் குப்பைகளை வீசக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். பொதுக்கழிப்பிடங்கள் மற்றும் சமுதாயக் கழிப்பிடங்களில் புகைப்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளதுடன், மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

அவிநாசி நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் உள்ள வீடுகளில் பொதுமக்கள் குப்பைகளை நான்கு வகைகளாகச் சரியாகத் தரம் பிரித்துக் கொடுத்தால், அவர்களுக்கு சிறப்புப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்படும் என ஆணையர் அறிவித்தார். குப்பைகளை வகைகளாகப் பிரித்துத் தருவதை மேற்கொள்ளும் மாணவ, மாணவிகள் அந்தந்தப் பகுதியின் தூய்மைத் தூதுவர்களாக நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே, குப்பைகளை ஒன்றாகக் கலக்காமல், நான்கு வகைகளாகப் பிரித்து வழங்கி, அவிநாசி நகராட்சியைத் தூய்மையான நகராட்சியாக மாற்ற பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆணையர் பாலமுருகன் கேட்டுக்கொண்டார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Avinashi MunicipalityFine for LitteringWaste Managementஅவிநாசி நகராட்சிகுப்பை அபராதம்திடக்கழிவு மேலாண்மைதூய்மை இந்தியாபாலமுருகன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article மத்திய பிரதேசத்தில் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கத்தின் அறிவிப்பு பலகை மத்திய பிரதேசம்: ₹2000க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு தடை – பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவிப்பு
Next Article ஆஸ்திரேலிய கிரிக்கெட் கேப்டன் பேட் கம்மின்ஸ் புஜாராதான் கடினமான பேட்டர் – பேட் கம்மின்ஸ்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

தமிழக சட்டசபையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும் காட்சி
தமிழ்நாடு

சட்டசபையில் இயக்குநர் பாக்யராஜ், எஸ்.ஜானகி உள்ளிட்டோருக்கு இரங்கல்

தமிழக சட்டசபையில் இயக்குநர் கே.பாக்யராஜ், பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி உள்ளிட்ட மறைந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இந்த இரங்கல் தீர்மானத்தை அவை முன்னவர் முன்மொழிந்தார்.

2 Min Read
தஞ்சாவூர் அரசு நெல் சேமிப்புக் கிடங்கு
தமிழ்நாடு

தஞ்சாவூர் நெல் கிடங்கு விபத்து: பெண் தொழிலாளி பலி, பாதுகாப்பு கேள்விக்குறி

தஞ்சாவூரில் அரசு நெல் சேமிப்புக் கிடங்கில் மூட்டைகள் சரிந்து பெண் தொழிலாளி சின்னபொண்ணு உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார். பாதுகாப்பு குறைபாடு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

1 Min Read
இன்றைய ராசிபலன் கணிப்பு
தமிழ்நாடு

08-09-2026 இன்றைய ராசிபலன்: பொருளாதாரம் மேம்படும், தைரியம் பெருகும்

08-09-2026 இன்றைய ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி இருக்கும்? பொருளாதாரம், தைரியம், மன அமைதி பற்றிய கணிப்புகள்.

4 Min Read
மயிலாடுதுறை தேரெழுந்தூர் வேதபுரீஸ்வரர் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட ராஜராஜன் கால கல்வெட்டு
தமிழ்நாடு

மயிலாடுதுறை: ராஜராஜன் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

மயிலாடுதுறை தேரெழுந்தூர் வேதபுரீஸ்வரர் கோவிலில் முதலாம் ராஜராஜன் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது அக்காலகட்டம் குறித்த முக்கிய தகவல்களை வெளிக்கொணரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?