ஆகஸ்ட் 19, 2026 இன்றைய ராசிபலன்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்க வாய்ப்புள்ளது. சிலர் கட்டளையிடும் உயர் பதவிகளைப் பெறுவார்கள்.
மேஷம் ராசிக்காரர்களுக்கு, இன்று நீங்கள் திட்டமிடும் காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றி, அதன் மூலம் மதிப்பையும் மரியாதையையும் பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சிக்கலான சில விஷயங்களை உங்கள் சாதுரியமான பேச்சால் பேசி முடித்து விடுவீர்கள். தேவையற்ற பயத்தை தவிர்ப்பது நல்லது. உங்களுக்கு அதிர்ஷ்ட நிறங்களாக வெள்ளை, மஞ்சள், பச்சை நிறங்களும், அதிர்ஷ்ட எண்களாக 1, 3, 5ம் அமையும்.
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு, இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உத்தியோகஸ்தர்கள் தங்களது சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் திறம்பட செய்து முடித்து பாராட்டுகளைப் பெறுவார்கள். இளஞ்சிவப்பு, நீலம் நிறங்களும், 3, 6, 9 எண்களும் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும்.
மிதுனம் ராசிக்காரர்களுக்கு, இன்று குடும்பத்தில் உறவினர்களின் வருகை இருக்கும். தேவையற்ற வீண் பேச்சுகளை குறைப்பதன் மூலம் குடும்பத்தில் அமைதி நிலவும். வாழ்க்கை துணையின் ஆதரவு உங்களுக்கு உண்டு. பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடலாம். கோபத்தை தவிர்த்து, இனிமையாக பேசுவது நல்லது. ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் நிறங்களும், 1, 3, 5, 9 எண்களும் உங்களுக்கு அதிர்ஷ்டமானவை.
கடகம் ராசிக்காரர்களுக்கு, இன்று உங்கள் சாதுரியமான பேச்சின் மூலம் சிக்கலான பிரச்சனைகளையும் தீர்த்து விடுவீர்கள். பயணங்கள் செல்ல நேரிடலாம். குழந்தைகளின் மேல்கல்வியில் முன்னேற்றம் அடைய நீங்கள் பாடுபடுவீர்கள். உத்யோகம் தொடர்பான பயணங்களும் ஏற்படலாம். மஞ்சள், நீலம் நிறங்களும், 1, 3, 9 எண்களும் உங்களுக்கு சாதகமாக அமையும்.
சிம்மம் ராசிக்காரர்களுக்கு, இன்று ஒரு காரியத்தை செய்யும் முன்பு அது சரியா தவறா என்று பல முறை மனதுக்குள் கேள்வி எழுப்பி, பின்னர் ஒரு முடிவை எடுப்பது நல்லது. சொத்து சார்ந்த விஷயங்களில் எல்லா வகையிலும் நல்ல பலன் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். மஞ்சள், வெள்ளை நிறங்களும், 3, 6, 9 எண்களும் உங்களுக்கு அதிர்ஷ்டமானவை.
கன்னி ராசிக்காரர்களுக்கு, இன்று வீண் பிரச்சனைகளில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான மனக்கவலை தோன்றி மறையும். இருப்பினும், லாபம் நிச்சயம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் வாங்குவது தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு நிறங்களும், 6, 9 எண்களும் உங்களுக்கு உகந்தவை.
துலாம் ராசிக்காரர்களுக்கு, இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிலும் நிதானமாக செயல்படுவதும், மற்றவர்களை அனுசரித்து போவதும் நல்லது. குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்ற நபர் மீண்டும் வந்து சேர்வதால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கை துணைக்காக செலவு செய்ய நேரிடும். நீலம், பச்சை நிறங்களும், 2, 7 எண்களும் உங்களுக்கு அதிர்ஷ்டமானவை.
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு, இன்று கோபத்தைக் குறைத்து இனிமையாக பேசுவதன் மூலம் குடும்பத்தில் அமைதி உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல வேண்டியிருக்கலாம். எந்த காரியத்தையும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. அடுத்தவர்களுக்கு உதவி செய்யும்போது கவனம் தேவை. மஞ்சள், நீலம் நிறங்களும், 3, 5 எண்களும் உங்களுக்கு அதிர்ஷ்டமானவை.
தனுசு ராசிக்காரர்களுக்கு, இன்று நீங்கள் போட்டிருந்த திட்டங்களை நிதானமாக செயல்படுத்துவது நல்லது. அடுத்தவர்களிடம் பழகும்போது கவனம் தேவை. நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல், உங்கள் வழி தனி வழி என்று செயல்படுவீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். ஆரஞ்சு, வெள்ளை நிறங்களும், 1, 3, 9 எண்களும் உங்களுக்கு அதிர்ஷ்டமானவை.
மகரம் ராசிக்காரர்களுக்கு, இன்று நல்லது எது கெட்டது எது என்று பிரித்து பார்த்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில திருப்பங்களால் காரிய வெற்றி கிடைக்கும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் காண வாய்ப்புகள் வந்து சேரும். நிதானமாக பேசுவதன் மூலம் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். வெளிர் நீலம், மஞ்சள் நிறங்களும், 4, 6 எண்களும் உங்களுக்கு சாதகமானவை.
கும்பம் ராசிக்காரர்களுக்கு, இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலர் கட்டளையிடும் உயர் பதவிகளைப் பெறுவார்கள். குடும்பத்தில் திடீர் செலவு ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து, அதன் மூலம் அவர்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். மஞ்சள், பச்சை நிறங்களும், 3, 5 எண்களும் உங்களுக்கு அதிர்ஷ்டமானவை.
மீனம் ராசிக்காரர்களுக்கு, இன்று தம்பதிகளிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். வழக்குகளை தள்ளிப் போடுவதும், சமாதான முறையில் பேசி தீர்த்துக்கொள்வதும் நல்லது. தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வெள்ளை, பிரவுன் நிறங்களும், 2, 6 எண்களும் உங்களுக்கு அதிர்ஷ்டமானவை.

