ஆகஸ்ட் 13, 2026 இன்றைய ராசிபலன்கள்: இந்த நாளில் குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும் என்றும், கணவன் மனைவிக்கிடையே இருந்த மன வருத்தங்கள் நீங்கும் என்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
மேஷம் ராசிக்காரர்களுக்கு, இன்று நீங்கள் செய்த பணிகளை மற்றவர்கள் தங்களுக்கு உரியதாக கூறி நற்பெயர் எடுத்துக் கொள்ள வாய்ப்புள்ளது. எனவே, மிகுந்த கவனம் தேவை. வியாபாரத் துறையில் இருப்பவர்கள் லாபம் ஈட்டுவதில் அதிக கவனம் செலுத்துவார்கள். உடனிருப்பவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு, அதன்படி கவனமுடன் செயல்படுவது உங்களுக்கு நன்மை பயக்கும். வியாபாரம் தொடர்பான அலைச்சல்கள் ஏற்படக்கூடும். உங்களுக்கு அதிர்ஷ்ட நிறங்களாக வெண்மை, வெளிர் மஞ்சள், பச்சை நிறங்களும், அதிர்ஷ்ட எண்களாக 2, 7, 9 எண்களும் அமையும்.
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு, இன்று வெளியூர் பயணங்கள் மூலம் உங்களுக்கு லாபம் கிடைக்கும். லாபத்திற்காக காத்திருக்கும் விவசாயிகள் மகிழ்ச்சி அடையும் வகையில் விற்பனை அமையும். உங்களுடன் இருப்பவர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. மற்றவர்களை அனுசரித்துச் செல்வது உங்களுக்கு நன்மை தரும். வேலையில் திருப்தி உண்டாகும். பிள்ளைகளின் கல்வி மீது நீங்கள் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். உங்களுக்கு அதிர்ஷ்ட நிறங்களாக ஆரஞ்சு, வெளிர் பிரவுண் நிறங்களும், அதிர்ஷ்ட எண்களாக 1, 3, 9 எண்களும் அமையும்.
மிதுனம் ராசிக்காரர்களுக்கு, இன்று எந்த ஒரு காரியத்திலும் நீங்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். பெரியோர்களிடம் நற்பெயர் எடுத்து மகிழ்ச்சி காண்பீர்கள். உங்கள் மனம் தெளிவடையும். எல்லா வகையிலும் உங்களுக்கு நல்லதே நடக்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் அனைத்தும் விலகும். நண்பர்கள் மூலம் உங்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். நீங்கள் விரும்பிய காரியங்களை செய்து சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். உங்களுக்கு அதிர்ஷ்ட நிறங்களாக நீலம், மஞ்சள் நிறங்களும், அதிர்ஷ்ட எண்களாக 3, 9 எண்களும் அமையும்.
கடகம் ராசிக்காரர்களுக்கு, இன்று புதிய நபர்களின் அறிமுகம் உங்களுக்குக் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான காரியங்கள் உங்களுக்கு சாதகமாக நடந்து முடியும். வியாபாரத்தில் நிலவும் போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் அனைத்தும் வசூலாகும். தொழில் விரிவாக்கத்திற்குத் தேவையான பண உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள். உங்களுக்கு அதிர்ஷ்ட நிறங்களாக கருநீலம், மஞ்சள் நிறங்களும், அதிர்ஷ்ட எண்களாக 2, 5, 9 எண்களும் அமையும்.
சிம்மம் ராசிக்காரர்களுக்கு, இன்று குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது உங்களுக்கு மனதிற்கு திருப்தியைத் தரும். பிள்ளைகள் கேட்பதை வாங்கிக் கொடுத்து சந்தோஷம் காண்பீர்கள். இடம், வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். அதற்கான காரியங்களையும் நீங்கள் செய்ய ஆரம்பிப்பீர்கள். உங்களுக்கு அதிர்ஷ்ட நிறமாக நீலம் நிறமும், அதிர்ஷ்ட எண்களாக 5, 6 எண்களும் அமையும்.
கன்னி ராசிக்காரர்களுக்கு, இன்று பணவரத்து நீங்கள் எதிர்பார்த்தபடியே இருக்கும். நீங்கள் எடுத்த காரியங்களில் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். ஆன்மீகத்தில் உங்கள் நாட்டம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நீங்கள் நினைத்திருந்த ஆன்மீக தலங்களுக்குச் சென்று பலனடைவீர்கள். வெளியூர் பயணங்கள் உங்கள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். உங்களுக்கு அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும், அதிர்ஷ்ட எண்களாக 1, 5, 7 எண்களும் அமையும்.
துலாம் ராசிக்காரர்களுக்கு, இன்று புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். உங்கள் பணத்தேவைகள் பூர்த்தியாகும். வாகனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். மன நிம்மதி கிடைக்கும். காரிய வெற்றி உண்டாகும். நீண்ட நாட்களாக நீங்கள் நினைத்திருந்த காரியம் வெற்றி அடையும். மேலிடத்திலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். பண வரத்து உண்டாகும். புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது நல்லது. உங்களுக்கு அதிர்ஷ்ட நிறங்களாக வெண்மை, பச்சை நிறங்களும், அதிர்ஷ்ட எண்களாக 1, 3, 9 எண்களும் அமையும்.
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு, இன்று வியாபாரிகளுக்கு காரியத் தடைகள் ஏற்படலாம், எனவே கவனம் தேவை. காரிய அனுகூலம் இருந்தாலும், தாமதப்படும். எதிர்பார்த்த பணவரவு தாமதமாகவே கிடைக்கும். கூட்டுத் தொழில் மூலம் லாபம் அடைவீர்கள். கடின உழைப்பு உங்களுக்கு காரிய வெற்றியைத் தேடித்தரும். வெளியூர் சென்று வர நேரிடலாம். உங்களுக்கு அதிர்ஷ்ட நிறங்களாக வெண்மை, நீலம் நிறங்களும், அதிர்ஷ்ட எண்களாக 6, 9 எண்களும் அமையும்.
தனுசு ராசிக்காரர்களுக்கு, இன்று கெட்ட கனவுகளிலிருந்து நீங்கள் விடுபடலாம். மனதில் கவலை ஏற்பட்டு நீங்கும். எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும், காரியத் தடங்கல்கள் ஏற்படும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை. பயணத்தினால் வீண் செலவும், அலைச்சலும் உண்டாகும். சாதகமான பலன்கள் உண்டாகும். உங்களுக்கு அதிர்ஷ்ட நிறங்களாக பழுப்பு, வெளிர் நீலம் நிறங்களும், அதிர்ஷ்ட எண்களாக 5, 7 எண்களும் அமையும்.
மகரம் ராசிக்காரர்களுக்கு, இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். புதிய ஆர்டர்கள் தொடர்பாக அலையும்படி இருந்தாலும், அவை சாதகமாக முடியும். பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பணிகளில் முழுமூச்சுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். உங்களுக்கு அதிர்ஷ்ட நிறங்களாக வெள்ளை, மஞ்சள் நிறங்களும், அதிர்ஷ்ட எண்களாக 2, 5, 7 எண்களும் அமையும்.
கும்பம் ராசிக்காரர்களுக்கு, இன்று பயணங்களின் போது உங்கள் உடமைகளை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கும். குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்களை செயல்படுத்துவீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்துடன் வெளியூர் சென்று வருவீர்கள். உங்களுக்கு அதிர்ஷ்ட நிறங்களாக மஞ்சள், ஆரஞ்சு நிறங்களும், அதிர்ஷ்ட எண்களாக 1, 3 எண்களும் அமையும்.
மீனம் ராசிக்காரர்களுக்கு, இன்று மற்றவர்களின் பொறுப்புகளை ஏற்பதை தவிர்ப்பது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகலாம். எந்த காரியத்தையும் ஆலோசித்து செய்வது நல்லது. ஆன்மீகப் போக்கு மனதிற்கு நிம்மதியைத் தரும். மேலிடத்தில் கணிசமான ஆதரவைப் பெறுவீர்கள். அதேசமயம் தொண்டர்கள் உங்களிடம் சற்று பாராமுகமாகவே நடந்து கொள்வார்கள். உங்களுக்கு அதிர்ஷ்ட நிறங்களாக மஞ்சள், பச்சை நிறங்களும், அதிர்ஷ்ட எண்களாக 2, 5, 9 எண்களும் அமையும்.

