மக்கள் மத்தியில் நற்பெயர் பெற்ற அருண் ஐபிஎஸ் மீது அவதூறு பரப்பியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பணியில் சேர்ந்தது முதல் துணிச்சலாகவும், நேர்மையாகவும் செயல்பட்டு வரும் அருண் ஐபிஎஸ், குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறார். இருப்பினும், தனது சமூக வலைதளப் பக்கங்களில் சவுக்கு சங்கர் தொடர்ந்து அருண் ஐபிஎஸ் குறித்து பொய்யான தகவல்களையும், அவதூறான செய்திகளையும் பரப்பி வருவதாக கூறப்படுகிறது. வீடியோக்கள் மூலமாகவும் இவர் அவதூறு பிரசாரத்தை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையாகவும், நேர்மையாகவும் பணியாற்றி வரும் அருண் ஐபிஎஸ் மீது மக்கள் மத்தியில் ஒரு தவறான பிம்பத்தை கட்டமைக்கும் நோக்கில் சவுக்கு சங்கர் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக, அருண் ஐபிஎஸ் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளது. சவுக்கு சங்கரின் தொடர்ச்சியான அவதூறு பிரச்சாரத்தால், அருண் ஐபிஎஸ்-ன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. நேர்மையான அதிகாரிகளுக்கு எதிரான இதுபோன்ற செயல்கள் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.
சவுக்கு சங்கர் மீது அருண் ஐபிஎஸ் வழக்கு
