MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: இடுக்கு பிள்ளையார் கோவில் குகையில் சிக்கி பக்தர் உயிரிழப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: இடுக்கு பிள்ளையார் கோவில் குகையில் சிக்கி பக்தர் உயிரிழப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - இடுக்கு பிள்ளையார் கோவில் குகையில் சிக்கி பக்தர் உயிரிழப்பு

தமிழ்நாடு

இடுக்கு பிள்ளையார் கோவில் குகையில் சிக்கி பக்தர் உயிரிழப்பு

Fernandez
Last updated: ஜூலை 25, 2026 4:54 மணி
Fernandez
Share
திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோவில் குகை பகுதி
திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோவில் குகைப் பகுதி
SHARE

திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோவிலில் உள்ள குறுகிய குகைப் பாதையில் உடல் பருமன் காரணமாக சிக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆந்திர மாநில பக்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள இடுக்கு பிள்ளையார் கோவிலில், பக்தர்கள் வழிபடுவதற்கு ஒரு சிறிய குகை போன்ற அமைப்பு உள்ளது. இந்த குகையில் மூன்று வாசல்கள் அமைந்துள்ளன. பக்தர்கள் பின் வாசல் வழியாக படுத்தவாறு உள்ளே நுழைந்து, கைகளை ஊன்றியவாறு மெதுவாக நகர்ந்து முன் வாசல் வழியாக வெளியே வர வேண்டும். குகைப் பகுதியிலிருந்து வெளியே வந்தவுடன் நந்தி பகவான் தரிசனம் கிடைக்கும். பக்தர்கள் நந்தியம் பெருமானையும், இடுக்கு பிள்ளையாரையும் தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். தினந்தோறும் ஏராளமான பக்தர்கள், குறிப்பாக கிரிவலம் செல்பவர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து இந்தக் குகைப் பாதையில் நுழைந்து, சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இந்நிலையில், நேற்று இரவு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மணிக்குமார் (வயது 36) என்பவர் தனது குடும்பத்தினருடன் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல வந்துள்ளார். இடுக்கு பிள்ளையார் கோவிலுக்கு வந்த அவர், வழக்கம்போல் குகை வடிவத்தில் உள்ள கோவில் பகுதிக்குள் படுத்தவாறு நுழைந்துள்ளார். ஆனால், அவருக்கு உடல் எடை அதிகமாக இருந்ததால், குகையின் குறுகிய பாதையில் இருந்து அவரால் வெளியே வர முடியவில்லை. இதனால், அவர் குகைக்குள்ளேயே சிக்கிக்கொண்டார். சிறிது நேரத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்த அவரை, அங்கிருந்த சக பக்தர்கள் போராடி குகைக்குள் இருந்து வெளியே கொண்டு வந்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மணி குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த துயரச் சம்பவம் குறித்து திருவண்ணாமலை தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Andhra PradeshDevotee DeathIdukku Pillaiyar TempleThiruvannamalaiஆந்திராஇடுக்கு பிள்ளையார் கோவில்திருவண்ணாமலைபக்தர் உயிரிழப்புமணிக்குமார்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article புதிய மின்சார பைக்குகள் 500 கி.மீ ரேஞ்ச்: அசத்தும் புதிய மின்சார பைக்குகள் லிஸ்ட்!
Next Article கிழக்கு ஆப்ரிக்காவில் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட ஒட்டகங்கள் காலநிலை மாற்றத்தால் உயிரிழக்கும் ஒட்டகங்கள்: கிழக்கு ஆப்ரிக்காவில் அதிர்ச்சி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் திறப்பு குறித்த அறிவிப்பு

டெல்லி மெட்ரோ நிலையங்கள் திறப்பு: மாணவர்கள் போராட்டம் வாபஸ்

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டிருந்த டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்கள், மாணவர்கள் போராட்டத்தை வாபஸ்…

ஜூலை 25, 2026

யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் சாரநாத்: பிரதமர் மோடி பெருமிதம்

பௌத்த மதத்தினரின் புனித தலமான சாரநாத், யுனெஸ்கோ…

ஜூலை 25, 2026

மத்திய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி நியமனம்

மத்திய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.…

ஜூலை 25, 2026

தர்மேந்திர பிரதான் பதவி விலகல்: பாஜக புகழாரம்

பொது வாழ்வில் நேர்மை மற்றும் தன்னலமற்ற சேவையின்…

ஜூலை 25, 2026

தர்மேந்திர பிரதான் ராஜினாமா: டெல்லியில் இளைஞர்கள் கொண்டாட்டம்

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்த…

ஜூலை 25, 2026

You Might Also Like

பெரம்பலூர் அருகே தீப்பற்றி எரிந்த ஆம்னி பஸ்
தமிழ்நாடு

பெரம்பலூர் ஆம்னி பஸ் தீ விபத்து: பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்

பெரம்பலூர் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பஸ்ஸில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 20க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பஸ்ஸும் முழுவதுமாக எரிந்து…

1 Min Read
தி.மு.க எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்
தமிழ்நாடு

விஜயை ஒருமையில் விமர்சித்த அனிதா ராதாகிருஷ்ணன்: பரபரப்பு

தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தி.மு.க எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் முதலமைச்சர் விஜயை ஒருமையில் விமர்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுவதாகவும் அவர் கூறினார்.

1 Min Read
தமிழ்நாடு

இயக்குநர் பாக்யராஜ் காலமானார்: திரையுலகம் அதிர்ச்சி

பிரபல இயக்குநர், நடிகர் கே. பாக்யராஜ் (73) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவரது மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

அம்மா உணவகத்தில் ஆய்வு: அமைச்சர் வன்னி அரசுக்கு ஊழியர்கள் புகார்

சென்னையில் அம்மா உணவகத்தில் உணவு அருந்திய அமைச்சர் வன்னி அரசு, ஊழியர்களின் குறைகளை கேட்டறிந்தார். காய்கறிகள் முறையாக வழங்கப்படுவதில்லை என ஊழியர்கள் புகார் தெரிவித்தனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?