MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 96 ஆண்டுகளுக்குப் பிறகு அர்ஜென்டினா – ஸ்பெயின் இறுதிப்போட்டி!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 96 ஆண்டுகளுக்குப் பிறகு அர்ஜென்டினா – ஸ்பெயின் இறுதிப்போட்டி!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - 96 ஆண்டுகளுக்குப் பிறகு அர்ஜென்டினா – ஸ்பெயின் இறுதிப்போட்டி!

விளையாட்டு

96 ஆண்டுகளுக்குப் பிறகு அர்ஜென்டினா – ஸ்பெயின் இறுதிப்போட்டி!

Sri Prem Kumar R
Last updated: ஜூலை 19, 2026 10:40 காலை
Sri Prem Kumar R
Share
அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் கால்பந்து அணிகள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் மோதுதல்
உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா - ஸ்பெயின் அணிகள் மோதல்
SHARE

96 ஆண்டுகளுக்குப் பிறகு, ஸ்பானிஷ் மொழி பேசும் இரு பெரும் நாடுகள் உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளன. 1930-ம் ஆண்டு முதல் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் உருகுவே மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதிய பிறகு, இதுவே முதல் முறையாகும்.

23வது உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில், அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகளில் யார் சாம்பியன் பட்டத்தை வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. நடப்பு ஃபிஃபா உலகக் கோப்பை சாம்பியனான அர்ஜென்டினா மற்றும் யூரோ 2024 சாம்பியனான ஸ்பெயின் அணிகள், உலகக் கோப்பை மகுடத்தை கைப்பற்றுவதற்காக அமெரிக்காவின் நியூயார்க்/நியூ ஜெர்சி மைதானத்தில் இன்று மோதுகின்றன. இந்திய நேரப்படி ஜூலை 20 அதிகாலை 12.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம், உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் உலகக் கோப்பையை வெல்லும் இலக்குடன் ஸ்பெயின் களமிறங்குகிறது. மறுபுறம், நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா தொடர்ந்து இரண்டாவது முறையாக பட்டத்தை வென்று தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் முனைப்பில் உள்ளது.

அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக ஆரம்பத்தில் பின்தங்கியிருந்த அர்ஜென்டினா, பின்னர் சிறப்பாக மீண்டு வந்து 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. என்சோ பெர்னாண்டஸ் சமநிலை கோலை அடித்தார். கூடுதல் நேரத்தின் இறுதி நிமிடங்களில் லவுடாரோ மார்ட்டினஸ் அடித்த வெற்றி கோல், அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றது. இதன் மூலம் 1966-க்கு பிறகு முதல் முறையாக உலகக் கோப்பை இறுதிப்போட்டியை அடைய வேண்டும் என்ற இங்கிலாந்தின் கனவு முடிவுக்கு வந்தது.

மற்றொரு அரையிறுதியில், ஸ்பெயின் அணி பிரான்ஸை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. லமின் யமால் பெற்றுத் தந்த பெனால்டியை மிகேல் ஒயர்சாபல் கோலாக மாற்றி அணிக்கு முன்னிலை ஏற்படுத்தினார். பின்னர் டானி ஒல்மோ உருவாக்கிய தாக்குதலை பெட்ரோ பொரோ கோலாக மாற்றி வெற்றியை உறுதி செய்தார். பிரான்ஸ் இறுதிவரை போராடிய போதிலும், ஸ்பெயினின் வலுவான தற்காப்பு ஆட்டம் அவர்களை கோல் அடிக்க விடாமல் தடுத்தது. இந்தத் தொடரில் ஏழு போட்டிகளில் ஆறாவது முறையாக 'க்ளீன் ஷீட்' பதிவு செய்த ஸ்பெயின், தனது இரண்டாவது உலகக் கோப்பை இறுதிப்போட்டியை எட்டியுள்ளது.

ஸ்பெயின் பயிற்சியாளர் லூயிஸ் டி லா ஃபுவென்டே கூறுகையில், 'இரு அணிகளும் திறமை, தரம் மற்றும் தாக்குதல் பாணியில் ஒத்த அணிகள். ரசிகர்களுக்கு விறுவிறுப்பான கால்பந்தை வழங்கும் சிறந்த போட்டியாக இது அமையும்' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அர்ஜென்டினா பயிற்சியாளர் லயனல் ஸ்கலோனி கூறுகையில், 'இந்த இறுதிப்போட்டியில் வெற்றி பெற வேண்டுமெனில் எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு போட்டியையும் அணுகுவது போலவே முழுமையான திட்டத்துடன் தயாராகியுள்ளோம். எதிரணியின் பலம், பலவீனங்களை ஆராய்ந்துள்ளோம். எங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் உலக சாம்பியன் பட்டத்தை தக்கவைக்க போராடுவோம்' என்று கூறியுள்ளார்.

ஒருபுறம் நடப்பு உலக சாம்பியனான அர்ஜென்டினா, மறுபுறம் ஐரோப்பிய சாம்பியனான ஸ்பெயின். இரு வலுவான அணிகள் நேருக்கு நேர் மோதுவதால், இந்த இறுதிப்போட்டி உலக கால்பந்து ரசிகர்களுக்கு மறக்க முடியாத விருந்தாக அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Author

Sri Prem Kumar R

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ArgentinaFinalFootballSpainWorld Cupஅர்ஜென்டினாஇறுதிப்போட்டிஉலகக் கோப்பைகால்பந்துஸ்பெயின்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article குதிரை பேர வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்கள் குதிரை பேர வழக்கில் மேலும் 2 பேர் அதிரடி கைது
Next Article லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் கோப்பையுடன் கொண்டாடும் காட்சி MLC 2026 இறுதிப் போட்டி: கடைசி பந்தில் நைட் ரைடர்ஸ் த்ரில் வெற்றி!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் ரஷ்ய தூதர்

ரஷ்ய கப்பல் மீது தாக்குதல்: 4 இந்திய மாலுமிகள் பலி – இந்தியா கண்டனம்

ரஷ்ய வணிகக் கப்பல் மீது நடந்த தாக்குதலில் 4 இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர்.…

ஜூலை 21, 2026

நாடாளுமன்ற தாக்குதல் அச்சம் – கங்கனா ரணாவத் பேட்டி

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய…

ஜூலை 21, 2026

நீட் விவகாரம்: ராகுல் காந்தி வார்த்தை தவறிவிட்டார் – மத்திய அமைச்சர்

டெல்லியில் பிரதமர் மோடி இல்லம் அருகே நீட்…

ஜூலை 21, 2026

பிரியங்கா காந்தி கைது: டெல்லி காவல்துறைக்கு காங்கிரஸ் கேள்வி

பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி…

ஜூலை 21, 2026

ஜெனரல் டயரையும் மிஞ்சிய மோடி: கேஜ்ரிவால் கடும் தாக்கு

டெல்லியில் போராட்டம் நடத்திய இளைஞர்கள், பெண்கள் மீது…

ஜூலை 21, 2026

You Might Also Like

விளையாட்டு

ஊக்க மருந்து தடுப்பு விதிமுறை மீறல்: ஜூன் 26 வரை வினேஷ் போகத் மல்யுத்த போட்டியில் பங்கேற்க தடை

புதுடெல்லி: இந்​திய மல்​யுத்த வீராங்​க​னை​யான வினேஷ் போகத் கடந்த 2024-ல் நடை​பெற்ற பாரிஸ் ஒலிம்​பிக்​கில் இறுதி சுற்று வரை முன்​னேறி அனை​வரது கவனத்​தை​யும் ஈர்த்​திருந்​தார். ஆனால் துர​திருஷ்ட​வச​மாக

1 Min Read
விளையாட்டு

IPL 2026: டாப் 5 வேகப்பந்துவீச்சாளர்கள் இந்த தொடரில் இவங்க தான்.. முன்னாள் வீரர் ஆகாஷ் கருத்து

மும்பை: ஐபிஎல் 2026ல் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) பெற்ற வெற்றிக்குப் பிறகு, ஆகாஷ் சோப்ரா கார்த்திக் தியாகியின் சிறப்பான பந்துவீச்சைப்…

3 Min Read
விளையாட்டு

இந்திய வாழ்க்கை பிடிக்கவில்லை: விராட் கோலி பற்றி லிவிங்ஸ்டோன் பேட்டி

இந்தியாவில் வாழும் வாழ்க்கை தனக்கு பிடிக்கவில்லை என இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் லியாம் லிவிங்ஸ்டோன் தெரிவித்துள்ளார். விராட் கோலி, அவரது குடும்பத்துடன் லண்டனுக்கு குடிபெயர்ந்தது குறித்தும் அவர்…

2 Min Read
விளையாட்டு

இந்திய ஏ அணிக்கு கோப்பை: இலங்கை ஏ அணியை வீழ்த்திய இந்தியா!

இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய ஏ அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை ஏ அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. வைபவ்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?