MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: வெள்ளை அறிக்கை: தமிழக அரசின் நிதிநிலை குறித்து அண்ணாமலை விமர்சனம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: வெள்ளை அறிக்கை: தமிழக அரசின் நிதிநிலை குறித்து அண்ணாமலை விமர்சனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - வெள்ளை அறிக்கை: தமிழக அரசின் நிதிநிலை குறித்து அண்ணாமலை விமர்சனம்

தமிழ்நாடு

வெள்ளை அறிக்கை: தமிழக அரசின் நிதிநிலை குறித்து அண்ணாமலை விமர்சனம்

Admin
Last updated: ஜூன் 21, 2026 10:42 காலை
Admin
Share
SHARE

தமிழக அரசின் நிதிநிலை குறித்து, ஆளும் தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையை (White Paper) தான் படித்துப் பார்த்ததாக பாஜக தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “இந்த வெள்ளை அறிக்கையில் பெரிதாக ஆச்சரியப்படும் அளவுக்குப் புதிய தகவல்கள் எதுவும் இல்லை. மாறாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநில நிதி நிர்வாகத்தில் ஏற்பட்ட சீர்கேடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு ஆவணமாகவே இது உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழகத்தின் முக்கிய நிதிக் குறியீடுகளை, பிற தொழில்மயமான மாநிலங்களுடன் ஒப்பிட்டு, தமிழகத்தின் தற்போதைய நிலையை இந்த வெள்ளை அறிக்கை தெளிவாகக் கூறியிருப்பதாகவும் அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக, தமிழகத்தின் மொத்தக் கடன் நிலுவை ₹10 லட்சம் கோடியை எட்டியுள்ளது என்றும், இதன் மூலம் சராசரியாக ஒவ்வொரு தமிழக மக்கள் மீதும் ₹1,28,934 கடன் சுமை உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் மொத்த வருவாயில் 22.8% வாங்கிய கடனுக்கான வட்டி செலுத்துவதற்கே செலவிடப்படுகிறது என்றும், இது மிகவும் கவலைக்கிடமான நிலை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் சொந்த வரி வருவாய் (SoTR) மற்றும் GSDP விகிதம் 2021-22ல் 5.93% ஆக இருந்தது, ஆனால் 2025-26ல் அது 5.45% ஆகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மின்சாரம், போக்குவரத்து, நுகர்பொருள் விநியோகம் போன்ற முக்கிய பொதுத்துறை நிறுவனங்களின் மொத்தக் கடன் ₹3.18 லட்சம் கோடியாக உள்ளது. நிலங்களின் மதிப்பை குறைத்து பதிவு செய்வது போன்ற முறைகேடுகளால் பத்திரப் பதிவுத்துறை வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும், அமைப்பு சார்ந்த ஊழல்களால் பெரும் வருவாய் இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அண்ணாமலை தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

வரும் 2031 ஆம் ஆண்டில் இருந்து தமிழகத்தில் வேலை செய்யும் வயதுடைய மக்கள் தொகை குறையத் தொடங்கும் சூழலில், மாநிலத்தின் வருவாய் அடித்தளத்தை வலுப்படுத்தவும், நிதிநிலையை சீர்செய்யவும் குறுகிய காலமே உள்ளது. எனவே, தவெக அரசு இந்த வெள்ளை அறிக்கையைக் காரணம் காட்டி செயல்படாமல் இருக்கக் கூடாது என்றும், இந்த பாதிப்புகளைச் சரிசெய்யத் தேவையான உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, பொருளாதார நிபுணர்கள், கல்வியாளர்கள், தொழில், வர்த்தகம், நிர்வாகம், தொழில்நுட்பம், சமூக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வல்லுநர்களை உள்ளடக்கிய ஒரு “செயல்திறன் மிக்க” ஆலோசனைக் குழுவை அமைத்து, தமிழகத்தை மீண்டும் வலுவான நிதிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் தமிழக அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AnnamalaiTamil Nadu Govtஅண்ணாமலைஅரசியல்தமிழக அரசுநிதிநிலைவெள்ளை அறிக்கை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கோவில்பட்டியில் 54 கிலோ புகையிலை பறிமுதல்: இருவர் கைது
Next Article மேகதாது அணை எதிர்ப்பில் திமுகவின் நிலைப்பாடு: உதயநிதி ஸ்டாலின்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் கட்சி தலைவர் பிரியங்கா காந்தி

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்திற்கு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு இல்லை: பிரியங்கா காந்தி

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை நடத்துவது குறித்து எதிர்க்கட்சிகளுக்கு எந்தவிதமான தகவலும் தெரிவிக்கப்படவில்லை என…

நவம்பர் 14, 2026

இந்தியா, உலகத்துடன் நவீன ஆராய்ச்சிகளைப் பகிர வேண்டும்: பிரதமர் மோடி

இந்தியாவின் பண்டைய அறிவு மற்றும் நவீன ஆராய்ச்சிகளின்…

நவம்பர் 13, 2026

மோடியுடன் விவாதிக்க தயார் – ராகுல் காந்தி சவால்

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரதமர்…

நவம்பர் 13, 2026

வெளிநாட்டில் விவாகரத்து பெற முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

இந்தியாவில் திருமணம் செய்துகொண்டவர்கள் வெளிநாடுகளில் விவாகரத்து பெற…

நவம்பர் 13, 2026

பிரதமர் மோடியை பாராட்டிய காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா

இந்திய வெளிநாடு வாழ் காங்கிரஸ் தலைவர் சாம்…

நவம்பர் 13, 2026

You Might Also Like

நடிகர் அஜித் ரசிகர்கள் புதிய கட்சி தொடக்கம் குறித்த அறிவிப்பு
தமிழ்நாடு

அஜித் அரசியலுக்கு வருவாரா? ரசிகர்கள் புதிய கட்சி தொடக்கம்!

நடிகர் அஜித் அரசியலுக்கு வர வேண்டும் என்றும், அவர் வந்தால் மட்டுமே தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும் என்றும் அவரது ரசிகர்கள் 'அனைத்து நண்பர்கள் முன்னேற்றக் கழகம்' என்ற…

2 Min Read
சவுக்கு சங்கர் சிறை தண்டனை பெற்ற செய்தி
தமிழ்நாடு

சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

யூடியூபர் சவுக்கு சங்கருக்கு பெண் செய்தி வாசிப்பாளர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை எழும்பூர்…

2 Min Read
தமிழ்நாடு

புதிய கூட்டணி உதயம்: பெயர் விரைவில் அறிவிப்பு – முதல்வர் விஜய்

தமிழகத்தில் புதிய கூட்டணி உருவாகியுள்ளது. கூட்டணிக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளதுடன், அதை முதல்வர் விஜய் விரைவில் அறிவிப்பார் என மதிமுக எம்பி துரை வைகோ தெரிவித்துள்ளார்.

1 Min Read
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்
தமிழ்நாடு

தவெக அரசு சாணியை தலையில் ஊற்றிக்கொள்கிறது – துரைமுருகன் விமர்சனம்

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், தவெக அரசின் நிர்வாகத் திறனற்ற தன்மையைக் கண்டித்து, எம்எல்ஏக்களுக்கு கார் வழங்கும் அறிவிப்பை விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதையை அரசு சீர்குலைப்பதாக அவர்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?