MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கடலூர் நிலப் பறிப்பு: அன்புமணி ராமதாஸ் கண்டனம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கடலூர் நிலப் பறிப்பு: அன்புமணி ராமதாஸ் கண்டனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கடலூர் நிலப் பறிப்பு: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

தமிழ்நாடு

கடலூர் நிலப் பறிப்பு: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

Fernandez
Last updated: செப்டம்பர் 20, 2026 3:01 மணி
Fernandez
Share
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
SHARE

கடலூர் மாவட்டத்தில் புதிய சிப்காட் வளாகம் மற்றும் என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்காக நிலங்களை கையகப்படுத்தும் தமிழக அரசின் அறிவிக்கைகளுக்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இந்த திட்டங்களை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடலூர் மாவட்டத்தில் புதிய சிப்காட் வளாகம் அமைப்பதற்காக தியாகவல்லி, குடிக்காடு பகுதிகளில் ஏற்கனவே அறிவிக்கை செய்யப்பட்ட 1097 ஏக்கருடன் மேலும் 164 ஏக்கர் நிலங்களையும், என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்காக கையகப்படுத்துவதற்கான அறிவிக்கையை அரசு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே நிலப்பறிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளால் ஒட்டுமொத்த கடலூர் மாவட்டமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும், மீண்டும் சிப்காட் வளாகங்களையும், நிலக்கரி சுரங்கங்களையும் திணிப்பதும், நிலங்களைப் பறிப்பதும் கண்டிக்கத்தக்கவை" என்று குறிப்பிட்டுள்ளார்.

கடலூர் மாவட்டத்தின் தலைநகரமான கடலூரில் 2625 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் வளாகம் செயல்பட்டு வருகிறது. இதற்கு அருகிலேயே குடிக்காடு மற்றும் தியாகவல்லி பகுதிகளில் 1119 ஏக்கரில் இன்னொரு சிப்காட் வளாகத்தை உருவாக்க முடிவு செய்த திமுக அரசு, அப்பகுதிகளில் 1097 ஏக்கர் விளைநிலங்களைக் கையகப்படுத்துவதற்கான அரசாணையை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 28ஆம் தேதி பிறப்பித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள மக்கள் தொடர் போராட்டங்களை நிகழ்த்தி வரும் நிலையில், இப்போது குடிக்காடு, தியாகவல்லி கிராமங்களில் மொத்தம் 164.20 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்துவதற்கான அறிவிக்கையை தமிழக அரசு கடந்த ஒன்றாம் தேதி வெளியிட்டுள்ளது.

இந்த நிலங்கள் அனைத்தும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடமிருந்து கடந்த காலங்களில் இரு தனியார் பெரு நிறுவனங்களால் குறைந்த விலையில் பறிக்கப்பட்டவை ஆகும். அந்த நிலங்களை மீண்டும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்த நிலையில், அவற்றை அரசே பறிக்கத் துடிப்பதை ஏற்க முடியாது. புதிய அறிவிக்கையின் மூலம் கையகப்படுத்தப்படும் நிலங்களில் 75% பெரு நிறுவனங்களுக்கு சொந்தமானவை என்றாலும், இதன் மூலம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 1119 ஏக்கர் பரப்புடன் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள 164.20 ஏக்கரையும் சேர்த்து, மொத்தம் 1,283 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் வளாகம் அமைக்கப்படவுள்ளதை திமுக அரசு உறுதி செய்துள்ளது.

தமிழ்நாட்டின் மிகப்பெரிய சிப்காட் வளாகம் ஓரகடத்தில் 3157 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக செய்யாறில் 2937 ஏக்கர் பரப்பளவில் இரண்டாவது பெரிய சிப்காட் அமைந்துள்ளது. இந்த இரண்டுக்கும் அடுத்த நிலையில் தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய சிப்காட் 2625 ஏக்கரில் கடலூரில் தான் உள்ளது. அத்துடன் 1283 ஏக்கரில் புதிய சிப்காட் அமைக்கப்பட்டால் 3,968 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாட்டின் மிகப்பெரிய சிப்காட் வளாகம் கடலூரில் தான் செயல்படும். இது கடலூர் மாவட்டத்திற்கான வளர்ச்சி அல்ல, மாறாக பேரழிவு ஆகும். இது கடலூருக்குத் தேவையில்லை.

அதேபோல், என்.எல்.சி நிறுவனத்தின் சுரங்கம் 1 விரிவாக்கத்திற்காக கங்கைகொண்டான் கிராமத்தில் 12.60 ஏக்கர் பரப்பளவிலான 68 துண்டு நிலங்களும், சுரங்கம் 1ஏ விரிவாக்கத்திற்காக வானதிராயபுரம் கிராமத்தில் 3.21 ஏக்கர் பரப்பளவிலான 77 துண்டு நிலங்களும் கையகப்படுத்தப்படும் என்று தமிழக அரசு வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் வீட்டுமனை நிலங்களாகும். இவை கையகப்படுத்தப்பட்டால் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வதற்கு இடமில்லாத நிலை ஏற்படக்கூடும்.

கடலூர் சிப்காட் வளாகத்தில் உள்ள இரசாயன ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்படாத கழிவுகளால் நிலம், நீர், காற்று ஆகிய அனைத்தும் மாசுபடுகின்றன. தொழிற்சாலைக் கழிவுகள் நீரிலும், நிலத்திலும் கலந்ததால் கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்களின் தாய்ப்பாலிலும், அங்கு விளையும் இளநீரிலும் டையாக்சின் எனப்படும் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய நச்சுப்பொருள்கள் அதிகமாக கலந்திருக்கின்றன. இன்னொருபக்கம், கடலூர் மாவட்டத்தில் உள்ள என்.எல்.சி நிலக்கரி சுரங்கங்களால் கடலூர் மாவட்டத்தில் உள்ள 30 லட்சம் மக்களும் ஏதேனும் ஒரு வகையில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இத்தகைய சூழலில் மேலும் 1,283 ஏக்கரில் புதிய சிப்காட் வளாகம் அமைப்பட்டால் கடலூர் மாவட்டம் முழுவதும் நச்சுக்காடாக மாறிவிடும். அதுமட்டுமின்றி, சிப்காட் வளாகம் அமைக்கப்படுவதால் உழவர்கள் மற்றும் பொதுமக்களால் வாழ்வாதாரம் பறிக்கப்படுகிறது. குடிக்காடு, தியாகவல்லி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளைநிலங்கள் வளம் மிகுந்தவை. அவற்றின் மூலம் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை வருமானம் ஈட்டப்படுகிறது. ஆனால், சில இடங்களில் அடிப்படையான வழிகாட்டி மதிப்பாக ஏக்கருக்கு ரூ.3.31 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு, அதனடிப்படையில் தான் இழப்பீடு கணக்கிடப்படுகிறது.

வழிகாட்டி மதிப்பை விட சுமார் 3 முதல் 4 மடங்கு வரை கூடுதல் தொகை இழப்பீடாக வழங்கப்படுவதாக தமிழக அரசின் சார்பில் கூறப்பட்டாலும், இழப்பீடாக வழங்கப்படும் தொகை அப்பகுதியின் சந்தை மதிப்பில் மூன்றில் ஒரு பங்கு கூட இல்லை என்பது தான் உண்மையாகும். அதையும் தாண்டி, குடிக்காடு, தியாகவல்லி பகுதியில் உள்ள மக்களின் ஒற்றை ஆதாரம் விவசாயம் மட்டும் தான். இந்த நிலங்களை குறைந்த விலை கொடுத்து அரசு பறிப்பதன் மூலம் மக்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் சூறையாடுகிறது. இதனால், நிலத்தை இழக்கும் மக்கள் சொந்த மண்ணிலேயே கூலிகளாக மாறி விடுவார்கள்.

முந்தைய திமுக ஆட்சியில் காவிரி பாசன மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கப்படுவதற்காவும், மதுரை பகுதியில் டங்க்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்காகவும் நிலங்கள் கையகப்படுத்துவதாக இருந்தால், அதைத் தடுப்பதற்காக பதவி விலகவும் தயங்க மாட்டேன் என்று அப்போதைய முதலமைச்சர் வீர வசனம் பேசினார். கடலூர் மாவட்ட மக்களின் நிலம் பறிக்கப்படுவதாக இருந்தால் மட்டும் வாய்மூடி மவுனமாகிவிடுவார். இப்போதைய முதலமைச்சரோ பரந்தூர் மக்களுக்காக விமான நிலையத் திட்டத்தையே கைவிடுவார்; ஆனால், கடலூர் மாவட்ட மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் மீண்டும், மீண்டும் நிலம் எடுக்க ஆணையிடுகிறார். இவற்றையெல்லாம் பார்க்கும் போது தமிழ்நாட்டில் நடப்பது திமுக ஆட்சியா, திமுக அரசின் நீட்சியா? என்று தமிழ்நாட்டு மக்கள் ஐயம் எழுப்புகிறார்கள். தமிழ்நாட்டில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பது தான் உண்மை.

கடலூர் மாவட்டத்தில் புதிய சிப்காட் அமைக்கும் திட்டம், என்.எல்.சி சுரங்கம் 1, 1ஏ விரிவாக்கத் திட்டங்கள் ஆகியவற்றையும், அவற்றுக்காக மொத்தம் 1277 ஏக்கர் நிலங்களை கையகப் படுத்துவதற்கான அறிவிக்கைகளையும் தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். இல்லாவிட்டால் பாதிக்கப்படும் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் என எச்சரிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Anbumani RamadossCuddaloreNLCSipcotஅன்புமணி ராமதாஸ்என்.எல்.சிகடலூர்சிப்காட்நிலப்பறிப்பு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article அமைச்சர் அருண்ராஜ் டெங்கு பாதிப்பு குறைவு குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் டெங்கு பாதிப்பு குறைவு: அமைச்சர் அருண்ராஜ் தகவல்
Next Article எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு சர்க்கஸ் கும்பலிடம் சிக்கிய தமிழ்நாடு: உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றும் நேபாள பிரதமர் பாலேந்திர ஷா

காலநிலை மாற்றத்தை சமாளிக்க இந்தியா, சீனா ஒத்துழைப்பு அவசியம்: நேபாள பிரதமர்

காலநிலை மாற்றத்தை சமாளிக்க இந்தியா, சீனா ஒத்துழைப்பு அவசியம் என நேபாள பிரதமர்…

செப்டம்பர் 25, 2026

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கம்: சசி தரூர் வலியுறுத்தல்

கோவா வாக்காளர் பட்டியலில் இருந்து 97 பெயர்கள்…

செப்டம்பர் 25, 2026

உ.பி.யில் ரத யாத்திரை பிரச்சாரத்தை தொடங்கினார் அகிலேஷ் யாதவ்

உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாடி…

செப்டம்பர் 25, 2026

கிரேட்டர் நொய்டா பேருந்து தீ விபத்து: 9 பேர் பரிதாப பலி

டெல்லியிலிருந்து மஹோபா நோக்கிச் சென்ற தனியார் பேருந்து…

செப்டம்பர் 25, 2026

பிஹாரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: 4 பேர் கைது

பிஹார் மாநிலம் ஜமூய் மாவட்டத்தில் பள்ளி மாணவிக்கு…

செப்டம்பர் 25, 2026

You Might Also Like

பாபா வாங்காவின் எதிர்காலக் கணிப்புகள் குறித்த விவாதம்
தமிழ்நாடு

பாபா வாங்காவின் 2026 கணிப்புகள்: உண்மை நிலவரம் என்ன?

பாபா வாங்காவின் 2026 கணிப்புகள்: மூன்றாம் உலகப்போர், வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பு, பொருளாதார வீழ்ச்சி? உண்மை நிலவரம் என்ன?

2 Min Read
அமைச்சர் விஜய் பாலாஜி சட்டப்பேரவையில் உரையாற்றுகிறார்
தமிழ்நாடு

100 ஆண்டுகளுக்குப் பிறகும் விஜய் பெயர் இல்லாமல் அரசியலில்லை – அமைச்சர்

நடிகர் விஜய்யின் பெயர் இல்லாமல் இன்னும் 100 ஆண்டுகளுக்கு அரசியலே இல்லை என்று அமைச்சர் விஜய் பாலாஜி சட்டப்பேரவையில் தெரிவித்தார். மேலும், கைத்தறித் தொழிலை மேம்படுத்தவும் அவர்…

2 Min Read
தமிழ்நாடு

‘ஒரே பவர் சென்டர்தான்… ஆட்டம் ஆடலாம் என நினைத்தால்’ – அமைச்சர்களுக்கு விஜய் எச்சரிக்கை

தமிழ்நாட்டின் 14வது முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன் செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இப்பதவியேற்பு…

1 Min Read
தமிழ்நாடு

ரேசன் அரிசி விநியோகம்: விஜய் அரசை விமர்சிக்கும் டி.டி.வி. தினகரன்

மதுரை மேற்கு தொகுதியில் ரேசன் அரிசி சட்டவிரோதமாக விநியோகிக்கப்பட்டதாக எழுந்த புகாரில், முதலமைச்சர் விஜய் அரசை டி.டி.வி. தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து விரிவான விசாரணைக்கு அவர்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?