MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சென்னையில் இருந்து ஆக்ரா சென்ற ரயிலில் துர்நாற்றம்: சூட்கேஸில் மனித உடல் பாகங்கள் மீட்பு!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சென்னையில் இருந்து ஆக்ரா சென்ற ரயிலில் துர்நாற்றம்: சூட்கேஸில் மனித உடல் பாகங்கள் மீட்பு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சென்னையில் இருந்து ஆக்ரா சென்ற ரயிலில் துர்நாற்றம்: சூட்கேஸில் மனித உடல் பாகங்கள் மீட்பு!

தமிழ்நாடு

சென்னையில் இருந்து ஆக்ரா சென்ற ரயிலில் துர்நாற்றம்: சூட்கேஸில் மனித உடல் பாகங்கள் மீட்பு!

Fernandez
Last updated: ஆகஸ்ட் 22, 2026 11:47 காலை
Fernandez
Share
ஆக்ரா ரயில் நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட சூட்கேஸ் மற்றும் போலீஸ் விசாரணை
ஆக்ரா ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான சூட்கேஸில் மனித உடல் பாகங்கள் மீட்பு
SHARE

சென்னையிலிருந்து புதுடெல்லி நோக்கிச் சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், ஆகஸ்ட் 5ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா ரயில் நிலையத்தில் கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. பொதுப்பெட்டியில் இருந்து வந்த இந்த துர்நாற்றத்தை அடுத்து, சந்தேகத்திற்கிடமான முறையில் சிவப்பு நிற சூட்கேஸ் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. சூட்கேஸை திறந்து பார்த்தபோது, அடையாளம் தெரியாத மனித உடல் பாகங்கள் அதில் இருந்ததை கண்டு ரயில்வே போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக ஆக்ரா போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் தீவிர விசாரணையை தொடங்கினர். சடலம் தொடர்பான தடயங்களை ஆராய்ந்ததில், இந்த சூட்கேஸ் சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இதனால், உத்தரப் பிரதேச காவல்துறையினர் தமிழக ரயில்வே போலீசாரின் உதவியை நாடினர்.

தொடர்ந்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சுமார் 350க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை போலீசார் பல மணி நேரம் தீவிரமாக ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குள் சிவப்பு நிற சூட்கேஸுடன் வந்த ஒரு ஆணும், பெண்ணும் அதனை ஆக்ரா செல்லும் ரயிலில் வைத்துவிட்டு, சென்னை பூங்கா ரயில் நிலையத்திலிருந்து கூடுவாஞ்சேரி நோக்கிச் சென்ற மின்சார ரயிலில் ஏறிச் சென்றது பதிவாகி இருந்தது.

இதனையடுத்து, கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டன. ரயில் நிலையத்திற்குள் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் சூட்கேஸுடன் வந்த காட்சிகள் பதிவாகியிருந்தன. அவர்கள் எங்கிருந்து வந்தார்கள், எங்கு சென்றார்கள் என்பதை கண்டறியும் முயற்சியில், ரயில் நிலையத்திலிருந்து வெளியேறி ஆட்டோவில் கூடுவாஞ்சேரி மசூதி தெரு பகுதிக்குச் சென்றதற்கான காட்சிகளும் போலீசாருக்குக் கிடைத்தன.

அந்த ஆட்டோவின் தடத்தைப் பின்தொடர்ந்த போலீசார், சம்பந்தப்பட்ட வீட்டை அடையாளம் கண்டு அங்கு சென்றனர். ஆனால், வீடு பூட்டப்பட்டிருந்ததால், போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனை மேற்கொண்டனர். வீட்டுக்குள் சென்றபோது, கொலை நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தன. கொலைக்குப் பிறகு உடலை மறைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதையும் போலீசார் கண்டறிந்தனர். குறிப்பாக, உடலை துண்டித்து, எலும்புகளை தனியாகப் பிரித்து சூட்கேஸில் அடைத்து ரயிலில் ஆக்ராவுக்கு அனுப்பியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும், மீதமிருந்த உடல் பாகங்களை அழித்து, தடயங்களை மறைப்பதற்காக பெரிய பாத்திரத்தில் மைதா மாவு மற்றும் காய்கறிகளுடன் சேர்த்து சமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். பெண்ணின் தலை இதுவரை கிடைக்காததால், அது தொடர்பாகவும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அக்கம்பக்கத்தினரிடம் நடத்திய விசாரணையில், அந்த வீட்டில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் என 3 பேர் தங்கி இருந்துள்ளனர். அவர்களில் ஒரு ஆணும், பெண்ணும் இணைந்து மற்றொரு பெண்ணை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சடலமாக மீட்கப்பட்ட பெண், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹயாத் நிஷா என்பதும், அவர் தாம்பரம் அருகேயுள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் வேலைபார்த்து வந்ததும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

இதற்கிடையே, கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணின் மகன், தாம்பரம் பகுதியில் ஏசி மெக்கானிக்காக பணியாற்றி வருவது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரை காவல்நிலையத்துக்கு அழைத்துச்சென்ற போலீசார், அவரது தாயார் தொடர்பான விவரங்கள், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தடய நிபுணர்களைக் கொண்டும் கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் முக்கிய தடயங்கள் கிடைத்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ளதாக சந்தேகிக்கப்படும் ஒரு ஆண், ஒரு பெண் ஆகிய இருவரை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும், கொலை செய்தவர்களுக்கும் இடையே ஏதேனும் தொடர்பு இருந்ததா? அல்லது நகை, பணத்திற்காக கொலை செய்யப்பட்டாரா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:MDTV 24x7ஆக்ரா ரயில்கூடுவாஞ்சேரிகொலை வழக்குசென்னைதமிழ்நாடு எக்ஸ்பிரஸ்மனித உடல் பாகங்கள்ஹயாத் நிஷா
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article மலையாள நடிகர் மோகன்லால் மோகன்லாலின் அடுத்த 7 படங்கள்: இயக்குநர்கள் பட்டியல் வெளியானது
Next Article தமிழ்நாடு அரசு கடன் வாங்கியது குறித்த செய்தி தமிழக அரசு ஒரே மாதத்தில் ரூ.12 ஆயிரம் கோடி கடன்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

தமிழக அரசின் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் லோகோ அல்லது தொடர்புடைய காட்சி
தமிழ்நாடு

‘வெற்றிப் பயணம்’ திட்டம்: அக்டோபர் 2-ல் தொடக்கம், 27-ல் சோதனை ஓட்டம்

தமிழகத்தில் பெண்களின் நலனை மேம்படுத்தும் ‘வெற்றிப் பயணம்’ திட்டம் அக்டோபர் 2-ம் தேதி தொடங்குகிறது. செப்டம்பர் 27-ல் சோதனை ஓட்டம் நடைபெறும். இத்திட்டத்தால் சுமார் 84.32 லட்சம்…

1 Min Read
தமிழ்நாடு

திருச்செந்தூர் கோவிலில் ரூ.1 கோடியில் காத்திருப்பு அறை: அமைச்சர் ரமேஷ் உத்தரவு

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களுக்காக ரூ.1 கோடி செலவில் புதிய காத்திருப்பு அறை கட்டப்படுகிறது. ஆவணி திருவிழாவிற்குள் பணிகளை முடிக்க அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி விளக்கம்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், போர் சூழலில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட எரிபொருளை சுத்திகரிப்பதால் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பில்லை என மத்திய…

1 Min Read
தமிழ்நாடு

மின்வாரிய ஊழியர் பரிதாப பலி: டிரான்ஸ்பார்மர் பழுது பணியின் போது நேர்ந்த சோகம்

மயிலாடுதுறை அருகே டிரான்ஸ்பார்மரில் பழுது நீக்கும் பணியின் போது மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் கணேசன் உயிரிழந்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?