MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: சதம் அடித்தும் தண்டனை பெற்ற ஆப்கான் கேப்டன் ஷாஹிதி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - சதம் அடித்தும் தண்டனை பெற்ற ஆப்கான் கேப்டன் ஷாஹிதி

விளையாட்டு

சதம் அடித்தும் தண்டனை பெற்ற ஆப்கான் கேப்டன் ஷாஹிதி

Admin
Last updated: ஜூன் 22, 2026 1:14 மணி
Admin
Share
SHARE

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், பிட்ச்சின் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் ஓடி ஐசிசி விதியை மீறிய ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதிக்கு ஐசிசி கண்டனம் தெரிவித்து ஒரு டிமெரிட் புள்ளியையும் வழங்கி தண்டித்துள்ளது.

சென்னையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், ஆப்கானிஸ்தான் பேட்டிங் செய்தபோது, பந்துவீச்சாளர்கள் ஓடிவரும் பிட்ச்சின் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் ஷாஹிதி அடிக்கடி ஓடியுள்ளார். இதற்காக நடுவர்கள் அவருக்கு இருமுறை வாய்மொழி எச்சரிக்கை விடுத்தனர். இருப்பினும், 40வது ஓவரில் அவர் மீண்டும் அதே தவறை செய்ததால், இந்திய அணிக்கு 5 பெனால்டி ரன்கள் போனஸாக வழங்கப்பட்டது.

போட்டி முடிந்த பிறகு, பிட்ச்சிற்கு வேண்டுமென்றே சேதம் விளைவித்ததாக ஐசிசி நடத்தை விதியின் 2.10.10 பிரிவின் கீழ் ஷாஹிதி மீது குற்றம் சாட்டப்பட்டது. அவருக்கு அதிகாரப்பூர்வ கண்டனம் விதிக்கப்பட்டதோடு, ஒழுங்குமுறை நடவடிக்கையாக 1 டிமெரிட் புள்ளி வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த 24 மாதங்களில் அவர் செய்த முதல் தவறு ஆகும். இப்போட்டியில் ஷாஹிதி தனது முதல் ஒருநாள் சதத்தை (131 பந்துகளில் 102 ரன்கள்) பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐசிசி விதிமுறைகளின்படி, ஒரு வீரர் 2 ஆண்டுகளில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட டிமெரிட் புள்ளிகளைப் பெற்றால், அவர் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும். இந்த மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணியே வென்றது. இதன் மூலம், இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3 – 0 என முழுமையாக கைப்பற்றியது. ஆப்கானிஸ்தான் அணி தொடரை இழந்த கையோடு, கேப்டனுக்கு தண்டனையும் கிடைத்து பின்னடைவை சந்தித்துள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Afghanistan Cricketஆப்கானிஸ்தான்ஐசிசிஒருநாள் போட்டிகிரிக்கெட்ஹஷ்மத்துல்லா ஷாஹிதி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article காரில் கஞ்சா கடத்திய 5 வாலிபர்கள் கைது
Next Article முதல்வர் விஜய்க்கு ராகுல்காந்தி பிறந்தநாள் வாழ்த்து
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தமிழக முதல்வர் விஜய் கரூர் வருகை

வரும் வெள்ளிக்கிழமை கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்

தமிழக முதல்வர் விஜய், வரும் வெள்ளிக்கிழமை அன்று திட்டமிட்டபடி கரூர் மாவட்டத்திற்கு வருகை…

ஜூலை 7, 2026

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில்…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…

ஜூலை 6, 2026

You Might Also Like

விளையாட்டு

52 ஆண்டு கால சாதனை: இந்திய பேட்ஸ்மேன்கள் அசத்தல்!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில், சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் இருவரும் 80 பந்துகளுக்கும் குறைவாக சதம் அடித்து 52 ஆண்டு கால இந்திய…

2 Min Read
விளையாட்டு

சஞ்சு சாம்சன் மீது ஏன் விமர்சனம்? சபா கரீம் கேள்வி

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அவரது செயல்பாடு குறித்து முன்னாள் வீரர் சபா கரீம் கேள்வி எழுப்பியுள்ளார்.…

2 Min Read
விளையாட்டு

யூனிட்டி கோப்பை கால்பந்து: ஜமைக்காவிடம் வீழ்ந்தது இந்திய அணி

லண்டனில் நடைபெற்ற யூனிட்டி கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதியில் ஜமைக்காவிடம் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்த இந்திய அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

1 Min Read
விளையாட்டு

RCB-க்கு எதிராக இவர்தான் பெஸ்ட்! பஞ்சாப் கிங்ஸுக்கு பாங்கர் டிப்ஸ்

ஐபிஎல் தொடரில் ஆர்சிபிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் விளையாடும் போட்டி குறித்து, முன்னாள் வீரர் சஞ்சய் பாங்கர் முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

2 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?