MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா எம்எல்ஏ
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா எம்எல்ஏ
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா எம்எல்ஏ

அரசியல்

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா எம்எல்ஏ

Admin
Last updated: மே 27, 2026 7:10 காலை
Admin
Share
SHARE

அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளார். தமிழகத் தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டதைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு எதிராக சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையில் எம்எல்ஏக்கள் சிலர் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இந்த அணியில் இருந்த மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார் ஆகியோர் ஏற்கனவே தங்கள் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். அவர்களின் ராஜினாமா கடிதங்களை சட்டப்பேரவைத் தலைவர் ஏற்றுக்கொண்டு, அந்த தொகுதிகள் காலியானதாக அறிவித்தார்.

இந்நிலையில், சி.வி.சண்முகம் அணியில் இருந்த அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை சட்டப்பேரவைத் தலைவரிடம் வழங்கினார். முதலில் அவர் வழங்கிய தட்டச்சு செய்யப்பட்ட கடிதத்தை ஏற்க பேரவைத் தலைவர் மறுத்துவிட்டார். 'ராஜினாமா செய்வதாக கைப்பட எழுதிய கடிதத்தை மட்டுமே ஏற்க முடியும்' என்று அவர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, இசக்கி சுப்பையா தனது ராஜினாமா கடிதத்தை கைப்பட எழுதி பேரவைத் தலைவரிடம் வழங்கினார். அதையும் அவர் ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து, பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர் ஆனந்த் ஆகியோர் முன்னிலையில் இசக்கி சுப்பையா தவெகவில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பையா, 'எதிர்க்கட்சி எம்எல்ஏவாக இருந்தபோது பெரிய அளவில் நலத்திட்டங்களை கொண்டுவர முடியவில்லை. இப்போது எனது அம்பாசமுத்திரம் தொகுதிக்கு பல நலத்திட்டங்களை கொண்டுவர வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில்தான் தவெகவில் இணைந்துள்ளேன்' என்று தெரிவித்தார்.

அதிமுகவில் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணியில் இருந்த எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்யபாமா (தாராபுரம்), ஜெயக்குமார் (பெருந்துறை) ஆகிய மூவர் நேற்று முன்தினம் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையாவும் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இவர்களின் ராஜினாமா ஏற்கப்பட்ட நிலையில், தற்போது அந்த 4 தொகுதிகளும் காலியாகிவிட்டதாக சட்டப்பேரவைச் செயலகம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜினாமா செய்த நிலையில், தமிழகத்தில் தற்போது 5 இடங்கள் காலியாக உள்ளன.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsஅதிமுகஅரசியல்எம்எல்ஏ ராஜினாமாதவெக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article செங்கல் சூளை உரிமையாளர்களிடம் மாமூல்: தவெக ஒன்றிய செயலாளர் நீக்கம்
Next Article காமன்வெல்த் செஸ்: தமிழக வீரர்களுக்கு தங்கம் குவிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பாஜக எம்பி நிஷிகாந்த் துபே

ஸ்டார்லிங்க் அனுமதி: நாட்டுக்கு அச்சுறுத்தல் – பாஜக எம்பி எச்சரிக்கை

இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என பாஜக…

அக்டோபர் 12, 2026

ரியாத் விமான நிலைய தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்

ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ரியாத் விமான நிலையத்தை…

அக்டோபர் 12, 2026

டெல்லி மெட்ரோ நிலையங்கள் மூடல்: உச்ச நீதிமன்றம் கடும் கேள்வி

டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்ட விவகாரத்தில்,…

அக்டோபர் 12, 2026

அதானி ஆலையில் 70 அடி உயர துர்கா தேவி சிலை!

அதானி சிமெண்ட் நிறுவனம், நவராத்திரி மற்றும் துர்கா…

அக்டோபர் 12, 2026

யூடியூபர் துருவ் ராத்தி டெல்லியில் கைது

டெல்லியில் சிஜேபி போராட்டம் நடைபெற்ற நிலையில், யூடியூபர்…

அக்டோபர் 11, 2026

You Might Also Like

தமிழ்நாடு

குண்டர் சட்டம் ரத்து: சிறையிலிருந்து விடுதலையான சவுக்கு சங்கர் முதல்-அமைச்சர் விஜய்க்கு நன்றி!

குண்டர் சட்ட வழக்குகளை மறுஆய்வு செய்த தமிழ்நாடு அரசு, யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து சிறையிலிருந்து விடுதலையான சவுக்கு…

1 Min Read
திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
தமிழ்நாடு

என்னை அசைக்க எந்த கொம்பனாலும் முடியாது – அனிதா ராதாகிருஷ்ணன்

முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் மறுக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் கைது. என்னை அசைக்க எந்த கொம்பனாலும் முடியாது என…

2 Min Read
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ விலகல்: இபிஎஸ்-க்கு அதிர்ச்சி

ஈரோடு மாவட்ட அதிமுகவின் முக்கியப் புள்ளியும், அந்தியூர் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இ.எம்.ஆர். ராஜா, அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இவர் அமைச்சர் KAS முன்னிலையில் TVK-வில்…

2 Min Read
தமிழ்நாடு

சேவைக்காகவே அரசியல்: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

அரசியல் என்பது மக்களுக்கான சேவைக்கானது என்றும், தேர்தல் வெற்றியை மட்டும் குறிக்கோளாக கொள்ளக்கூடாது என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். மக்கள் நல முகாம் மூலம்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?