தவெக-வில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்: இபிஎஸ்ஸுக்கு அடுத்த ஷாக்!

தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவின் முக்கிய தலைவர்கள் பலர் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளனர். சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி மோதல்கள் காரணமாக, பல முக்கிய நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகி தவெக-வில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

இந்த சூழலில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் இருந்து பதவிகள் பறிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களான எம்.சி.சம்பத், உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு, பெஞ்ஜமின், எம்.எஸ்.எம். ஆனந்தன் ஆகியோர் இன்று பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இணைந்தனர். தமிழக வெற்றிக் கழக அமைச்சர்களான என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன் ஆகியோர் முன்னிலையில், உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு, எம்.சி.சம்பத், எம்.எஸ்.எம். ஆனந்தன் ஆகியோர் தவெக-வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

அமமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும் தவெக-வில் தங்களை இணைத்துக் கொண்டனர். பாப்பிரெட்டிபட்டி முன்னாள் எம்எல்ஏ கோவிந்தசாமி, சங்ககிரி முன்னாள் எம்எல்ஏ சுந்தரராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் எம்எல்ஏ மான்ராஜ், சிவகாசி முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன், கலசப்பாக்கம் முன்னாள் எம்எல்ஏ பன்னீர்செல்வம் ஆகியோரும் தவெக-வில் இணைந்துள்ளனர்.

அதிமுகவின் முக்கிய தலைவர்கள் பலர் தவெக-வில் இணைந்திருப்பது, தமிழக அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு பெரிய பின்னடைவாகவும், தவெக-வுக்கு ஒரு வலுவான பலமாகவும் கருதப்படுகிறது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

தவெகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்: இபிஎஸ் ஷாக்!

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் 4 பேர் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் அமைச்சர்களான கடம்பூர் ராஜூ, எம்.சி. சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் எம். எஸ்.எம் ஆனந்தன் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் தவெக தலைமை அலுவலகமான பனையூருக்கு வருகை தந்துள்ளனர். குறிப்பாக, எம்.சி.சம்பத் தலைமையில் சுமார் 500 பேர் தவெக கட்சியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 9 பேரும் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, சங்ககிரி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுந்தரராஜ், வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி ராஜமுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் ஆகியோர் அடங்குவர்.

இந்த திடீர் இணைப்பு, தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் முக்கிய தலைவர்கள் பலர் தவெகவில் இணைவது, அக்கட்சியின் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version