மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று (செப்.27) தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர், தி.மு.க இளவரசர் உதயநிதிக்கு பகிரங்க சவால் விடுத்தார். “தம்பி உதயநிதி அவர்களே, இந்த மதுராந்தகம் தொகுதியில் நீங்கள் வெற்றிப் பெற்றால் நான் எனது பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகிக்கொள்கிறேன். அதேபோல், நாங்கள் வெற்றிப் பெற்றால் நீங்கள் கட்சியில் இருந்து விலகுவீர்களா?” என அவர் கேள்வி எழுப்பினார். மேலும், “இந்த தொகுதி பரப்புரைக்கு உங்க அப்பா, உங்க தாத்தாவை கூட கூட்டிட்டு வாங்க” என்றும் அவர் சவால் விட்டார்.
தமிழ்நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், விஜய் தலைமையிலான த.வெ.க கட்சி 108 இடங்களில் மகத்தான வெற்றி பெற்றது. ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 118 இடங்கள் இல்லாத நிலையில், காங்கிரஸ், வி.சி.க, ஐ.யூ.எம்.எல், சி.பி.ஐ, சி.பி.எம் போன்ற கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க ஆட்சியை அமைத்தது. முதலமைச்சர் விஜய்யின் அமைச்சரவையில் காங்கிரஸ், வி.சி.க, ஐ.யூ.எம்.எல் கட்சிகள் இடம்பெற்றன. சி.பி.ஐ மற்றும் சி.பி.எம் கட்சிகள் அமைச்சரவைக்கு வெளியே இருந்து ஆதரவு அளிப்பதாக அறிவித்தன.
இதனைத் தொடர்ந்து, மதுராந்தகம் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற சத்யபாமா ஆகியோர் தங்கள் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, விஜய் தலைமையிலான த.வெ.க-வில் இணைந்தனர். இதேபோல், பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதிகளில் அ.தி.மு.க சார்பில் வெற்றி பெற்ற எஸ்.ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகியோரும் தங்கள் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் இணைந்தனர். மேலும், விறாலிமலை தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், கரூர் தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரும் தங்கள் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் இணைந்தனர்.
த.வெ.க தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். மக்கள் பிரதிநிதிகள் சட்டப்படி ஒருவர் இரண்டு பதவிகளை வகிக்கக்கூடாது என்பதால், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதன் காரணமாக, தமிழ்நாட்டில் மொத்தம் 7 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதில் பெருந்துறை, அம்பாசமுத்திரம், திருச்சி கிழக்கு, விறாலிமலை, கரூர் ஆகிய தொகுதிகளில் தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்தது. அதன்படி, அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது, அக்டோபர் 9-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்த இடைத்தேர்தலில், மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க சார்பில், அ.தி.மு.க-வில் இருந்து விலகி த.வெ.க-வில் இணைந்த மரகதம் குமரவேல் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். தாராபுரம் தொகுதியில் சத்யபாமா போட்டியிடுகிறார். இந்நிலையில், மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது: “கபடியில் விளையாட தெரியாமல் கபடி விளையாட போய், கபடி கபடினு சொல்லாம கெட்ட வார்த்தை பேசினால் ஜெயிக்க முடியுமா? முடியாது. இன்னைக்கு இந்த மண்ணுல இருந்து சொல்றேன். இளவரசர் உதயநிதி அவர்களே, தம்பி நீங்க எங்க தலைவர் (விஜய்) லெவலுக்கு எல்லாம் பேச வேணாம். முதல்ல எங்க லெவலுக்கு பதில் சொல்லு. நான் இங்கே இருந்து சேலஞ்ச் பண்றேன். மதுராந்தகம் தொகுதியில நீங்க (தி.மு.க) ஜெயிச்சிட்டீங்கனா நான் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா பண்றேன். பிரசாரத்துக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கு. உங்க அப்பாவ வேணாலும் கூட்டிட்டு வந்து பிரச்சாரம் பண்ணிக்கோங்க, உங்க தாத்தாவைக்கூட மதுராந்தகத்துக்கு கூட்டிடு வா பிரசாரம் பண்றதுக்கு. ஆனால், இளவரசர் உதயநிதி நீ தோத்துட்டினா, உன்னுடைய கட்சி (தி.மு.க) பதவி எல்லாத்தையும் ராஜினாமா பண்ண தயாரா? நான் சவால் விடுகிறேன். எங்க அண்ணனை (விஜய்) மதுராந்தகத்தில் ஜெயித்து காட்டுங்க. என்னை அண்ணன் பொறுப்பாளராக போட்டிருக்கிறார். அக்கா (மரகதம் குமரவேல்) இங்கே இருக்கிறார். நம்ம ராஜ்மோகன் இருக்கிறார், எல்லாரும் எளிய வீட்டு பிள்ளைகள். நீங்கதான் 70 வருட கட்சியாச்சே, பெரிய ஆலமரமாச்சே, உங்களுக்குதான் அரசியல் தெரியுமே, உங்களுக்குதான் தேர்தல் அரசியல் தெரியுமே, உங்ககிட்டதான் பணபலம் இருக்கே. மதுராந்தகத்தில் ஒரே ஒரு ஓட்டு நீங்க எக்ஸ்ட்ரா வாங்கி காட்டு.
முதலில் நீங்க எங்ககிட்ட வாங்க. உங்கள மாதிரி ஓட்டுக்கு ஒரு ரூபாய் பணம் கொடுக்க மாட்டோம். எக்க அத்தை, எங்க அம்மா, எங்க தங்கச்சிக்கு நாங்க காசு கொடுத்துவிட்டு ஓட்டு வாங்கனுமா? இனிமேல் அந்த கலாச்சாரம் கிடையாது. இந்த ஓபன் சேலஞ்சுக்கு உதயநிதி தயாரா கேட்டு சொல்லுங்க. மு.க.ஸ்டாலின் அவர்களே உங்க புள்ளைய களத்தில் இறக்கிவிடுங்க. தேர்தலில் இறக்கிவிடுங்க. தேர்தல் யுத்தத்தில் இறக்கி வீடுங்க. எங்க அக்கா மரகதத்தைவிட ஒரு ஓட்டு முடிஞ்சா ஜெயிச்சி காட்டுங்க, நான் என்னுடைய பொதுச் செயலாளர் பதவியை ராஜினாம பண்ணிடறேன். நீங்கள், தி.மு.க-வில் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்துவிட்டு வெளியே வருவதற்கு நீங்க தயாரா?” என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு ஓபன் சேலஞ்ச் விடுத்தார்.
இந்த இடைத்தேர்தலில் த.வெ.க சார்பில் மதுராந்தகம் தொகுதியில் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு அ.தி.மு.க-வில் இருந்து விலகி த.வெ.க-வில் இணைந்த மரகதம் குமரவேல் வேட்பாளராக போட்டியிடுகிறார். அதே போல, தாராபுரம் தொகுதியில் சத்யபாமா போட்டியிடுகிறார். இந்நிலையில், மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: “கபடியில் விளையாட தெரியாமல் கபடி விளையாட போய், கபடி கபடினு சொல்லாம கெட்ட வார்த்தை பேசினால் ஜெயிக்க முடியுமா? முடியாது. இன்னைக்கு இந்த மண்ணுல இருந்து சொல்றேன். இளவரசர் உதயநிதி அவர்களே, தம்பி நீங்க எங்க தலைவர் (விஜய்) லெவலுக்கு எல்லாம் பேச வேணாம். முதல்ல எங்க லெவலுக்கு பதில் சொல்லு. நான் இங்கே இருந்து சேலஞ்ச் பண்றேன். மதுராந்தகம் தொகுதியில நீங்க (தி.மு.க) ஜெயிச்சிட்டீங்கனா நான் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா பண்றேன். பிரசாரத்துக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கு. உங்க அப்பாவ வேணாலும் கூட்டிட்டு வந்து பிரச்சாரம் பண்ணிக்கோங்க, உங்க தாத்தாவைக்கூட மதுராந்தகத்துக்கு கூட்டிடு வா பிரசாரம் பண்றதுக்கு. ஆனால், இளவரசர் உதயநிதி நீ தோத்துட்டினா, உன்னுடைய கட்சி (தி.மு.க) பதவி எல்லாத்தையும் ராஜினாமா பண்ண தயாரா? நான் சவால் விடுகிறேன். எங்க அண்ணனை (விஜய்) மதுராந்தகத்தில் ஜெயித்து காட்டுங்க. என்னை அண்ணன் பொறுப்பாளராக போட்டிருக்கிறார். அக்கா (மரகதம் குமரவேல்) இங்கே இருக்கிறார். நம்ம ராஜ்மோகன் இருக்கிறார், எல்லாரும் எளிய வீட்டு பிள்ளைகள். நீங்கதான் 70 வருட கட்சியாச்சே, பெரிய ஆலமரமாச்சே, உங்களுக்குதான் அரசியல் தெரியுமே, உங்களுக்குதான் தேர்தல் அரசியல் தெரியுமே, உங்ககிட்டதான் பணபலம் இருக்கே. மதுராந்தகத்தில் ஒரே ஒரு ஓட்டு நீங்க எக்ஸ்ட்ரா வாங்கி காட்டு. முதலில் நீங்க எங்ககிட்ட வாங்க. உங்கள மாதிரி ஓட்டுக்கு ஒரு ரூபாய் பணம் கொடுக்க மாட்டோம். எக்க அத்தை, எங்க அம்மா, எங்க தங்கச்சிக்கு நாங்க காசு கொடுத்துவிட்டு ஓட்டு வாங்கனுமா? இனிமேல் அந்த கலாச்சாரம் கிடையாது. இந்த ஓபன் சேலஞ்சுக்கு உதயநிதி தயாரா கேட்டு சொல்லுங்க. மு.க.ஸ்டாலின் அவர்களே உங்க புள்ளைய களத்தில் இறக்கிவிடுங்க. தேர்தலில் இறக்கிவிடுங்க. தேர்தல் யுத்தத்தில் இறக்கி வீடுங்க. எங்க அக்கா மரகதத்தைவிட ஒரு ஓட்டு முடிஞ்சா ஜெயிச்சி காட்டுங்க, நான் என்னுடைய பொதுச் செயலாளர் பதவியை ராஜினாம பண்ணிடறேன். நீங்கள், தி.மு.க-வில் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்துவிட்டு வெளியே வருவதற்கு நீங்க தயாரா?” என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு ஓபன் சேலஞ்ச் விடுத்தார்.
