MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஓடும் ரயிலில் நடிகை வெறிச்செயல்: RPF வீரரை பிளேடால் தாக்கி, ஆடைகளை கழற்றி எறிந்தார்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஓடும் ரயிலில் நடிகை வெறிச்செயல்: RPF வீரரை பிளேடால் தாக்கி, ஆடைகளை கழற்றி எறிந்தார்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ஓடும் ரயிலில் நடிகை வெறிச்செயல்: RPF வீரரை பிளேடால் தாக்கி, ஆடைகளை கழற்றி எறிந்தார்!

தமிழ்நாடு

ஓடும் ரயிலில் நடிகை வெறிச்செயல்: RPF வீரரை பிளேடால் தாக்கி, ஆடைகளை கழற்றி எறிந்தார்!

Fernandez
Last updated: ஆகஸ்ட் 19, 2026 6:56 காலை
Fernandez
Share
நடிகை அந்தரா பானர்ஜி ரயிலில் தகராறில் ஈடுபட்ட காட்சி
மும்பையிலிருந்து குஜராத் சென்ற ரயிலில் தகராறில் ஈடுபட்ட நடிகை அந்தரா பானர்ஜி
SHARE

மும்பையிலிருந்து குஜராத் மாநிலம் சூரத் நோக்கிச் சென்ற ஆரவல்லி எக்ஸ்பிரஸ் ரயிலில், பிரபல நடிகை அந்தரா பானர்ஜி சக பயணிகளுடன் தகராறில் ஈடுபட்டு, ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்களை பிளேடால் தாக்கி அதிர்ச்சியூட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த 31 வயதான அந்தரா பானர்ஜி, மும்பையில் வசித்து வருகிறார். இவர் 'சாவ்தான் இந்தியா', 'கும்ரா', 'எண்ட் ஆஃப் இன்னசென்ஸ்' போன்ற தொலைக்காட்சித் தொடர்களிலும், 'தி ஷாவுக்கீன்ஸ்', 'யே ஹை இந்தியா' போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது வெப் தொடர்களிலும் நடித்து வரும் இவர், படப்பிடிப்பு ஒன்றில் கலந்துகொள்வதற்காக கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி ஆரவல்லி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளார்.

சம்பவத்தன்று, நடிகை அந்தரா பானர்ஜி ஸ்லீப்பர் வகுப்பு டிக்கெட்டுடன் ஏசி பெட்டியில் ஏறி, அங்குள்ள ஒரு இருக்கையில் அமர்ந்துள்ளார். அந்த இருக்கைக்குரிய பயணி வந்தபோது, நடிகை அந்த இடத்தைவிட்டு நகர மறுத்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த பயணச் சீட்டுப் பரிசோதகர் (TTE) ஹரிகேஷ் திரிபாதி மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.

அங்கு வந்த ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர் யாமினி காந்த் மிஸ்ரா மற்றும் காவலர் ராஜேஷ்குமார் ஆகியோர் நடிகையிடம் பேசி, அவரை அவரது பெட்டிக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், இதனால் ஆத்திரமடைந்த நடிகை அந்தரா, பாதுகாப்புப் படை வீரர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டி ரகளையில் ஈடுபட்டுள்ளார். திடீரென தனது ஆடைகளைக் கழற்றி எறிந்துவிட்டு, மறைத்து வைத்திருந்த ரேசர் பிளேடை எடுத்து பாதுகாப்புப் படை வீரர்களை நோக்கி வீசியுள்ளார்.

இதில், உதவி ஆய்வாளர் யாமினி காந்த் மிஸ்ராவின் கையில் காயம் ஏற்பட்டது. மேலும், பாதுகாப்புப் படையினரின் சீருடை மற்றும் செல்போன்களையும் அவர் சேதப்படுத்தியுள்ளார். தன்னைத்தானே பிளேடால் அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொள்வதாகவும் நடிகை மிரட்டல் விடுத்துள்ளார். நள்ளிரவில் நடந்த இந்த திடீர் சம்பவத்தால் ஏசி பெட்டியில் இருந்த பயணிகள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டது.

நிலைமை மோசமாவதை உணர்ந்த ரயில்வே பாதுகாப்புப் படையினர், ஏசி பெட்டியின் கதவுகளைப் பூட்டி, நடிகை தப்பியோட முயன்ற கண்ணாடி கதவையும் அடைத்துள்ளனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த பரபரப்புக்குப் பிறகு, ரயில் 'தஹானு' ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

அங்கு ஏற்கனவே தயாராக இருந்த பெண் போலீசார் ரயிலுக்குள் அதிரடியாக நுழைந்து நடிகை அந்தரா பானர்ஜியைக் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் திரையுலகினரிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Andara BanerjeeRPF வீரர்அந்தரா பானர்ஜிஓடும் ரயில்குஜராத்நடிகை அந்தரா பானர்ஜிபிளேடால் தாக்குதல்மும்பை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயில் நுழைவாயில் அருணாசலேசுவரர் கோயிலில் செல்போனுக்கு தடை: செப்.1 முதல் அமல்
Next Article ராசிபலன் கணிப்பு 19-08-2026 ராசிபலன்: புதிய பதவிகள், மதிப்பும் மரியாதையும் நிச்சயம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் முதியவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவர்கள்

கேரளாவில் அதிர்ச்சி: முதியவர் கொலை வழக்கில் 4 சிறுவர்கள் கைது

கேரளாவில் பணத்தேவைக்காக முதியவர் சிவன்குட்டியை கொலை செய்த வழக்கில் 13 வயது சிறுமி…

ஆகஸ்ட் 19, 2026

மத்திய மந்திரி ஜே.பி.நட்டா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, coronary…

ஆகஸ்ட் 19, 2026

கொல்கத்தா ஓட்டல் தீ விபத்து: 9 பேர் உயிரிழப்பு – ஜனாதிபதி இரங்கல்

கொல்கத்தா ஓட்டல் தீ விபத்தில் பெண்கள், குழந்தைகள்…

ஆகஸ்ட் 19, 2026

மேகமலை ஆக்கிரமிப்புகள்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

மேகமலை புலிகள் சரணாலய ஆக்கிரமிப்புகள் & இலவம்…

ஆகஸ்ட் 19, 2026

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவனை கொன்ற மனைவி: மகனையும் கொலை செய்த கொடூரம்

சமூக வலைத்தளத்தில் ஏற்பட்ட கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த…

ஆகஸ்ட் 19, 2026

You Might Also Like

தமிழ்நாடு

கோவில்களை சாதி அடிப்படையில் பிரிக்கக்கூடாது – மதுரை ஐகோர்ட்டு

கோவில்களை பிரிப்பது தொடர்பான முடிவுகள் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட வேண்டும். சாதி அடிப்படையில் பிரிப்பதை தவிர்க்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

1 Min Read
பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன்
தமிழ்நாடு

பெரம்பூரில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

பெரம்பூரில் இளம்பெண் ஒருவர் முன்னாள் ஆண் நண்பர் மற்றும் கும்பலால் தாக்கப்பட்டதை அடுத்து, முதலமைச்சரின் சொந்த தொகுதியிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

1 Min Read
அண்ணாமலை 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் சுற்றுச்சூழல் மாநாடு குறித்த அறிவிப்பு
தமிழ்நாடு

ஜூலை 26ல் திருச்செந்தூரில் அண்ணாமலை சுற்றுச்சூழல் மாநாடு

தமிழகத்தில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்திய அண்ணாமலையின் 'வீ தி லீடர்ஸ்' அமைப்பு, அடுத்ததாக சுற்றுச்சூழல் கருத்தாக்கத்துடன் திருச்செந்தூரில் ஜூலை 26ல் மாநாடு நடத்துகிறது. இதற்கான…

2 Min Read
ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனை அருகே உள்ள நகை அடகு கடை
தமிழ்நாடு

ஆண்டிப்பட்டியில் 139 சவரன் நகை மோசடி: 3 பேரை தேடும் போலீஸ்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள நகை அடகு கடையில் 139 சவரன் தங்க நகைகள் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?