MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை: செக் மோசடி வழக்கு தீர்ப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை: செக் மோசடி வழக்கு தீர்ப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை: செக் மோசடி வழக்கு தீர்ப்பு

தமிழ்நாடு

நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை: செக் மோசடி வழக்கு தீர்ப்பு

Fernandez
Last updated: ஜூலை 23, 2026 4:01 மணி
Fernandez
Share
நடிகர் விமல் தொடர்பான செக் மோசடி வழக்கு தீர்ப்பு
செக் மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை
SHARE

செக் மோசடி வழக்கில் பிரபல நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 'களவாணி', 'மஞ்சப்பை', 'கலகலப்பு' போன்ற பல வெற்றிப் படங்களில் கதாநாயகனாக நடித்தவர் நடிகர் விமல். இவர், கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 'மன்னர் வகையறா' திரைப்படத்தின் தயாரிப்பாளராகவும் செயல்பட்டுள்ளார்.

'மன்னர் வகையறா' திரைப்படத்தின் தயாரிப்புக்காக, நடிகர் விமலின் நிறுவன மேலாளராக இருந்த சிங்காரவேலன், பைனான்சியர் கோபி என்பவரிடம் இருந்து ஒப்பந்த அடிப்படையில் சுமார் 5 கோடி ரூபாய் கடனாகப் பெற்றுள்ளார். இந்த கடன் தொகையை திருப்பிச் செலுத்துவது தொடர்பாக, நடிகர் விமலிடம் பல பத்திரங்களில் சிங்காரவேலன் கையெழுத்து பெற்றுள்ளார். மேலும், விமலின் நிறுவனத்தின் பெயரில் வங்கி கணக்கு தொடங்கப்பட்டு, அதனை சிங்காரவேலனே கவனித்து வந்துள்ளார்.

'மன்னர் வகையறா' திரைப்படம் வெளியான பிறகு, எதிர்பார்த்த வருவாய் ஈட்டாததால், பைனான்சியர் கோபிக்கு கடனை திருப்பித் தர சிங்காரவேலன் தாமதம் செய்துள்ளார். இதனால், நடிகர் விமலிடம் பைனான்சியர் கோபி தனது பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளார். 'மன்னர் வகையறா' படத்திற்காக நடிகர் விமல் வாங்கியதாகக் கூறப்படும் 4.5 கோடி ரூபாய் தொகையில், 3.06 கோடி ரூபாயை திருப்பிச் செலுத்தவில்லை என கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பைனான்சியர் கோபி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், படத் தயாரிப்புக்காக பெற்ற 3.06 கோடி ரூபாயை, 18% வட்டியுடன் பைனான்சியர் கோபிக்கு உடனடியாக திருப்பிச் செலுத்த நடிகர் விமலுக்கு உத்தரவிட்டது. இருப்பினும், நடிகர் விமல் நீதிமன்ற உத்தரவின்படி பணத்தை திருப்பிச் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து, 'மன்னர் வகையறா' படத்திற்காக நடிகர் விமல் வழங்கியதாகக் கூறப்படும் 4.5 கோடி ரூபாய் கடன் தொடர்பான செக், பணமின்றி திரும்பியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த செக் மோசடி வழக்கில் ஈடுபட்டதாகக் கூறி, நடிகர் விமலுக்கு சென்னை நீதிமன்றம் ஒரு ஆண்டு கால சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

எனினும், நடிகர் விமல் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்காக, அவருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை ஒரு மாத காலத்திற்கு நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இந்த தீர்ப்பு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Actor VimalCheque FraudMadras High CourtMannar VagaiyaraVimalசெக் மோசடிசென்னை உயர்நீதிமன்றம்நடிகர் விமல்மன்னர் வகையறாவிமல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article நடிகை சோனாலி பிந்த்ரே தனது ஆரோக்கிய உணவுமுறையைப் பற்றி பேசுகிறார் புற்றுநோயிலிருந்து மீண்ட சோனாலி பிந்த்ரே: 20 மணி நேர விரதம், ஒருவேளை உணவு
Next Article வெள்ளைப் பற்பசையைப் பயன்படுத்தி கண்ணாடியைச் சுத்தம் செய்யும் கை கண்ணாடி சுத்தம் செய்ய சூப்பர் டிப்ஸ்: செலவே இல்லை!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இணைய சேவை முடக்கம் குறித்த அறிவிப்பு

மாணவர் போராட்டம்: டெல்லியில் ஜந்தர் மந்தர் அருகே இணைய சேவை முடக்கம்

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இன்று நள்ளிரவு 12 மணி வரை இணைய…

ஜூலை 23, 2026

போராட்டத்தில் பாஜகவினர் ஊடுருவல்! போலீஸ் மீது கல்லெறிந்து பழிபோடுகிறார்கள் – அபிஜீத் திப்கே

நீட் தேர்வில் மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் மத்திய…

ஜூலை 23, 2026

ராகுல் காந்தியின் போராட்டம் நேர்மையற்றது – கீதாஞ்சலி குற்றச்சாட்டு

நீட் தேர்வுக்கு எதிராக போராடும் கரப்பான் ஜனதா…

ஜூலை 23, 2026

டெல்லியில் நீட் எதிர்ப்பு போராட்டம்: காந்தி சமாதியில் இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் அஞ்சலி

டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ள…

ஜூலை 23, 2026

நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டம்: மாணவர்கள் நீரில் நனைந்து நடனமாடிய வீடியோ வைரல்!

பாட்னாவில் நீட் தேர்வு எதிர்ப்புப் போராட்டத்தில், மாணவர்கள்…

ஜூலை 23, 2026

You Might Also Like

வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையனை சந்திக்கும் மீனா ஜெயக்குமார்
தமிழ்நாடு

திமுகவில் இருந்து விலகிய மீனா ஜெயக்குமார் தவெகவில் இணைகிறாரா?

திமுகவில் இருந்து விலகிய மீனா ஜெயக்குமார், அமைச்சர் செங்கோட்டையனை நேரில் சந்தித்துப் பேசியது, அவர் தமாகாவில் இணைய உள்ளதாகக் கருதப்படுகிறது. இது கோவை மாவட்ட அரசியலில் பரபரப்பை…

2 Min Read
தங்க காசு மோசடி வழக்கில் கைதான பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி
தமிழ்நாடு

தங்க காசு மோசடி வழக்கு: பெண் இன்ஸ்பெக்டர் விசாரணைக்கு அனுமதி

தங்க காசு மோசடி வழக்கில் கைதான பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி மற்றும் 3 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

நார்வே செஸ் சாம்பியன்: பிரக்ஞானந்தாவிற்கு அண்ணாமலை வாழ்த்து

நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவிற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வெற்றி பல இளம் வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும்…

0 Min Read
அமைச்சர் ராஜ்மோகன் 'நீர் எழில் பள்ளி' திட்டத்தை தொடங்கி வைக்கிறார்
தமிழ்நாடு

அறவழிப் போராட்டம்: மாணவர்களுக்கு ஆதரவு – அமைச்சர் ராஜ்மோகன்

நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் அறவழியில் போராடினால் ஆதரவு உண்டு என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். சென்னை பிரசிடென்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 'நீர் எழில் பள்ளி' திட்டத்தை…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?