MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பழனி முருகன் கோவிலில் நடிகர் ரவி மோகன் சாமி தரிசனம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பழனி முருகன் கோவிலில் நடிகர் ரவி மோகன் சாமி தரிசனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - பழனி முருகன் கோவிலில் நடிகர் ரவி மோகன் சாமி தரிசனம்

சினிமா

பழனி முருகன் கோவிலில் நடிகர் ரவி மோகன் சாமி தரிசனம்

Admin
Last updated: மே 27, 2026 9:56 காலை
Admin
Share
SHARE

பிரபல தமிழ் சினிமா நடிகர் ரவி மோகன், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முருகனின் அறுபடை வீடுகளில் முக்கியமானதுமான பழனி முருகன் கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்தார். ஜெயம், தனி ஒருவன், பொன்னியின் செல்வன் போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் ரவி மோகன். சமீபத்தில் வெளியான பராசக்தி திரைப்படத்தில் வில்லனாக நடித்த இவரது நடிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றது.

தனிப்பட்ட வாழ்க்கையில், கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து கோரி நடிகர் ரவி மோகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இறுதி தீர்ப்புக்காக நிலுவையில் உள்ளது. சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது மனைவி ஆர்த்தி, மாமியார் சுஜாதா மற்றும் நடிகை குஷ்பு ஆகியோர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும், தனது குழந்தைகளை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை என்றும், விவாகரத்து கிடைக்கும் வரை படங்களில் நடிக்கப் போவதில்லை என்றும், இதுவரை நடித்த படங்களையும் வெளியிடப் போவதில்லை என்றும் அவர் கூறியிருந்தார். இந்த குற்றச்சாட்டுகள் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த சூழலில், நடிகர் ரவி மோகன் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து 41 நாட்கள் விரதத்தை தொடங்கியுள்ளார். ஜூலை மாத தொடக்கத்தில் அவர் சபரிமலைக்கு சென்று வழிபாடு நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விரதத்தின் ஒரு பகுதியாக, அவர் பழனி முருகன் கோவிலுக்கு நேற்று வருகை தந்தார்.

பழனி அடிவாரத்தில் இருந்து ரோப் கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்ற ரவி மோகன், உச்சிக்கால பூஜையில் கலந்துகொண்டு முருகப்பெருமானை மனமுருக தரிசனம் செய்தார். தொடர்ந்து, போகர் சன்னதி, ஆனந்த விநாயகர் சன்னதி உள்ளிட்ட பல்வேறு சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார். அவரை கண்ட பக்தர்கள் சிலர் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Ravi Mohanஆன்மீகம்சினிமாதமிழ்நாடுபழனி முருகன் கோவில்ரவி மோகன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐபிஎல் 2026: அடுத்தடுத்த ஃபைனலுக்கு சென்ற கேப்டன்கள் பட்டியலில் ரஜத் பட்டிதார்
Next Article அரசு ஊழியர்களுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை சுற்றுலா: பீகார் அரசு அதிரடி உத்தரவு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது

சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடு: மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. ஜம்மு - காஷ்மீர்,…

ஆகஸ்ட் 20, 2026

மனைவி, சகோதரியை கொன்றுவிட்டு வங்கி ஊழியர் தற்கொலை

லக்னோவில் வங்கி ஊழியர் ஒருவர், கருத்து வேறுபாடு…

ஆகஸ்ட் 20, 2026

தாய்-தந்தை நினைவுகளுடன் ராகுல் காந்தி உருக்கமான பதிவு

தனது தாயின் சுயசரிதை கோடிக்கணக்கான மக்களால் படிக்கப்பட…

ஆகஸ்ட் 20, 2026

இளைஞர்களை ஈர்க்கும் ஆர்எஸ்எஸ்: விசாகப்பட்டினத்தில் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்

இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்…

ஆகஸ்ட் 20, 2026

ஜார்க்கண்ட் அரசுப் பணி நியமன ரத்து அறிவிப்புக்கு உயர் நீதிமன்றம் தடை

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்ட…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட வரிசையாக அடுக்கப்பட்ட சங்குகள்
தமிழ்நாடு

நாட்டிலேயே முதல்முறை: புதைப்பிடத்தில் வரிசையாக சங்குகள் கண்டுபிடிப்பு!

கீழடியில் நடைபெற்ற அகழாய்வில், நாட்டிலேயே முதல் முறையாக ஒரு புதைப்பிடத்தில் சங்குகள் வரிசையாக அடுக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது அக்கால மக்களின் சடங்குகள் குறித்த புதிய தகவல்களை…

1 Min Read
உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
தமிழ்நாடு

பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சர் தொடர வேண்டும்: அமைச்சர் விஸ்வநாதன்

தமிழக பல்கலைக்கழகங்களில் வேந்தராக முதலமைச்சரே செயல்பட வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் வலியுறுத்தியுள்ளார். துணைவேந்தர் நியமனங்கள், முதல்வர், பேராசிரியர்கள் தேர்வு குறித்தும் அவர் விளக்கினார்.

2 Min Read
லைஃப் ஸ்டைல்

தமிழகத்தில் குற்றங்களைத் தடுக்க என்ன நடவடிக்கை? அண்ணாமலை கேள்வி

தமிழகத்தில் குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது தமிழக அரசு? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். சட்டம் ஒழுங்கு பிரச்சனை…

0 Min Read
சினிமா

நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன் கிடைக்குமா? – இன்று விசாரணை!

கன்னட நடிகர் தர்ஷன், ரேணுகாசாமி கொலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரியுள்ளார். இதுகுறித்த விசாரணை இன்று நடைபெறுகிறது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?