MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: பாஜகவில் இருந்து விலகும் நடிகர் பாண்டி ரவி: தவெக-வில் இணைகிறார்?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - பாஜகவில் இருந்து விலகும் நடிகர் பாண்டி ரவி: தவெக-வில் இணைகிறார்?

லைஃப் ஸ்டைல்

பாஜகவில் இருந்து விலகும் நடிகர் பாண்டி ரவி: தவெக-வில் இணைகிறார்?

Admin
Last updated: ஜூன் 13, 2026 12:00 மணி
Admin
Share
SHARE

புதுச்சேரி பாஜக மாநில பிரச்சாரக் பிரிவு அமைப்பாளராக இருந்த நடிகர் பாண்டி ரவி, அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த திடீர் முடிவு புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

தனக்கு கட்சியில் உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பதால் விலகுவதாக பாண்டி ரவி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சினிமா மற்றும் சின்னத்திரை உலகில் பிரபலமான முகமான இவர், விஜய் டிவியின் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடர் உட்பட பல சீரியல்களில் நடித்துள்ளார். கடந்த 39 ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சியுடன் பயணித்து வந்த இவர், தற்போது அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்திருப்பது அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்களை சந்தித்த பாண்டி ரவி, '1987 முதல் என் தந்தையைப் பின்பற்றி பாஜகவில் பயணித்து வருகிறேன். சில தவிர்க்க முடியாத காரணங்களால், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும், மாநில பிரச்சாரப் பொறுப்பிலிருந்தும் முழுமையாக விலகிக் கொள்கிறேன்' என்று கூறினார். மேலும், 'என்னுடைய தகுதி, அனுபவம், மக்கள் தொடர்பு ஆகியவற்றை பாஜக சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. பாண்டிச்சேரியில் 10 லட்சம் பேரில் 7 முதல் 8 லட்சம்பேருக்கு என்னை தெரியும். எந்தப் பதவியையும் எதிர்பார்த்து கட்சியில் இருக்கவில்லை, ஆனால் என்னால் இன்னும் நிறைய செய்ய முடியும் என்ற எண்ணம் இருந்தது. அதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை' என வருத்தத்துடன் தெரிவித்தார்.

'எனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை முழு அர்ப்பணிப்புடன் செய்தேன். தேர்தல் பிரச்சாரங்களில் கடுமையாக உழைத்தேன். தேர்தல் முடிந்த பிறகு கட்சிக்காக இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதற்கான வழிகள் இல்லாதது என்னை ஏமாற்றமடையச் செய்தது' என்றும் அவர் குறிப்பிட்டார். பாண்டி ரவி விரைவில் தவெக-வில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsஅரசியல்தவெகபாண்டி ரவிபாஜகபுதுச்சேரி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பாஜகவில் இருந்து விலகும் விஜயதாரணி: த.வெ.க.வில் இணைகிறார்!
Next Article தோஹா டயமண்ட் லீக்: காயம் எதிரொலி – நீரஜ் சோப்ரா விலகல்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

திருப்பதி திருமலையில் 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம் செய்யும் 116 வயது மூதாட்டி

116 வயது மூதாட்டி 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம்!

திருப்பதி திருமலையில் 116 வயது மூதாட்டி 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம்…

ஜூலை 5, 2026

யானை தந்தங்கள், கலைப்பொருட்கள்: வனத்துறையிடம் ஒப்படைக்க மோகன்லாலுக்கு விண்ணப்பம்

கேரளாவில், நடிகர் மோகன்லாலிடம் யானை தந்தங்கள் மற்றும்…

ஜூலை 5, 2026

கர்நாடகாவில் ஆண்களுக்கான தேசிய மனித உரிமைக்குழு: புதிய முயற்சி

கர்நாடகாவில் ஆண்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்கள் எதிர்கொள்ளும்…

ஜூலை 5, 2026

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி: இந்தியா ரூ. 38,000 கோடியை தாண்டியது

இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 2013-14ல் ரூ.…

ஜூலை 4, 2026

ரவி ஆற்று வெள்ளத்தில் காட்டு ஆடு: அசத்தல் நீச்சல் வீடியோ வைரல்

ஹிமாச்சலப் பிரதேசத்தில் ரவி ஆற்று வெள்ளத்தில் காட்டு…

ஜூலை 4, 2026

You Might Also Like

தமிழ்நாடு

234 தொகுதிகளிலும் திமுக தனித்து போட்டி: ஆ.ராசா கோரிக்கை

திருவாரூரில் நடைபெற்ற திமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் பேசிய எம்பி ஆ.ராசா, 234 தொகுதிகளிலும் திமுக தனித்து போட்டியிடும் என அறிவிக்க வேண்டும் என ஸ்டாலினுக்கு…

2 Min Read
அரசியல்

அதிமுக, பாஜக ஆதரவாளர்களுக்கு அரசு வழக்கறிஞர் பதவி: த.வெ.க. வழக்கறிஞர்கள் அதிருப்தி

தமிழகத்தில் புதிய அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் அதிமுக, பாஜக ஆதரவாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக கூறி த.வெ.க. வழக்கறிஞர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கட்சிக்கு உழைத்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்…

2 Min Read
அரசியல்

திமுக கூட்டணியை காக்க எனக்கு வலிமை இல்லை – திருமாவளவன்

தேர்தலுக்குப் பின் திமுக கூட்டணியை காக்கும் வலிமை தனக்கு இல்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் அரசியல் நெருக்கடியால் இந்த முடிவை எடுத்ததாக அவர்…

3 Min Read
லைஃப் ஸ்டைல்

பகலில் பாதாம் சாப்பிட்டால் தூக்கம் வருமா? இதோ உண்மை!

பகல் வேளையில் சிறிதளவு பாதாம் சாப்பிடுவது தூக்கத்தை மேம்படுத்தும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பாதாமில் உள்ள மெலடோனின், மெக்னீசியம், டிரிப்டோபன் சத்துக்கள் ஆழ்ந்த உறக்கத்திற்கு உதவுகின்றன. பாலில்…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?