MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சீமான்: ஈழ இனப்படுகொலை 17 ஆண்டுகள் – மீண்டெழுவோம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சீமான்: ஈழ இனப்படுகொலை 17 ஆண்டுகள் – மீண்டெழுவோம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சீமான்: ஈழ இனப்படுகொலை 17 ஆண்டுகள் – மீண்டெழுவோம்!

தமிழ்நாடு

சீமான்: ஈழ இனப்படுகொலை 17 ஆண்டுகள் – மீண்டெழுவோம்!

Admin
Last updated: மே 18, 2026 7:29 காலை
Admin
Share
SHARE

உலகெங்கும் வாழும் தமிழர்களே, வணக்கம்! 17 ஆண்டுகளுக்கு முன்பு, ஈழத்தில் சிங்கள இனவாத ஆட்சியாளர்கள், வல்லாதிக்க நாடுகளின் துணையோடு நடத்திய மாபெரும் இனப்படுகொலையில் 2 லட்சம் தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். அந்தப் பேரழிவிலிருந்து மீண்டு, இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கேட்டு இன்றும் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்.

இலங்கை அரசு மீது பன்னாட்டுப் போர்க்குற்ற விசாரணை நடத்தவும், ஈழத் தாயக விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தவும் உலகத் தமிழர்கள் பல்வேறு தளங்களில் குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், தமிழர்கள் தங்களைத் தாங்களே உணர்வுச்சூடேற்றி, இன மீட்சிக்காகவும், தாயக விடுதலைக்காகவும் மீண்டெழுந்து நிற்க வேண்டியது ஒவ்வொரு தமிழரின் வரலாற்றுப் பெருங்கடமை.

2009 மே 18 அன்று, முள்ளிவாய்க்கால் மண்ணில் இரண்டு லட்சம் தமிழர்களின் பிணக்குவியல்களுக்கு நடுவே, எல்லாம் முடிந்துவிட்டதாக இன எதிரிகள் எண்ணிய நேரத்தில், 'வீழ்வோம் என்று நினைத்தீரோ?' என்று கேள்வி எழுப்பி, 'விழ விழ எழுவோம்! ஒன்று விழ ஒன்பதாய் எழுவோம்!' எனும் இன மீட்சி முழக்கத்துடன் தமிழ்த்தேசிய இனம் மீண்டெழுந்து தாயகக் கனவை நனவாக்க வேண்டிய காலம் இது. தமிழ்நாட்டு மக்களிடையே வளர்ந்து வரும் தமிழின உணர்வை அழிக்க நடக்கும் சதித்திட்டங்களை முறியடித்து, நமது ஒற்றுமையையும் பலத்தையும் உலகிற்கு உணர்த்த வேண்டியது அவசியம்.

இந்த வரலாற்றுத் தருணத்தில், தமிழர்கள் லட்சிய வேங்கைகளாக எழுந்து, இனத்தின் விடியலுக்காகத் துணிந்து களமாட உறுதியேற்போம். இன்று, மே 18, 2026 அன்று சென்னை மறைமலைநகரில் மாலை 4 மணிக்கு நாம் தமிழர் கட்சி நடத்தும் தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டத்தில் உலகத் தமிழர்கள் அனைவரும் பேரெழுச்சியுடன் பங்கேற்க அறைகூவல் விடுக்கிறேன்! அன்றைய தினம், ஈழத்தில் வறுமையால் அல்லலுற்ற நம் உறவுகள் உப்பில்லா கஞ்சியைக் குடித்துப் போராடியதை நினைவுகூர்ந்து, நாமும் உப்பில்லா கஞ்சியை உண்டு, இன விடுதலைக்காகப் போராடி உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து, அவர்களின் துயரத்தை உலகுக்கு உணர்த்துவோம். இனத்தின் விடுதலை ஒன்றே நமது இலக்கு!

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Eelam GenocideNaam TamilarSeemanஈழம்சீமான்நாம் தமிழர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ரிஷப் பண்ட் பதவி பறிபோகிறதா? பிசிசிஐ அதிரடி நடவடிக்கை!
Next Article சீனாவில் 5.2 ரிக்டர் நிலநடுக்கம்: கட்டிடங்கள் சேதம், பலர் சிக்கலாம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம்

பிரதமர் மோடியைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொதுச்சேவையைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்…

அக்டோபர் 7, 2026

பஞ்சாப் முதல்வர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் சிறப்பு அதிகாரி…

அக்டோபர் 7, 2026

விமானப் படை புதிய தளபதி: அசுதோஷ் தீட்சித் நியமனம்

இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஏர்…

அக்டோபர் 7, 2026

நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை: 3 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை தொடர்பாக, வரும்…

அக்டோபர் 7, 2026

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின்…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

தமிழ்நாடு

கடலூரில் இடி மின்னல் தாக்குதல்: கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

கடலூர் தேவனாம்பட்டினம் அருகே இடி தாக்கி கல்லூரி மாணவர் ஹரிகரன் உயிரிழந்தார். மேலும் 2 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

1 Min Read
கோத்தகிரி கடைவீதிப் பகுதியில் கரடிகளின் நடமாட்டம்
தமிழ்நாடு

கோத்தகிரி கடைவீதியில் கரடி நடமாட்டம்: மக்கள் அச்சம்

கோத்தகிரி கடைவீதிப் பகுதியில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த வாரம் தொழுகைக்கு சென்றவர்களை கரடி துரத்தியதால், கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 Min Read
நடிகர் விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசுகிறார்
தமிழ்நாடு

விஜய் சேதுபதியின் பேச்சுக்கு கண்டனங்கள்: விஜய்யை மறைமுகமாக விமர்சித்தார்?

நடிகர் விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய ஒரு கருத்து, நடிகர் விஜய்யை மறைமுகமாக விமர்சிப்பதாக சமூக வலைத்தளங்களில் கண்டனங்களை எழுப்பியுள்ளது.

1 Min Read
ஜெம் வீரமணி வழக்கு தொடர்பான வீடியோ வெளியீட்டிற்கு தடை விதிக்கும் நீதிமன்ற அறிவிப்பு
தமிழ்நாடு

ஜெம் வீரமணி வழக்கு: வீடியோ வெளியீட்டுக்கு தடை

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பான வீடியோக்களை வெளியிட ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வீடியோக்கள் எப்படி கிடைத்தன என விசாரணைக்கு உத்தரவு.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?