MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்!

தமிழ்நாடு

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்!

Fernandez
Last updated: செப்டம்பர் 17, 2026 8:38 காலை
Fernandez
Share
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா.
SHARE

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று காலை மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அதிகாலை 7.40 மணியளவில் 12 கோபுரங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு, 'சிவ சிவ' என்ற பக்தி கோஷங்களுக்கு மத்தியில் இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு நிறைவடைந்தது.

கடந்த 2009ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது நடைபெற்றுள்ள இந்த கும்பாபிஷேக விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கான விரிவான ஏற்பாடுகள் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக இந்து சமய அறநிலையத்துறை, காவல்துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்புடன் மேற்கொள்ளப்பட்டன. பக்தர்களின் பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் மற்றும் அசம்பாவித தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டன.

இந்த மாபெரும் கும்பாபிஷேக விழாவிற்காக, வடக்கு ஆடி வீதியில் 184 குண்டங்களுடன் கூடிய பிரம்மாண்ட யாகசாலை அமைக்கப்பட்டது. மூலவர் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரருக்காக பிரத்யேக தங்க குடங்கள் யாகசாலையில் வைக்கப்பட்டன. கங்கை, காவிரி, வைகை உள்ளிட்ட பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கலசங்களில் நிரப்பப்பட்டு, தினமும் யாகசாலை பூஜைகளில் பயன்படுத்தப்பட்டன. சுமார் 400-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் இந்த வேள்விகளை நடத்தினர்.

கடந்த 11-ஆம் தேதி முதல் கால யாக பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெற்றன. நேற்று முன்தினம் அதிகாலை 3.45 மணியளவில் 10-ஆம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்தன. அதனைத் தொடர்ந்து, பரிவார தெய்வங்களுக்கான கும்பாபிஷேகம் மேளதாளங்கள் முழங்க, யானை மற்றும் மாடு அணிவகுப்புகளுடன் கோலாகலமாக நடைபெற்றது.

நேற்று காலை 5 மணி முதல் 6 மணிக்குள் சித்தி விநாயகர், கூடல்குமாரர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, மகாலட்சுமி, பத்திரகாளி, அக்னி வீரபத்திரர், 63 நாயன்மார்கள், நவகிரகங்கள் உள்ளிட்ட 414 பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. மூலவர் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், தங்க விமானங்கள், சன்னதி விமானங்கள் மற்றும் 12 கோபுரங்கள் உள்ளிட்டவற்றுக்கான கும்ப கலசங்களுக்கு நேற்று மாலை 11-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

விழாவின் உச்சகட்டமாக, இன்று காலை மீனாட்சி அம்மன் – சுந்தரேஸ்வரர் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதிகாலை 3.45 மணிக்கு 12-ம் கால யாக பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து, யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் கலசங்கள் காலை 5.45 மணிக்கு புறப்பாடாகி, சிவாச்சாரியர்களால் 4 ராஜ கோபுரங்கள் மற்றும் 12 தங்க விமானங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

சரியாக காலை 7.40 மணியளவில், 12 கோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. புனித நீர் கலசங்களில் இருந்து ஊற்றப்பட்டபோது, அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் 'சிவ சிவ' என்ற பக்தி கோஷங்கள் விண்ணை முட்டின. பின்னர் சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.

கும்பாபிஷேகத்தை கோவிலின் மேல் தளத்தில் இருந்து காண சுமார் 9 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. நான்கு மாசி வீதிகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த கும்பாபிஷேக விழாவைக் காண தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வந்தனர்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:KumbabishekamMaduraiMeenakshi Amman Templeகும்பாபிஷேகம்கோவில்சிவ சிவமதுரைமீனாட்சி அம்மன் கோவில்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article ஈரானில் நடுவானில் பறந்த விமானத்தின் டயர் வெடித்து, எஞ்சினில் கோளாறு ஏற்பட்டது. ஈரானில் நடுவானில் விமான டயர் வெடித்து, எஞ்சின் கோளாறு: பயணிகள் தவிப்பு!
Next Article மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக பாதுகாப்பு ஏற்பாடுகள் மதுரையில் 24 பள்ளிகளுக்கு 2 நாள் விடுமுறை: போலீஸ் தங்குவதற்கு ஏற்பாடு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே தேர்தல் ஆணையத்திற்கு எதிராக பேரணி அறிவிப்பு

தேர்தல் ஆணையத்தை கண்டித்து மும்பையில் பேரணி: தாக்கரே சகோதரர்கள் அறிவிப்பு

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை கண்டித்து, நவநிர்மாண் சேனா மற்றும் சிவ சேனா (யுபிடி)…

செப்டம்பர் 29, 2026

தேர்தல் ஆணையர் பதவி நீக்கம்: காங்கிரஸ் செயற்குழு தீர்மானம்

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம்…

செப்டம்பர் 29, 2026

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி நீக்கம்: உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியில்…

செப்டம்பர் 29, 2026

ராகுல் காந்தி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்: பாஜக

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த ராகுல் காந்தி முயற்சிப்பதாக…

செப்டம்பர் 29, 2026

ஜெய் ஸ்ரீராம் முழக்கம் சர்ச்சை: ரேவந்த் ரெட்டி விளக்கம்

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, 'ஜெய் ஸ்ரீராம்'…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

தமிழ்நாடு

மும்பையில் அதிர்ச்சி: கார் ஏர்பேக் வெடித்து இளைஞர் பலி!

மும்பையில், பழைய கார் ஆய்வு செய்யும்போது ஏர்பேக் வெடித்து இளைஞர் மோகித் சோனி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 Min Read
நாசா அறிவியல் போட்டியில் பங்கேற்ற தமிழக மாணவர்
தமிழ்நாடு

நாசாவில் தமிழக மாணவர்: உலக அளவில் டாப்-100-க்குள் சாதனை

தமிழக மாணவர் ஒருவர் நாசா நடத்திய உலகளாவிய அறிவியல் போட்டியில் முதல் 100 இடங்களுக்குள் வந்து சாதனை படைத்துள்ளார். 80 நாடுகளில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட…

1 Min Read
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்ய காத்திருக்கும் பக்தர்கள்
தமிழ்நாடு

விடுமுறை தினத்தில் திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்தனர்

விடுமுறை தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுமார் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

1 Min Read
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாடு

25 ஆண்டு ஒப்பந்த பணியாளர் பணி நிலைப்பு: அன்புமணி வலியுறுத்தல்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மின்சார வாரியத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை உடனடியாக பணி நிலைப்பு செய்ய வலியுறுத்தியுள்ளார். ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்தாலே…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?