MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: உயிருடன் இருக்கும் மகளுக்கு இறுதிச்சடங்கு செய்த தந்தை: பீகாரில் நெகிழ்ச்சி சம்பவம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: உயிருடன் இருக்கும் மகளுக்கு இறுதிச்சடங்கு செய்த தந்தை: பீகாரில் நெகிழ்ச்சி சம்பவம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - உயிருடன் இருக்கும் மகளுக்கு இறுதிச்சடங்கு செய்த தந்தை: பீகாரில் நெகிழ்ச்சி சம்பவம்

தமிழ்நாடு

உயிருடன் இருக்கும் மகளுக்கு இறுதிச்சடங்கு செய்த தந்தை: பீகாரில் நெகிழ்ச்சி சம்பவம்

Fernandez
Last updated: செப்டம்பர் 16, 2026 1:39 மணி
Fernandez
Share
உயிருடன் இருக்கும் மகளுக்கு இறுதிச்சடங்கு செய்த தந்தை மனோஜ் கோஸ்வாமி
உயிருடன் இருக்கும் மகளுக்கு இறுதிச்சடங்கு செய்த தந்தை மனோஜ் கோஸ்வாமி
SHARE

பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டம், கேநகர் அருகே உள்ள சப்பாய் கிராமத்தில் வசிக்கும் மனோஜ் கோஸ்வாமி என்ற சிறு விவசாயி, தனது மூத்த மகள் ரியா குமாரி (பி.ஏ. முதலாண்டு மாணவி) வேறொரு சாதியைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டதால், உயிருடன் இருக்கும் மகளுக்கு பாடை கட்டி இறுதிச்சடங்கு செய்து உறவை முறித்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய ரியா குமாரி, தனது காதலனுடன் சென்று திருமணம் செய்துகொண்டார். மகனைக் காணவில்லை என மனோஜ் கோஸ்வாமி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனிடையே, டெல்லியில் இருந்த இருவரையும் காவல்துறையினர் மீட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரியா, தனது விருப்பத்தின் பேரிலேயே காதலனுடன் சென்றதாகவும், அவருடனேயே வாழ விரும்புவதாகவும் வாக்குமூலம் அளித்தார்.

குடும்பத்தின் கௌரவத்தை சீரழித்துவிட்டதாகக் கூறி மனமுடைந்த மனோஜ் கோஸ்வாமி, மகளுடனான உறவை முற்றிலும் அறுத்துக்கொள்ள முடிவெடுத்தார். இதன்படி, திங்கள்கிழமை இரவு தனது மகளின் உருவப்பொம்மையைச் செய்து, அதில் மகளின் புகைப்படத்தையும் ஒட்டினார். செவ்வாய்க்கிழமை காலை, உயிருடன் இருக்கும் மகளுக்கு இறுதி ஊர்வலம் நடத்தப்படவுள்ளதாகக் கூறி கிராமமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

பின்னர், இந்து பாரம்பரிய முறைப்படி பாடை அலங்கரிக்கப்பட்டு, கிராம மக்கள் முன்னிலையில் ஊர்வலமாக மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, உருவப்பொம்மைக்கு தீ மூட்டி தகனம் செய்யப்பட்டது. மேலும், மகளுக்கான காரியச் சடங்குகளை (ஷ்ராத்தம்) முறைப்படி செய்யப் போவதாகவும் தந்தை அறிவித்துள்ளார்.

'எனது மகளின் உயர்கல்விக்காகவும் எதிர்காலத்திற்காகவும் பல கனவுகளை வைத்திருந்தேன். ஆனால், அவள் என் கனவுகளையும் குடும்பத்தின் கௌரவத்தையும் உடைத்துவிட்டாள். அதனால் தான் அவளுடனான உறவை முடிவுக்குக் கொண்டுவர இந்த முடிவை எடுத்தேன்' என தந்தை மனோஜ் கோஸ்வாமி வேதனையுடன் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. உயிருடன் இருக்கும் மகளுக்கு தந்தையே பாடை கட்டி இறுதிச்சடங்கு செய்த நிகழ்வு, குடும்ப உறவுகளின் சிக்கலான தன்மையை எடுத்துக்காட்டுகிறது.

மனோஜ் கோஸ்வாமியின் இந்த அதிரடி முடிவு, காதல் திருமணங்களால் ஏற்படும் குடும்பப் பிரச்சனைகள் மற்றும் சமூக அழுத்தங்கள் குறித்த விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது. கிராம மக்களும் உறவினர்களும் இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:இறுதிச்சடங்குகாதல் திருமணம்குடும்ப உறவுகள்சப்பாய் கிராமம்சமூக பிரச்சனைகள்பீகார்மனோஜ் கோஸ்வாமிரியா குமாரி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article அண்ணா பல்கலைக்கழக வளாகம் அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு
Next Article தாராபுரம் இடைத்தேர்தல்: த.வெ.க. வேட்பாளர் வேட்புமனு தாக்கல் தாராபுரம் இடைத்தேர்தல்: த.வெ.க. வேட்பாளர் வேட்புமனு தாக்கல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

இந்திய கடற்படையில் ஐஎன்எஸ் மாங்ரோல் கப்பல் இணைக்கப்படும் காட்சி

கடற்படையில் இணைந்தது ஐஎன்எஸ் மாங்ரோல் நீர்மூழ்கி வேவுக்கப்பல்

மும்பையில் நேற்று நடைபெற்ற விழாவில், நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறியும் திறன் கொண்ட 'ஐஎன்எஸ்…

அக்டோபர் 13, 2026

பஞ்சாபில் 13.60 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்: இறுதிப் பட்டியல் வெளியீடு

பஞ்சாப் மாநிலத்தில் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணி…

அக்டோபர் 13, 2026

டெல்லி ஜந்தர் மந்தர்: போராட அனுமதி மறுப்பு அறிவிப்பு

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்த…

அக்டோபர் 13, 2026

பரூச் ஜாமியா மசூதி: சமண கோயிலாக இருந்ததற்கான ஆதாரங்களை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு

குஜராத் பரூச்​ ஜாமியா மசூதி, சமணக் கோயிலாக…

அக்டோபர் 13, 2026

டெல்லி போராட்டங்களுக்கு மத்தியில் ‘மக்கி ஜனதா கட்சி’ வைரல்

கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு பிறகு, 'மக்கி…

அக்டோபர் 13, 2026

You Might Also Like

தமிழ்நாடு

இந்திய பாஸ்போர்ட் கட்டணம் உயர்வு: மக்களுக்கு அடுத்த ஷாக்!

இந்திய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் கட்டணம் ஜூலை 1 முதல் உயர்கிறது. 18 வயதுக்கு மேற்பட்டோர், சிறுவர்கள், மூத்த குடிமக்கள் என அனைவருக்கும் கட்டண உயர்வு அமலாகிறது. தட்கல்…

1 Min Read
தமிழ்நாடு

முதல்-அமைச்சர் விஜய்க்கு காது கேட்கும் கருவி அனுப்பிய சமூக ஆர்வலர்

முதல்-அமைச்சர் விஜய் மக்களின் பிரச்சினைகளுக்கு செவி சாய்த்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அவருக்கு காது கேட்கும் கருவியை சமூக ஆர்வலர் அனுப்பியுள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? வைகோ விளக்கம்

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல் அமைச்சர் விஜய்யை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து, மதிமுக எம்எல்ஏக்கள் கட்சி மாறுவது குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

1 Min Read
தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு குறித்த அறிவிப்பு
தமிழ்நாடு

தங்கம் வாங்க திட்டமா? சவரனுக்கு ரூ.240 உயர்வு, வெள்ளி விலையும் அதிகரிப்பு!

இன்று, ஜூலை 15 ஆம் தேதி, தங்கத்தின் விலையில் ஒரு குறிப்பிடத்தக்க உயர்வு பதிவாகியுள்ளது. ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.240 அதிகரித்து, ரூ.1,05,440 ஆக…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?