MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் கைது: பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் கைது: பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் கைது: பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

தமிழ்நாடு

மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் கைது: பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

Fernandez
Last updated: செப்டம்பர் 16, 2026 1:31 மணி
Fernandez
Share
மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ்
மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ்
SHARE

சென்னை: மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் கைது செய்யப்பட்டதற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பெண் யூடியூபர் குறித்து 8 மாதங்களுக்கு முன்பு பேசிய புகாரில், முன் விசாரணை இன்றி நேரடியாக கைது செய்தது ஏன் என கேள்வியெழுப்பியுள்ள மன்றம், இது அரசின் பழிவாங்கும் நடவடிக்கையா என்றும் சந்தேகம் எழுப்பி, அவரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியுள்ளது. நக்கீரன் புலனாய்வு இதழில் மூத்த செய்தியாளராக தாமோதரன் பிரகாஷ் பணியாற்றி வருகிறார்.

காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த மாலதி என்பவர், ‘சவுக்கு மீடியா’ யூடியூப் சேனலில் தொகுப்பாளினியாக உள்ளார். இவர், வார இதழ் நிருபரான தாமோதரன் பிரகாஷ் மற்றும் பெயர் தெரியாத ஒரு நெறியாளருடன் இணைந்து, ‘HIV சவுக்கு மாலதியும் கல்யாணம்’ என்ற தலைப்பில், மாலதியை அவதூறாகவும், அவருக்கு HIV இருப்பதாக சித்தரித்தும், அவரது புகைப்படத்தை காட்டி, தனிப்பட்ட வாழ்க்கையை கொச்சைப்படுத்தியும் வீடியோ பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ கடந்த ஜனவரி-2026 மாதம் “கிங் 24 X 7” என்ற யூடியூப் சேனலில் வெளியாகி, பெண்மைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருந்ததாக மாலதி புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில், S-8 ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் (BNS Act), தகவல் தொழில்நுட்ப சட்டம் (IT Act) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக, S-8 ஆதம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான குழுவினர், வழக்கில் தொடர்புடைய தாமோதரன் பிரகாஷ், வயது 58, த/பெ. தாமோதரன், சிந்தாதிரிப்பேட்டை, சென்னை என்பவரை இன்று (16.09.2026) கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தாமோதரன் பிரகாஷ் கைதுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அதில், 'புகாருக்கும் நடவடிக்கைக்கும் இடையே 8 மாதங்கள் இடைவெளி ஏன்? இது அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று எண்ணத் தோன்றுகிறது' எனக் குறிப்பிட்டுள்ளது.

மேலும், 'பத்திரிகைத்துறையில் கால் நூற்றாண்டிற்கும் மேலாக பயணித்து வரும் தாமோதரன் பிரகாஷ், நக்கீரன் புலனாய்வு இதழில் மூத்த செய்தியாளராக பணியாற்றி வருகிறார். நக்கீரன் இதழ் வெளியிட்ட பல முக்கிய புலனாய்வு செய்திகளில் இவரது பங்கு மகத்தானது. சங்கரராமன் கொலை வழக்கு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு, கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கு உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளில் யாருக்கும் அஞ்சாமல் இவர் மேற்கொண்ட புலனாய்வு நடவடிக்கைகள் பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்தன' என்றும் மன்றம் தெரிவித்துள்ளது.

இன்று காலை சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தாமோதரன் பிரகாஷ் இல்லத்திற்கு வந்த காவல்துறையினர் அவரை கைது செய்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். கைது தொடர்பாக காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஜனவரி மாதம் ஒரு யூடியூப் சேனலில் பெண் யூட்யூபர் குறித்து தாமோதரன் பிரகாஷ் தெரிவித்த அவதூறான கருத்துக்களுக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகார வர்க்கத்தின் தவறுகளை தைரியமாக சுட்டிக்காட்டி விமர்சித்து வரும் தாமோதரன் பிரகாஷ், சுமார் 8 மாதங்களுக்கு முன் யூடியூபில் பேசியதற்காக எந்தவித முன் விசாரணையும் இன்றி தற்போது கைது செய்யப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. தவறுகளை சுட்டிக்காட்டும் பத்திரிகையாளர்களை அச்சுறுத்தும் வகையில் இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்றும் எண்ணத் தோன்றுகிறது. தாமோதரன் பிரகாஷ் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டில் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுப்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், தொடர்புடைய நபரிடம் சட்டப்பூர்வமாக விளக்கம் கேட்காமல், எந்தவித விசாரணையும் நடத்தாமல் நேரடியாக மேற்கொள்ளப்பட்டுள்ள கைது நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. கைது செய்யப்பட்டுள்ள மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Chennai Journalists ForumDamodharan PrakashJournalist ArrestNakkheeranYouTube Defamationசென்னை பத்திரிகையாளர் மன்றம்தாமோதரன் பிரகாஷ்நக்கீரன்பத்திரிகையாளர் கைதுயூடியூப் அவதூறு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article கோவையில் கைது செய்யப்பட்ட லாட்டரி விற்பனையாளர்கள் கோவையில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை: 6 பேர் கைது
Next Article அண்ணா பல்கலைக்கழக வளாகம் அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

சாலையில் இறந்த கிடந்த நாயின் இறைச்சியை உண்ணும் இளைஞர்

பசியின் கோரம்: நாயிறைச்சியை உண்ட இளைஞர் – ஒடிசாவில் அதிர்ச்சி சம்பவம்

ஒடிசாவின் சம்பல்பூர் மாவட்டத்தில், சாலையில் இறந்த நாயின் இறைச்சியை மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர்…

நவம்பர் 15, 2026

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்திற்கு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு இல்லை: பிரியங்கா காந்தி

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை நடத்துவது குறித்து எதிர்க்கட்சிகளுக்கு…

நவம்பர் 14, 2026

இந்தியா, உலகத்துடன் நவீன ஆராய்ச்சிகளைப் பகிர வேண்டும்: பிரதமர் மோடி

இந்தியாவின் பண்டைய அறிவு மற்றும் நவீன ஆராய்ச்சிகளின்…

நவம்பர் 13, 2026

மோடியுடன் விவாதிக்க தயார் – ராகுல் காந்தி சவால்

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரதமர்…

நவம்பர் 13, 2026

வெளிநாட்டில் விவாகரத்து பெற முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

இந்தியாவில் திருமணம் செய்துகொண்டவர்கள் வெளிநாடுகளில் விவாகரத்து பெற…

நவம்பர் 13, 2026

You Might Also Like

எஸ்பிஐ வங்கியின் அம்ரித் விருஷ்டி சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டம் பற்றிய அறிவிப்பு
தமிழ்நாடு

எஸ்பிஐ சிறப்பு FD: 444 நாட்களில் ரூ.40,000 வரை லாபம்!

எஸ்பிஐ வங்கி 444 நாட்கள் சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில் பொது வாடிக்கையாளர்களுக்கு 7.25% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.75% வட்டியும் வழங்கப்படுகிறது.

2 Min Read
தமிழ்நாடு

விஜய் முதல்வரானதும் எம்எல்ஏ செய்த ஜலபிரதட்சணம்: வீடியோ வைரல்!

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்ததும், எம்எல்ஏ எம்வி கருப்பையா தனது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக கிணற்றில் ஜலபிரதட்சணம் செய்தார். இதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

1 Min Read
சென்னையில் உள்ள உயர்நீதிமன்ற கட்டிடம்
தமிழ்நாடு

செந்தில்பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி – ஐகோர்ட் உத்தரவு

செந்தில்பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. வேட்புமனுவில் சொத்து விவரங்கள், குற்ற வழக்குகள் மறைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு.

1 Min Read
தமிழ்நாடு

டாஸ்மாக் அலுவலகம் முன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: காலி பாட்டில் சேகரிப்புக்கு எதிர்ப்பு

சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு காலி மதுபாட்டில்களை தனி முகமை மூலம் சேகரிக்க வேண்டும், அதில் டாஸ்மாக் பணியாளர்களை ஈடுபடுத்தக்கூடாது என வலியுறுத்தி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?