வீடுகளில் வளர்க்கப்படும் துளசி செடி, அதன் ஆன்மீக முக்கியத்துவத்திற்கு பெயர் பெற்றது மட்டுமல்லாமல், ஏராளமான மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. தினமும் துளசி இலைகளை உட்கொள்வது பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும் என்று கூறப்படுகிறது.
ஆரோக்கியமான மனிதர்கள் தினமும் துளசி இலைகளை சாப்பிட்டு வந்தால், வாழ்நாள் முழுவதும் குடல், வயிறு மற்றும் வாய் தொடர்பான பிரச்சனைகள் அண்டாது. துளசி இலைகள் செரிமான சக்தியை அதிகரித்து, உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பதுடன், வாய் துர்நாற்றத்தையும் போக்கும்.
துளசியை ஒரு சிறந்த கிருமி நாசினியாகவும் பயன்படுத்தலாம். துளசி இலைகளை தண்ணீரில் போட்டு ஊறவைத்து அந்த நீரை தொடர்ந்து பருகி வந்தால், நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் குறையும்.
மேலும், துளசி உடலில் அழுத்த எதிர்ப்பு தன்மையை வளர்க்கிறது. இது உடலில் ஆண்டி-ஆக்ஸிடன்ட் அளவை அதிகரித்து, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் 10 துளசி இலைகளை மென்று சாப்பிடுவது இரத்தத்தைச் சுத்திகரிக்கும். இதனால் மார்பு வலி, தொண்டை வலி மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
தொடர்ந்து துளசியை உட்கொண்டு வந்தால், காது வலி, வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக் கோளாறுகள் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.
உடலின் வியர்வை நாற்றத்தைப் போக்க, குளிக்கும் நீரில் முந்தைய நாள் இரவே சிறிது துளசி இலைகளைப் போட்டு வைத்து, மறுநாள் அந்த நீரில் குளித்தால் நாற்றம் நீங்கும்.
தோலில் பல நாட்களாக இருக்கும் படை மற்றும் சொறி போன்ற பிரச்சனைகளையும் துளசி இலைகளால் குணப்படுத்த முடியும். துளசி இலைகளை எலுமிச்சை சாறுடன் சேர்த்து நன்கு மைபோல் அரைத்து, அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படை, சொறி போன்றவை மறைந்துவிடும்.
சிறுநீர் கோளாறுகளால் அவதிப்படுபவர்கள், துளசி விதைகளை நன்கு அரைத்து உட்கொள்ள வேண்டும். அதனுடன் போதுமான அளவு தண்ணீர் அருந்தி வந்தால், சிறுநீர் பிரச்சனைகள் சரியாகும்.
