MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தொழில் முதலீட்டை ஈர்ப்பது இப்படித்தானா? – இபிஎஸ் கேள்வி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தொழில் முதலீட்டை ஈர்ப்பது இப்படித்தானா? – இபிஎஸ் கேள்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தொழில் முதலீட்டை ஈர்ப்பது இப்படித்தானா? – இபிஎஸ் கேள்வி

தமிழ்நாடு

தொழில் முதலீட்டை ஈர்ப்பது இப்படித்தானா? – இபிஎஸ் கேள்வி

Fernandez
Last updated: செப்டம்பர் 13, 2026 1:42 மணி
Fernandez
Share
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி
SHARE

தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக முதலமைச்சர் லண்டன் சென்றிருக்கும் நிலையில், அவர் கொண்டுவரும் முதலீடுகள் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

திருச்சியில் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், தற்போதைய திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து கடுமையாக விமர்சித்தார்.

"திமுக தனது தேர்தல் வாக்குறுதியின்படி விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்யவில்லை. அதிமுக ஆட்சிக் காலத்தில் தடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் மின்வெட்டு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் மக்களுக்கு நலன் கிடைத்தது. தற்போதைய திமுக ஆட்சியில் விலைவாசி உயர்ந்துள்ளது. விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுவதிலும் தாமதம் நிலவுகிறது" என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

மேலும், முதலமைச்சர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்றிருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், செய்தித்தாள்களில் வேறு புகைப்படங்கள் வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இது குறித்து அவர், "முதலமைச்சர் விஜய், தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்றிருப்பதாக சொன்னார்கள். ஆனால், இன்றைக்கு வேற ஃபோட்டோதான் வந்துருக்கிறது" என்று விமர்சித்தார்.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் அதிமுக வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். திமுக ஆட்சியில் எந்த நன்மையும் கிடைக்காததால் பொதுமக்கள் போராடி வருவதாகவும் அவர் கூறினார்.

நிதி நெருக்கடி நிலவும் இந்த நேரத்தில், ரூ.1200 கோடிக்கு புதிய தலைமைச் செயலகம் தேவையில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதிமுக எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கிவிட்டதாகக் கூறிய அவர், "குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து அழைப்பதுபோல் அதிமுக எம்.எல்.ஏக்களை தூக்கி சென்றுவிட்டனர். மரகதம் குமரவேலும், சத்தியபாமாவும் விலை போய்விட்டனர். மக்கள் நலனிற்காக ஒரு துரும்பைக் கூட திமுக கிள்ளிப்போடவில்லை. குதிரை பேரத்திற்கு எம்.எல்.ஏக்கள் விலை போனதால் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. எந்தவித மக்கள் பணியும் செய்யாமல் திமுகவினர் ஆட்சிக்கு வந்துள்ளனர்" என்று கடுமையாக விமர்சித்தார்.

தாராபுரம், மதுராந்தகம் எம்.எல்.ஏக்கள் சுயநலத்திற்காக பதவியை ராஜினாமா செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அதிமுகஇடைத்தேர்தல்எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு அரசியல்திமுகதொழில் முதலீடுமின்வெட்டுமுதலமைச்சர் விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article நடிகர் விஜய் சேதுபதி தலைமை என்றால் என்ன? – விஜய் சேதுபதி பேச்சு வைரல்!
Next Article இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 138 ஆண்டுகளில் இல்லாத விசித்திர சாதனை: இங்கிலாந்து-பாகிஸ்தான் டெஸ்ட் தொடர்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பீகார் எம்எல்ஏ ஆனந்த் சிங் மகள் திருமணத்தில் மணமகனுக்கு பரிசளிக்கப்பட்ட கார்

ரூ.2.5 கோடியில் கார்: பீகார் எம்எல்ஏ மகள் திருமணத்தில் மாப்பிள்ளைக்கு அசத்தல் பரிசு!

பீகாரில் எம்எல்ஏ ஆனந்த் சிங் மகள் திருமணத்தில், மணமகனுக்கு ரூ.2.5 கோடியில் கார்…

நவம்பர் 11, 2026

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விவாகரத்து?

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தனது…

நவம்பர் 10, 2026

காற்று மாசு மரணங்களை மறைக்கிறதா மோடி அரசு? காங்கிரஸ் கேள்வி

இந்தியாவில் காற்று மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளை மத்திய…

நவம்பர் 9, 2026

பாபர் மசூதி இடிப்பு: சோனியா காந்தியின் கருத்து – பாஜக விமர்சனம்

1992ல் பாபர் மசூதி இடிப்பைக் கண்டு கண்கலங்கியதாக…

நவம்பர் 9, 2026

மாரடைப்பால் இறந்த வேட்பாளர் திவ்யா வெற்றி பெற்றார்

ஆந்திராவில் மண்டல பரிஷத் தேர்தலில் போட்டியிட்ட ஜனசேனா…

நவம்பர் 8, 2026

You Might Also Like

தமிழ்நாடு

விடுமுறை தினம்: காசிமேட்டில் மீன் வாங்க அலைமோதிய மக்கள்

விடுமுறை தினத்தை முன்னிட்டு, சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அசைவ பிரியர்கள் கூட்டம் அலைமோதியது. மீன் வரத்து அதிகமாக இருந்ததால், விலையும் சற்று குறைந்து காணப்பட்டது.

1 Min Read
மின்சார பேருந்துகள் சாலையில் இயங்கும் காட்சி
தமிழ்நாடு

மின்சார பேருந்துகளில் பழுது: OHM நிறுவனத்திற்கு ரூ.9 கோடி அபராதம்

சென்னையில் இயங்கும் மின்சார பேருந்துகளில் ஏற்பட்ட பழுதுகள் காரணமாக, OHM நிறுவனம் தமிழக அரசுக்கு ரூ.9 கோடி அபராதம் செலுத்தியுள்ளது.

2 Min Read
தமிழ்நாடு

ஈரோடு டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம்: 4-வது நாளாக நீடிப்பு

ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் 4-வது நாளாக நீடிக்கிறது. காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி நடைபெறும் இந்தப் போராட்டத்தால் மதுப்பிரியர்கள்…

1 Min Read
சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் ஆஸ்டின் பேசுகிறார்
தமிழ்நாடு

சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பெலிக்ஸ் ஜெரால்டை நீக்க திமுக உறுப்பினர் கோரிக்கை

சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பெலிக்ஸ் ஜெரால்டு தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பதைத் தடுக்க வேண்டும் அல்லது அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என திமுக உறுப்பினர் ஆஸ்டின் சட்டப்பேரவையில்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?