தொழில் முதலீட்டை ஈர்ப்பது இப்படித்தானா? – இபிஎஸ் கேள்வி

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக முதலமைச்சர் லண்டன் சென்றிருக்கும் நிலையில், அவர் கொண்டுவரும் முதலீடுகள் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

திருச்சியில் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், தற்போதைய திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து கடுமையாக விமர்சித்தார்.

"திமுக தனது தேர்தல் வாக்குறுதியின்படி விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்யவில்லை. அதிமுக ஆட்சிக் காலத்தில் தடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் மின்வெட்டு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் மக்களுக்கு நலன் கிடைத்தது. தற்போதைய திமுக ஆட்சியில் விலைவாசி உயர்ந்துள்ளது. விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுவதிலும் தாமதம் நிலவுகிறது" என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

மேலும், முதலமைச்சர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்றிருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், செய்தித்தாள்களில் வேறு புகைப்படங்கள் வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இது குறித்து அவர், "முதலமைச்சர் விஜய், தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்றிருப்பதாக சொன்னார்கள். ஆனால், இன்றைக்கு வேற ஃபோட்டோதான் வந்துருக்கிறது" என்று விமர்சித்தார்.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் அதிமுக வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். திமுக ஆட்சியில் எந்த நன்மையும் கிடைக்காததால் பொதுமக்கள் போராடி வருவதாகவும் அவர் கூறினார்.

நிதி நெருக்கடி நிலவும் இந்த நேரத்தில், ரூ.1200 கோடிக்கு புதிய தலைமைச் செயலகம் தேவையில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதிமுக எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கிவிட்டதாகக் கூறிய அவர், "குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து அழைப்பதுபோல் அதிமுக எம்.எல்.ஏக்களை தூக்கி சென்றுவிட்டனர். மரகதம் குமரவேலும், சத்தியபாமாவும் விலை போய்விட்டனர். மக்கள் நலனிற்காக ஒரு துரும்பைக் கூட திமுக கிள்ளிப்போடவில்லை. குதிரை பேரத்திற்கு எம்.எல்.ஏக்கள் விலை போனதால் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. எந்தவித மக்கள் பணியும் செய்யாமல் திமுகவினர் ஆட்சிக்கு வந்துள்ளனர்" என்று கடுமையாக விமர்சித்தார்.

தாராபுரம், மதுராந்தகம் எம்.எல்.ஏக்கள் சுயநலத்திற்காக பதவியை ராஜினாமா செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version