MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முதலமைச்சர் விஜயை கடுமையாக சாடிய கனிமொழி: சட்ட-ஒழுங்கு குறித்து பதில் இல்லை!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முதலமைச்சர் விஜயை கடுமையாக சாடிய கனிமொழி: சட்ட-ஒழுங்கு குறித்து பதில் இல்லை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - முதலமைச்சர் விஜயை கடுமையாக சாடிய கனிமொழி: சட்ட-ஒழுங்கு குறித்து பதில் இல்லை!

தமிழ்நாடு

முதலமைச்சர் விஜயை கடுமையாக சாடிய கனிமொழி: சட்ட-ஒழுங்கு குறித்து பதில் இல்லை!

Fernandez
Last updated: செப்டம்பர் 8, 2026 8:23 மணி
Fernandez
Share
திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி
SHARE

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, முதலமைச்சர் விஜய்யின் சட்டமன்ற உரை குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். முதலமைச்சர் சட்டப்பேரவையில் காவல்துறை மானியம் குறித்து பேசுவார் என்றும், எதிர்க்கட்சிகள் எழுப்பிய சட்டம் ஒழுங்கு தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிப்பார் என்றும் எதிர்பார்த்த நிலையில், அதற்கு மாறாக பழைய கமிஷன் அறிக்கைகளைப் பற்றி பேசி இருக்கிறார்.

காவல்துறை மானியம் தொடர்பாக முதலமைச்சர் என்ன அறிவிப்புகளை வெளியிடுவார், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை மேம்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை அறிய மக்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஏனெனில், முதலமைச்சர் விஜய்யாக பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. ஒவ்வொரு நாளும் கொலைகள் நடைபெறும் ஒரு மோசமான சூழ்நிலைக்கு தமிழ்நாடு சென்று கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில், இதற்கெல்லாம் முதலமைச்சர் என்ன பதில் சொல்லப் போகிறார், இதைச் சரிசெய்ய என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது குறித்து மக்களுக்கு தெளிவான பதிலை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அதற்குப் பதிலாக பழைய கதைகளை சட்டமனறத்தில் பேசியிருக்கிறார். ஒரு பைசாவிற்குக்கூட பிரயோஜனம் இல்லாத சில கமிஷன் அறிக்கைகளை எடுத்துப் படித்துள்ளார். 50 ஆண்டுகளுக்கு முந்தைய, சட்டரீதியாக பயன்படுத்த முடியாத, நீதிமன்றத்தில் சமர்ப்பித்தாலும் ஏற்றுக்கொள்ளப்படாத, அதன் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத அறிக்கைகளை வாசித்துவிட்டு, உலகமே இதுவரை கண்டறியாத மிகப்பெரிய உண்மையை கண்டறிந்தவர் போல முதலமைச்சர் பேசியிருக்கிறார்.

எமர்ஜென்சி காலகட்டத்தில் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, நாடு முழுவதும் ஜனநாயகத்திற்காக எத்தனை பேர் போராடி சிறைக்குச் சென்றிருக்கிறார்கள்? எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார்கள்? அவர்களுடன் இருந்த கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த எத்தனை தோழர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள்? இந்த வரலாறு முதலமைச்சருக்கு தெரிய வேண்டும். மற்றவர்கள் மீது சேற்றை அள்ளி வீசுவதற்காக மட்டுமே சட்டமன்றம் இருக்கிறது என்ற நிலையை நாம் இன்று பார்க்கிறோம். நிச்சயமாக மக்கள் இதற்குத் தகுந்த பதிலை அவர்களுக்கு சொல்லித் தருவார்கள்.

முன்னதாக முதலமைச்சருக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்க வேண்டும். சட்டமன்றத்தில் கேள்வி கேட்கப்பட்டால் அதற்கு பதில் சொல்ல வேண்டும். அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறார்கள் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அதை புரிந்துகொள்ளாமல் மற்றவர்கள் மீது குற்றம் சுமத்துவதுதான் சட்டமன்ற நடவடிக்கை என்று நினைத்து, சட்டமன்றத்தின் மாண்பையே கேலிக்கூத்தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும், முதலமைச்சரின் இன்றைய பேச்சு மிகவும் கீழ்த்தரமான நிலையைத் தொட்டுவிட்டது என்ற அளவுக்கு இருந்தது. தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலைகள், பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் உள்ளிட்டவை தனிப்பட்ட பிரச்சினைகள் என்றும், இதனால் தமிழ்நாடு அளவில் பெரிய அளவில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படவில்லை என்றும் கூறுவது போல பேசியிருக்கிறார்.

சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பேற்க வேண்டிய ஒரு முதலமைச்சர் எப்படி மக்களே பார்த்துத் திருந்த வேண்டும், மக்களே பார்த்துத் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். இதையெல்லாம் ஒரு முதலமைச்சர் தன்னுடைய பொறுப்புணர்வுடன் பேசுகிறாரா என்ற கேள்வி எழுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:DMKMK StalinTamil Nadu Assemblyகனிமொழிகாவல்துறை மானியம்சட்டம் ஒழுங்குசென்னை விமான நிலையம்தமிழ்நாடு சட்டமன்றம்திமுகமுதலமைச்சர் விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article உத்தரப் பிரதேச தேர்தல் களத்தில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் டிம்பிள் யாதவ் உ.பி. தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிராக அகிலேஷ், டிம்பிள் வியூகம்
Next Article சாலையில் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை ஆட்டோவில் இருந்து வீசப்பட்ட பச்சிளம் குழந்தை: பரபரப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

எலான் மஸ்க் ஸ்டார்லிங்க் தாமதம் குறித்து கேள்வி எழுப்புகிறார்

இந்தியாவின் உண்மையான முதலாளி அம்பானியா? – எலான் மஸ்க் கேள்வி

இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவை தொடங்குவதில் தாமதம் ஏற்படுவதாகக் கூறி, மத்திய…

அக்டோபர் 9, 2026

பிரபல நடிகர் நானா படேகர் காலமானார் – இரங்கல் குவிதல்

பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மாரடைப்பால்…

அக்டோபர் 9, 2026

ராகுல் காந்தி ‘ஒன் மேன் ஷோ’ நடத்துகிறாரா? இண்டியா கூட்டணியில் சலசலப்பு

'இண்டியா' கூட்டணியில் நிலவும் உள் முரண்பாடுகள் மற்றும்…

அக்டோபர் 9, 2026

எஜமானரைக் காக்க பாம்புடன் சண்டையிட்டு வென்ற நாய்!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், விவசாயி டோனியின்…

அக்டோபர் 9, 2026

குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணி: ராகுல் காந்தி அழைப்பு

டெல்லியில் இன்று குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி…

அக்டோபர் 9, 2026

You Might Also Like

முதல்வர் விஜய், முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். தாயார் ருக்மணி அம்மாளின் காலில் விழுந்து ஆசி பெறுதல்
தமிழ்நாடு

விஜய் காலில் விழுந்து ஆசி பெற்ற பி.டி.ஆர் தாயார் ருக்மணி

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், முதல்வர் விஜய், முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். தாயார் ருக்மணி அம்மாளின் காலில் விழுந்து ஆசி பெற்ற நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

2 Min Read
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்
தமிழ்நாடு

மதுரை வருகை: மீனாட்சி அம்மன் தரிசனம், புதிய திட்டங்கள் தொடக்கம் – முதல்வர் விஜய்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம், 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' தொடக்கம், புனரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகம் திறப்பு என முதல்வர் விஜய்யின் மதுரைப் பயணம்…

3 Min Read
பிறப்பு சான்றிதழ் வழங்கும் அரசு அலுவலகம்
தமிழ்நாடு

பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள்!

பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 கடைசி நாள். 15 வருடங்களுக்கு முன்னர் பிறந்த குழந்தைகளுக்கும் பெயர் சேர்க்க வாய்ப்பு. ரூ. 200 கட்டணம்…

2 Min Read
நடிகை மீஷா கோஷல் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்
தமிழ்நாடு

விஜய் ரசிகர்களை வெறுக்கிறீர்களா? நடிகை மீஷா கோஷல் கேள்வி

நடிகை மீஷா கோஷல், விஜய் ரசிகர்கள் மீது காட்டப்படும் வெறுப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். 'ஜனநாயகன்' பட வெளியீட்டை மாணவர் போராட்டத்துடன் தொடர்புபடுத்துவது அர்த்தமற்றது என்றும் அவர்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?