MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: பேராசிரியர்கள் சிக்கினர்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: பேராசிரியர்கள் சிக்கினர்!
இந்தியா

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: பேராசிரியர்கள் சிக்கினர்!

Admin
Last updated: May 17, 2026 10:29 am
Admin
Share
SHARE

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், வேதியியல் மற்றும் தாவரவியல் பேராசிரியர்கள் முக்கிய குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) சார்பில் நாடு முழுவதும் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்களில் இருந்து பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் தலா 3 கேள்விகளை வரையறுத்து, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் வினாத்தாள் தயாரிக்கப்படுகிறது.

ஒவ்வொரு நீட் தேர்வுக்கும் இரு வகையான வினாத்தாள்கள் தயாரிக்கப்படுகின்றன. முக்கிய வினாத்தாள் அந்தந்த மாநிலங்களில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி பாதுகாப்பு பெட்டகங்களிலும், மற்றொரு வினாத்தாள் கனரா வங்கி பாதுகாப்பு பெட்டகங்களிலும் வைக்கப்படும். கடந்த 3-ம் தேதி நடந்த தேர்வின் போது, எஸ்.பி.ஐ வங்கி பாதுகாப்பு பெட்டகங்களில் இருந்த வினாத்தாள்களே வழங்கப்பட்டன. ஆனால் அன்றைய தினமே வினாத்தாள் கசிவு புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலம் சிகார் நகரில் உள்ள நீட் பயிற்சி மைய ஆசிரியர் ஒருவர் உள்ளூர் போலீஸ் நிலையத்திலும், தேசிய தேர்வு முகமைக்கும் புகார் அளித்தார். இதன் விசாரணையில், நீட் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே கசிந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. தற்போது வரை இந்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிபிஐ விசாரணையில், ராஜஸ்தான் ஜெய்ப்பூரைச் சேர்ந்த தினேஷ் பிவால், அவரது சகோதரர்கள் மங்கிலால் பிவால், விகாஷ் பிவால் ஆகியோர் லட்சக்கணக்கில் வினாத்தாளை விற்று MBBS படிக்கும் உறவினர்களுக்கு வழங்கியது தெரியவந்துள்ளது. மேலும், மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த மணிஷா, நாசிக் நகரைச் சேர்ந்த சுபம் காரினார், புனேவைச் சேர்ந்த ஏஜென்ட் தனஞ்செய் லோகாண்டே, ஹரியானா குருகிராமின் ஆயுர்வேத மாணவர் யாஷ் யாதவ் என பலரும் வினாத்தாள் விற்பனையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களால் ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஹரியானா, ஆந்திரா, தெலங்கானா, காஷ்மீர், பீகார், டெல்லி, உத்தரகாண்ட், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வினாத்தாள் கசிந்துள்ளது.

இந்த விவகாரத்தில், வினாத்தாள் தயாரிப்புக் குழுவில் இடம்பெற்றிருந்த மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வேதியியல் பேராசிரியர் பி.வி. குல்கர்னி மற்றும் தாவரவியல் பேராசிரியை மணிஷா குருநாத் ஆகியோர் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இரு பேராசிரியர்கள் மூலமாகவே வினாத்தாள் கசிந்திருக்கலாம் என்றும், இவர்களுக்கும் என்.டி.ஏ. மூத்த அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:AIADMKNEET ExamPaper Leakகல்விநீட் தேர்வுவினாத்தாள் கசிவு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கொளத்தூர் மக்கள் கேடுகெட்டவர்கள்: திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் சர்ச்சை பேச்சு
Next Article விராட் கோலி விக்கெட்டை எடுத்த பிரின்ஸ் யாதவ்: இந்திய அணியில் வாய்ப்பு?
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தெலங்கானாவில் வாக்காளர் சரிபார்ப்பு: ஜூன் 25 முதல் சிறப்புப் பணி!

தெலங்கானாவில் வாக்காளர் சரிபார்ப்புப் பணிகள் ஜூன் 25 முதல் ஜூலை 24 வரை…

May 17, 2026

நாடாளுமன்ற குழு கூட்டங்களில் 53% பங்கேற்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

மத்திய அரசின் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டங்களில் உறுப்பினர்களின்…

May 17, 2026

ராஜ்தானி விரைவு ரெயில்: நடுரோட்டில் தீ விபத்து – பயணிகள் தப்பினர்!

ராஜஸ்தான் அருகே ராஜ்தானி விரைவு ரெயிலில் தீ…

May 17, 2026

நீட் தேர்வு மைய மாற்றம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக, மாணவர்கள்…

May 17, 2026

சத்தீஸ்கரில் பெட்ரோல் தட்டுப்பாடு: ரூ.300 கட்டுப்பாடு!

சத்தீஸ்கர் மாநிலத்தில் பெட்ரோல் தட்டுப்பாடு வதந்திகள் காரணமாக,…

May 17, 2026

You Might Also Like

இந்தியா

டெல்லியில் அதிர்ச்சி: பேருந்தில் பெண்ணுக்கு கொடூர பாலியல் வன்கொடுமை!

டெல்லியில் பேருந்தில் வைத்து மூன்று குழந்தைகளின் தாயான பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓட்டுநர், நடத்துநர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1 Min Read
இந்தியா

அமெரிக்காவில் ஹைதராபாத் பெண் இன்ஜினியர் மர்ம மரணம்: நீச்சல் குளத்தில் சடலமாக மீட்பு

அமெரிக்காவில் தனது தோழியின் திருமணத்திற்கு சென்ற ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் இன்ஜினியர் ஸ்ரீவீணா (28) நீச்சல் குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், நன்றாக நீச்சல் தெரிந்த அவருக்கு…

1 Min Read
தமிழ்நாடு

அதிமுகவில் பிளவு: கே.சி.வீரமணி திடீர் ஆதரவு – ஈ.பி.எஸ்.க்கு ஷாக்!

அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி திமுகவிற்கு ஆதரவு தெரிவித்து, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

2 Min Read
இந்தியா

பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு – என்ஐஏ விசாரணை தீவிரம்

பெங்களூரு: பிரதமர் மோடி நேற்று கர்நாடகா சென்றிருந்த நிலையில், அவர் செல்லும் பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது தொடர்பாக…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?