MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஆகஸ்ட் ஜிஎஸ்டி வசூல் சரிவு: மாநில அரசுக்கு சிவப்பு எச்சரிக்கை – டி.ஆர்.பி.ராஜா
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஆகஸ்ட் ஜிஎஸ்டி வசூல் சரிவு: மாநில அரசுக்கு சிவப்பு எச்சரிக்கை – டி.ஆர்.பி.ராஜா
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ஆகஸ்ட் ஜிஎஸ்டி வசூல் சரிவு: மாநில அரசுக்கு சிவப்பு எச்சரிக்கை – டி.ஆர்.பி.ராஜா

தமிழ்நாடு

ஆகஸ்ட் ஜிஎஸ்டி வசூல் சரிவு: மாநில அரசுக்கு சிவப்பு எச்சரிக்கை – டி.ஆர்.பி.ராஜா

Fernandez
Last updated: செப்டம்பர் 4, 2026 12:30 மணி
Fernandez
Share
முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
SHARE

தமிழ்நாட்டின் வருவாய் ஈட்டும் திறனுக்கு ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் புள்ளிவிவரங்கள் ஒரு சிவப்பு எச்சரிக்கையை விடுப்பதாக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். இந்த நிலை தொடர்ந்தால், மாநில அரசு செலவுகளைக் குறைப்பது அல்லது மேலும் கடன் வாங்குவது போன்ற கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.

தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தளத்தில் பதிவிட்டிருந்த அவர், "தமிழ்நாட்டின் வருவாய் இயந்திரம் சிவப்பு எச்சரிக்கை காட்டுகிறது. இதே நிலை தொடர்ந்தால், செலவுகளைக் குறைப்பதா, மேலும் கடன் வாங்குவதா என்ற கடினமான நிலைக்கு தமிழ்நாடு அரசு விரைவில் தள்ளப்படலாம்" என குறிப்பிட்டுள்ளார்.

ஆகஸ்ட் மாதத்திற்கான ஜிஎஸ்டி புள்ளிவிவரங்கள் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டியவை என்றும், 2025 ஆகஸ்டில் ரூ.10,329 கோடியாக இருந்த தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வசூல், 2026 ஆகஸ்டில் ரூ.10,189 கோடியாகக் குறைந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது மைனஸ் 1% சரிவாகும்.

ஆனால், இதே காலகட்டத்தில் இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி வசூல் 9% அதிகரித்துள்ளது. மேலும், கர்நாடகா 13%, குஜராத் 15%, தெலங்கானா 16%, உத்தரப் பிரதேசம் 19%, மகாராஷ்டிரா 8% என மற்ற மாநிலங்கள் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. ஆனால், தமிழ்நாடு மட்டும் மைனஸ் 1% சரிவைச் சந்தித்துள்ளது.

சாதாரண மக்களுக்கு ஜிஎஸ்டி எண்கள் ஏன் முக்கியம் என்றால், தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாயில் சுமார் 38% எஸ்ஜிஎஸ்டி மூலமாக மட்டுமே கிடைக்கிறது. வளர்ச்சிப் பணிகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிலையில், கடன் சுமையையும் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது.

இந்த கணக்கு சரியாக வர வேண்டுமென்றால், அரசின் வருவாய் கட்டாயம் வளர வேண்டும். ஆனால் ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல், இதற்கு நேர்மாறாக மைனஸ் 1% சரிவைக் காட்டியுள்ளது. இது ஒரு மாத புள்ளிவிவரத்தை வைத்து ஒரு ஆண்டுக்கான போக்கைத் தீர்மானிக்க முடியாது என்று சிலர் கூறலாம்.

உண்மைதான். ஆனால் இந்தியா 9% வளரும்போதும், நம்மோடு போட்டியிடும் முக்கிய மாநிலங்கள் அனைத்தும் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்யும்போது, தமிழ்நாடு மட்டும் மைனஸ் 1%-ல் இருப்பது சாதாரணமாகக் கடந்து செல்ல முடியாத ஒன்று. இது நிச்சயம் ஒரு முக்கிய எச்சரிக்கை மணி.

இந்த நிலை தொடர்ந்தால், பற்றாக்குறையாகும் பணத்தை எங்கிருந்து கொண்டு வரப் போகிறார்கள்? மேலும் கடன் வாங்கப் போகிறார்களா? அல்லது வேறு வரிகளை உயர்த்தப் போகிறார்களா? சாலைகள், உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கான செலவுகளைக் குறைக்கப் போகிறார்களா? வருவாய் இல்லாமல் பட்ஜெட் வெறும் காகிதக் கணக்குதான் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த மைனஸ் 1% ஜிஎஸ்டி சரிவு ஒரு தொடர்கதையாக மாறுவதை தமிழ்நாடு தாங்க முடியாது என்றும், இது கட்டுப்படுத்த முடியாத சரிவாக மாறுவதற்கு முன்பாவது தற்போதைய அரசு விழித்துக்கொள்ளுமா என்றும், இந்த சரிவுக்கு என்ன காரணம் என்று அரசு தெளிவாக விளக்க வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:GSTRevenue DeclineTamil Nadu GovernmentTRB Rajaடி.ஆர்.பி. ராஜாதமிழ்நாடு அரசுவருவாய் சரிவுஜிஎஸ்டி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article உலக வானிலை அமைப்பின் எச்சரிக்கை பதாகை 2027 வரை நீடிக்கும் அதிதீவிர ‘எல் நினோ’: உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை
Next Article பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறார் ஆசிரியர்கள் கவலையின்றி வாழ அன்புமணி ராமதாஸ் வாழ்த்து
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மணிப்பூர் கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் தொடர்பான செய்தி

மணிப்பூரில் கள்ளச்சாராயம்: 11 பேர் பலி, 180 பேர் மருத்துவமனையில்

மணிப்பூர் மாநிலம் சந்தேல் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும்…

நவம்பர் 21, 2026

40 ஆண்டுகள் தனிமை: சென்னைப் பெண் மரணம் – உருக்கமான பதிவு வைரல்

மும்பையில் சுமார் 40 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்து…

நவம்பர் 20, 2026

பிரதமரை புகழ்ந்த சாம் பிட்ரோடாவை நீக்க அயலக காங். வலியுறுத்தல்

பிரதமர் மோடியை புகழ்ந்து பேசிய அயலக இந்திய…

நவம்பர் 20, 2026

அக்வான் புயல்: 6 மாநிலங்களில் தயார் நிலையில் 31 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள்

‘அக்வான்’ புயலை எதிர்கொள்ள 5 மாநிலங்கள் மற்றும்…

நவம்பர் 20, 2026

இந்தியா – இத்தாலி வர்த்தகம்: 2029க்குள் ரூ.2 லட்சம் கோடி இலக்கு

இந்தியா மற்றும் இத்தாலி ஆகிய இரு நாடுகளும்…

நவம்பர் 20, 2026

You Might Also Like

உதயநிதி ஸ்டாலின் சைல்டுலைன் சம்பளம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்
தமிழ்நாடு

2 மாத சம்பளம் பாக்கி: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

சைல்டுலைன் (1098) பணியாளர்களுக்கு 2 மாத சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசு இப்பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தல்.

2 Min Read
காதல் தொல்லை காரணமாக மாணவியின் தந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த செய்தி
தமிழ்நாடு

காதல் தொல்லை: கண்டித்த மாணவி தந்தையை கொன்ற வாலிபர்

காதல் தொல்லை கொடுத்ததை கண்டித்த மாணவியின் தந்தையை வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் 3 பேரை கைது…

1 Min Read
முதலமைச்சர் ஜோசப் விஜய் காமராஜர் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்கிறார்
தமிழ்நாடு

காமராஜர் காலை உணவு திட்டம்: முதல்வர் விஜய் நாளை விரிவாக்கம் செய்கிறார்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் நாளை முதல் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. முதல்வர் ஜோசப் விஜய் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

2 Min Read
தமிழ்நாடு

தாம்பரம் ரயில் நிலையம்: ரூ.24 கோடியில் பிரம்மாண்ட மேம்பாட்டுப் பணிகள்!

சென்னையின் முக்கிய ரயில் நிலையமான தாம்பரம், ரூ.24 கோடியில் நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. புதிய நடைமேம்பாலம், மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள் என பல வசதிகள் பயணிகளுக்காக.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?