MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சேலத்தில் 7 மாத கர்ப்பிணி சடலமாக மீட்பு: அதிர்ச்சியில் உறவினர்கள்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சேலத்தில் 7 மாத கர்ப்பிணி சடலமாக மீட்பு: அதிர்ச்சியில் உறவினர்கள்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சேலத்தில் 7 மாத கர்ப்பிணி சடலமாக மீட்பு: அதிர்ச்சியில் உறவினர்கள்

தமிழ்நாடு

சேலத்தில் 7 மாத கர்ப்பிணி சடலமாக மீட்பு: அதிர்ச்சியில் உறவினர்கள்

Fernandez
Last updated: செப்டம்பர் 4, 2026 6:53 காலை
Fernandez
Share
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே விவசாய கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணி சடலம்
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே விவசாய கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணி சடலம்.
SHARE

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி முதல் காணாமல் போன 7 மாத கர்ப்பிணி கோகிலாவின் உடல், சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கோகிலா காணாமல் போனது குறித்து அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தும், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில், சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டத்திற்குட்பட்ட கொங்கணாபுரம் ஒன்றியம் கோண சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த பேராக்கவுண்டரின் மகள் கோகிலா (23), திருமணமாகாமல் வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி அவருக்கு ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக, பெற்றோர் அவரை சமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்தபோது, அவர் 7 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. கர்ப்பத்திற்கு காரணமான கன்னியாம்பட்டியைச் சேர்ந்த மாரி என்பவரின் மகன் அம்மாசி என்பவரை காவல் நிலையம் வரவழைத்து விசாரணை நடத்தினர். பின்னர், ஆகஸ்ட் 26-ம் தேதி அம்மாசியுடன் கோகிலாவையும் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி காலை கோகிலா காணாமல் போய்விட்டதாக அவரது தந்தை பேராக் கவுண்டரிடம் அம்மாசி கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து, பேராக் கவுண்டர் தனது மகள் கோகிலா காணவில்லை என கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையில், வெள்ளாளபுரம் கிராமம் தானக்குட்டி வளவைச் சேர்ந்த கோவிந்தம்மாள் என்பவருக்குச் சொந்தமான விவசாய கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. கிணற்றை எட்டிப் பார்த்தபோது, வெள்ளை நிற சாக்குப்பையில் கட்டப்பட்ட நிலையில் ஒரு மூட்டை மிதந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், கொங்கணாபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த எடப்பாடி தீயணைப்புத் துறை வீரர்கள், விவசாய கிணற்றில் கிடந்த மூட்டையை மிகுந்த சிரமத்துடன் வெளியே எடுத்தனர். மூட்டையை அவிழ்த்துப் பார்த்தபோது, அதில் பெண் சடலம் இருப்பதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்ட பெண் கோகிலாவாக இருக்கலாம் என சந்தேகமடைந்தனர். இதையடுத்து, அவரது உறவினர்களை வரவழைத்து அடையாளம் காட்டினர். அப்போது, திருமணமாகாமல் 7 மாத கர்ப்பிணியாக இருந்த கோகிலாதான் அந்த சடலம் என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கோகிலாவின் இறப்பிற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Body RecoveryEdappadiMurder InvestigationPregnant WomanSalemTamil Naduஎடப்பாடிகர்ப்பிணிகொலைசடலம்சேலம்தமிழ்நாடுவிசாரணை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article வீட்டில் குட்டி கிருஷ்ணரை வரவேற்கும் சிறப்பு வழிபாடுகள் கோகுலாஷ்டமி: குட்டி கிருஷ்ணரை வீட்டிற்கு வரவேற்கும் சிறப்பு வழிபாடுகள்!
Next Article அதானி குழுமத்தின் முதலீட்டுத் திட்டம் குறித்த அறிவிப்பு பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் ரூ.5 லட்சம் கோடி முதலீடு: அதானி குழுமம் திட்டம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

மதுரை உயர் நீதிமன்றக் கட்டிடம்
தமிழ்நாடு

பழனி நில மோசடி: சிபிஐ விசாரணை கோரி திமுக, அதிமுக மனுக்கள் – நாளை விசாரணை

பழனி நில மோசடி விவகாரம் தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது நாளை மதுரை உயர்…

1 Min Read
முன்னாள் சபாநாயகர் அப்பாவு
தமிழ்நாடு

நீட் தேர்வுக்கு எதிராக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வெற்றி – அப்பாவு

நீட் தேர்வுக்கு எதிராக 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' நடத்திய போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்றதால் பிரதமர் மோடி அஞ்சியுள்ளார். ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை…

1 Min Read
எம்ஜி விண்ட்சர் EV காரின் வெளிப்புறத் தோற்றம்
ஆட்டோமொபைல்

MG Windsor EV: 15,000 கி.மீ ஓட்டிய அனுபவம் – வாங்கலாமா? வேண்டாமா?

எம்ஜி விண்ட்சர் EV காரை 15,000 கி.மீ ஓட்டிய அனுபவம். நீண்ட காலப் பயன்பாட்டில் இதன் நிறைகள், குறைகள் மற்றும் செயல்திறன் குறித்த விரிவான அலசல்.

2 Min Read
முன்னாள் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
தமிழ்நாடு

தவறான கணக்குடன் திமுக ஆட்சியை ஓட்டுகிறது – முன்னாள் அமைச்சர் ரகுபதி

பொய் சொல்லி ஆட்சியை ஓட்டிவிடலாம் என திமுகவினர் தவறான கணக்கு போட்டுக்கொண்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக ஆட்சியில் ஜெம்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?