சேலத்தில் 7 மாத கர்ப்பிணி சடலமாக மீட்பு: அதிர்ச்சியில் உறவினர்கள்

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே விவசாய கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணி சடலம்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி முதல் காணாமல் போன 7 மாத கர்ப்பிணி கோகிலாவின் உடல், சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கோகிலா காணாமல் போனது குறித்து அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தும், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில், சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டத்திற்குட்பட்ட கொங்கணாபுரம் ஒன்றியம் கோண சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த பேராக்கவுண்டரின் மகள் கோகிலா (23), திருமணமாகாமல் வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி அவருக்கு ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக, பெற்றோர் அவரை சமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்தபோது, அவர் 7 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. கர்ப்பத்திற்கு காரணமான கன்னியாம்பட்டியைச் சேர்ந்த மாரி என்பவரின் மகன் அம்மாசி என்பவரை காவல் நிலையம் வரவழைத்து விசாரணை நடத்தினர். பின்னர், ஆகஸ்ட் 26-ம் தேதி அம்மாசியுடன் கோகிலாவையும் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி காலை கோகிலா காணாமல் போய்விட்டதாக அவரது தந்தை பேராக் கவுண்டரிடம் அம்மாசி கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து, பேராக் கவுண்டர் தனது மகள் கோகிலா காணவில்லை என கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையில், வெள்ளாளபுரம் கிராமம் தானக்குட்டி வளவைச் சேர்ந்த கோவிந்தம்மாள் என்பவருக்குச் சொந்தமான விவசாய கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. கிணற்றை எட்டிப் பார்த்தபோது, வெள்ளை நிற சாக்குப்பையில் கட்டப்பட்ட நிலையில் ஒரு மூட்டை மிதந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், கொங்கணாபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த எடப்பாடி தீயணைப்புத் துறை வீரர்கள், விவசாய கிணற்றில் கிடந்த மூட்டையை மிகுந்த சிரமத்துடன் வெளியே எடுத்தனர். மூட்டையை அவிழ்த்துப் பார்த்தபோது, அதில் பெண் சடலம் இருப்பதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்ட பெண் கோகிலாவாக இருக்கலாம் என சந்தேகமடைந்தனர். இதையடுத்து, அவரது உறவினர்களை வரவழைத்து அடையாளம் காட்டினர். அப்போது, திருமணமாகாமல் 7 மாத கர்ப்பிணியாக இருந்த கோகிலாதான் அந்த சடலம் என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கோகிலாவின் இறப்பிற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version