MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சென்னையில் சட்டவிரோத மது விற்பனை: 16 பேர் கைது!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சென்னையில் சட்டவிரோத மது விற்பனை: 16 பேர் கைது!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சென்னையில் சட்டவிரோத மது விற்பனை: 16 பேர் கைது!

தமிழ்நாடு

சென்னையில் சட்டவிரோத மது விற்பனை: 16 பேர் கைது!

Admin
Last updated: மே 15, 2026 10:00 மணி
Admin
Share
SHARE

சென்னையில் டாஸ்மாக் பார்களில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அபின் தினேஷ் மோதக் உத்தரவின் பேரில், 12 காவல் மாவட்டங்களிலும் துணை ஆணையர்களின் மேற்பார்வையில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்கவும், குற்றவாளிகளைக் கைது செய்யவும் காவல் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேளச்சேரியில், J-7 காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான குழு, ரகசிய தகவலின் பேரில் வேளச்சேரி 100 அடி சாலையில் உள்ள டாஸ்மாக் பாரில் சோதனை நடத்தியது. அங்கு சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த பார் ஊழியர்கள் பிரபாகரன் மற்றும் சபரிமுத்து ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 180 மி.லி. அளவு கொண்ட 16 மதுபாட்டில்கள், 423 பீர்பாட்டில்கள் என மொத்தம் 439 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல், திருவொற்றியூரில் H-8 காவல் நிலைய ஆய்வாளர் குழு, T.H சாலையில் உள்ள டாஸ்மாக் பாரில் சோதனை நடத்தியது. சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட கார்த்திக், பிரபாகரன், கணேசா (எ) குறிஞ்சி கணேசன், வாஞ்சி நாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 8 மதுபாட்டில்கள் மற்றும் ரொக்கம் ரூ.200/- பறிமுதல் செய்யப்பட்டதுடன், பார் மூடப்பட்டது. மேலும், திருவொற்றியூர் E.E. ரோடு டாஸ்மாக் கடை அருகே மதுபாட்டில்கள் விற்பனை செய்த நீதி, ராஜபாண்டி, ரகுபதி, லெட்சுமணன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு, 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஏழுகிணறு, எஸ்பிளனேடு, புதுவண்ணாரப்பேட்டை, நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டதாக 6 பேர் கைது செய்யப்பட்டு, மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நுங்கம்பாக்கத்தில், தனியார் பார் ஒன்று அரசு நிர்ணயித்த நேரத்தை தாண்டி மது விற்பனை செய்தது கண்டறியப்பட்டு, பார் உரிமையாளர் கார்த்திக் இளம்வழுதி, மேலாளர் ஸ்டாலின் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு பார் மூடப்பட்டது. சென்னை பெருநகர காவல் துறை சட்டவிரோத மது விற்பனைக்கு எதிராக தொடர் சோதனைகளை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Chennai NewsTamil Nadu Policeகைதுசட்டவிரோத மதுசென்னைடாஸ்மாக்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஹைதராபாத் – ஜெய்ப்பூர் ரயிலில் தீ விபத்து: பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!
Next Article சிஎஸ்கே கார்த்திக் சர்மாவின் மாஸ் அரைசதம்: லக்னோவை வீழ்த்தி அசத்தல்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

விபத்து நடந்த இடங்களுக்கு விரைவாக செல்லும் ஆம்புலன்ஸ்

விபத்து பகுதிக்கு செல்ல ஆம்புலன்சுக்கு 10 நிமிட கெடு

விபத்து நடந்த இடங்களுக்கு ஆம்புலன்ஸ்கள் 10 நிமிடங்களுக்குள் சென்றடைய வேண்டும் என்ற புதிய…

ஆகஸ்ட் 14, 2026

பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் மீது தாக்குதல்: ஒருவர் கைது

பஞ்சாபின் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங்…

ஆகஸ்ட் 13, 2026

கார்கே பொதுக்கூட்டம் நடத்திய இடத்தை சுத்தம் செய்த பாஜகவினர் மீது வழக்குப்பதிவு: காங்கிரஸ் வலியுறுத்தல்

உத்தராகண்ட் ஹல்த்வானியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே…

ஆகஸ்ட் 13, 2026

நாடாளுமன்றத்துக்கு அமித் ஷா வராதது ஏன்? – ராகுல் காந்தி விளக்கம்

உள்துறை அமைச்சர் அமித் ஷா 20 நாட்களாக…

ஆகஸ்ட் 13, 2026

இளம் தலைமுறை கடன் வலையில்: RBI எச்சரிக்கை

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 25 வயதிற்குட்பட்ட…

ஆகஸ்ட் 13, 2026

You Might Also Like

தமிழ்நாடு

இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு நடிகர் சிரஞ்சீவி இரங்கல்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவுக்கு நடிகர் சிரஞ்சீவி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். கோவாவில் நடந்த குஷ்பு மகள் திருமணத்தில் சந்தித்தபோது எடுத்த புகைப்படங்கள் மற்றும் உரையாடல்களை அவர் நினைவு…

1 Min Read
தமிழக தலைமை செயலாளர் திரு. சாய்குமார் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி ஆலோசனை
தமிழ்நாடு

மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சாய்குமார் ஆலோசனை

தமிழக தலைமை செயலாளர் சாய்குமார், இன்று மாலை 4.30 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் முக்கிய துறை திட்டங்கள் மற்றும் நிர்வாக செயல்பாடுகள் குறித்து…

2 Min Read
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை கூட்டத்தில் பேசுகிறார்
தமிழ்நாடு

அதிமுக ஐடி விங் செயல்பாடு குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

அதிமுக ஐடி விங் சரியாக செயல்படவில்லை என்றும், இதுவே தேர்தல் தோல்விக்கு ஒரு காரணம் என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இனி AI தொழில்நுட்பத்தை பயன்படுத்துவோருக்கே பதவி…

2 Min Read
தமிழக முதல்வர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்
தமிழ்நாடு

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை

செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று, ஆகஸ்ட் 7 ஆம் தேதி, தமிழக முதல்வர் விஜய்யின் மனைவி சங்கீதா தாக்கல் செய்துள்ள விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வருகிறது.…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?