MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார்: சீமான் கடும் கேள்வி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார்: சீமான் கடும் கேள்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார்: சீமான் கடும் கேள்வி

தமிழ்நாடு

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார்: சீமான் கடும் கேள்வி

Fernandez
Last updated: ஆகஸ்ட் 20, 2026 3:22 மணி
Fernandez
Share
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
SHARE

தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இலவசமாக கார், ஓட்டுநர், உதவியாளர் மற்றும் எரிபொருள் படி வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், த.வெ.க. அரசுக்குக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

சட்டமன்றத்தில் 110-வது விதியின் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் விஜய், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இலவச மகிழுந்து, தனி உதவியாளர் மற்றும் ஓட்டுநருக்கான ஊதியம், எரிபொருள்படி என மாதம் ரூ.1 லட்சம் கூடுதலாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஏற்கனவே 190 சட்டமன்ற உறுப்பினர்களிடம் சொந்தமாக கார் உள்ளதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள நிலையில், புதிதாக இலவச கார் வழங்க வேண்டிய அவசியம் என்ன?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு காரின் விலை குறைந்தபட்சம் ரூ.30 லட்சம் எனக்கொண்டால், 234 உறுப்பினர்களுக்கும் சுமார் ரூ.70 கோடி தேவைப்படும். மேலும், மாதம் ரூ.1 லட்சம் வீதம் 234 உறுப்பினர்களுக்கும் வழங்கினால் ஆண்டிற்கு சுமார் ரூ.28 கோடி கூடுதலாகத் தேவைப்படும். இதுமட்டுமல்லாமல், எரிபொருள், வாகனப் பராமரிப்பு என ஆண்டுக்கு பல நூறு கோடிகள் செலவாகும். இந்தப்பணம் அனைத்தும் மக்களின் வரிப்பணம்தானே? இது மக்கள் பணத்தைத் தொடாத, வீணடிக்காத செயலா? என சீமான் விமர்சித்துள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்கனவே வாகனப்படி ரூ.25,000 உட்பட மாதம் ரூ.1 லட்சம் சம்பளமாக வழங்கப்படுகிறது. இந்த நிலையில், ஆண்டுக்கு ரூ.1.76 லட்சம் கோடி கடன் வாங்கும் தமிழக அரசு, கூடுதலாக மாதம் ரூ.1 லட்சம் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டிய தேவை என்ன? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, நிதியமைச்சர் மரியவில்சன் போன்ற பெரும் செல்வந்தர்களுக்கும் மக்கள் வரிப்பணத்தில் கார் வழங்க வேண்டிய அவசியம் என்ன என்றும் அவர் கேட்டுள்ளார்.

'உங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உங்களிடம் வாகனம் கேட்டால் உங்கள் சொந்த செலவிலோ, உங்கள் கட்சி செலவிலோ வாங்கிக் கொடுங்கள். மக்கள் பணத்தை ஏன் எடுக்கிறீர்கள்?' என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். அனைத்துக் கட்சி உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்கினால், இனி எந்தக் கட்சி உறுப்பினர் உங்களை எதிர்த்துப் பேசுவார்? ஆட்சி நிர்வாகச் செயல்பாடுகளில் ஏற்படும் குறைகளை எப்படிச் சுட்டிக்காட்டுவார்கள்? அரசை விமர்சிக்காமல் இருக்க கொடுக்கப்படும் மறைமுக கையூட்டா? இதுதான் ஊழல் லஞ்சத்தை ஒழிக்கும் முறையா? என்றும் அவர் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைய வைத்த நெல்லைப் பாதுகாக்க கிடங்குகள் இல்லை. வெட்டவெளியில் கொட்டி வீணாகிறது. அதனைப் பாதுகாக்க விவசாயிகள் கோரினால், வெறும் ரூ.10 கோடிக்கு தார்ப்பாய்களைத் தரும் த.வெ.க. அரசு, ஏற்கனவே ஒன்றுக்கு இரண்டு கார் வைத்திருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சேர்த்து சொகுசு வாகனங்கள் வழங்க இத்தனை கோடிகளை வாரி இறைப்பது தேவையா? என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

மறைமுக மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பேருந்து கட்டண உயர்வு என மக்கள் பாதிக்கப்படும்போது, அதைச் சரிசெய்யாமல் அவர்களின் பணத்தை எடுத்து இந்த ஊதாரித்தனம் தேவையா? தேர்தல் பரப்புரையில் அனைத்துப் பெண்களுக்கும் மாதம் ரூ.2,500 உள்ளிட்ட பல வாக்குறுதிகள் அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் வெள்ளை அறிக்கை வெளியிட்டு பணம் இல்லை என்றீர்கள். இப்போது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மகிழுந்து வழங்க மட்டும் எங்கிருந்து பணம் வந்தது? என்றும் சீமான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களின் சேவைக்கு வந்தார்களா? அல்லது தங்களின் தேவையை நிறைவேற்றிக் கொள்ள வந்தார்களா? மக்கள் உதவிக்கு வந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தனியாக உதவியாளர் எதற்கு? அதற்குத் தனியே சம்பளம் எதற்கு? என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். அரசு அறிவிக்கும் எந்தவொரு திட்டத்தின் நன்மை தீமைகளையும் விவாதிப்பதற்கே சட்டமன்றம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 110-வது விதி என்ற பெயரில் புதிய திட்டங்களை அறிவித்துவிட்டு, அதைப்பற்றி யாரும் எந்த விமர்சனமும் செய்யக்கூடாது என்பதுதான் ஜனநாயகமா? விமர்சனம் செய்யக்கூடாது, ஆனால் கேட்கவே கூசும் அளவிற்கு முதலமைச்சரைப் புகழ்ந்து மட்டும் பேசலாமா? என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் இதுபோன்ற திட்டங்களைக் கைவிட்டு, ஆக்கப்பூர்வமான மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்' என அவர் தெரிவித்துள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:SeemanTamil Nadu Governmentசட்டமன்ற உறுப்பினர்கள்சீமான்தமிழக அரசுநாம் தமிழர் கட்சிவாகனப்படிவிஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும் அகில இந்திய மருத்துவ சங்கத்தின் பிரதிநிதிகள் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: என்.டி.ஏ-வின் பாதுகாப்பு குறித்து உச்ச நீதிமன்றத்தில் கேள்வி
Next Article சேலம் மேட்டூர் அரசு மகளிர் விடுதி அரசு விடுதியில் பாலியல் வன்கொடுமை: 4 பேர் சஸ்பெண்ட்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது

சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடு: மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. ஜம்மு - காஷ்மீர்,…

ஆகஸ்ட் 20, 2026

மனைவி, சகோதரியை கொன்றுவிட்டு வங்கி ஊழியர் தற்கொலை

லக்னோவில் வங்கி ஊழியர் ஒருவர், கருத்து வேறுபாடு…

ஆகஸ்ட் 20, 2026

தாய்-தந்தை நினைவுகளுடன் ராகுல் காந்தி உருக்கமான பதிவு

தனது தாயின் சுயசரிதை கோடிக்கணக்கான மக்களால் படிக்கப்பட…

ஆகஸ்ட் 20, 2026

இளைஞர்களை ஈர்க்கும் ஆர்எஸ்எஸ்: விசாகப்பட்டினத்தில் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்

இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்…

ஆகஸ்ட் 20, 2026

ஜார்க்கண்ட் அரசுப் பணி நியமன ரத்து அறிவிப்புக்கு உயர் நீதிமன்றம் தடை

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்ட…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

தமிழ்நாடு

விஜய் பதவி ஏற்பு: வீட்டில் இருந்து புறப்பட்டார் திரிஷா

தமிழக சட்டசபை தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களை பிடித்தது. காங்கிரஸ், இரண்டு இடது சாரி கட்சிகள், விசிக, ஐ.யு.மு.லீ. ஆதரவுடன்…

1 Min Read
கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் "நிழல்" QR குறியீடு திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்
தமிழ்நாடு

கோவை: இனி தப்பிக்க முடியாது! புதிய QR குறியீடு திட்டம் துவக்கம்!

கோவை முழுவதும் "நிழல்" என்ற புதிய QR குறியீடு பாதுகாப்புத் திட்டம் அறிமுகம். பொதுமக்கள் உடனடியாகத் தகவல் தெரிவிக்கலாம், அடையாளம் ரகசியமாகப் பாதுகாக்கப்படும்.

2 Min Read
வனத்துறையினர் அமைத்த கூண்டில் சிக்கிய ஆண் கரடி
தமிழ்நாடு

நெல்லை: பொதுமக்களை அச்சுறுத்திய கரடி கூண்டில் சிக்கியது

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த ஆண் கரடியை வனத்துறையினர் கூண்டில் பிடித்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

2 Min Read
தமிழ்நாடு

நீட் மறு தேர்வு: தமிழகத்தில் 1.42 லட்சம் பேர் பங்கேற்பு

தமிழகத்தில் நீட் மறு தேர்வை 1.42 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். தேர்வு நேரம் கூடுதலாக 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?