MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: அதிமுக பிளவு: பழனிசாமி அழைத்தால் பேச தயார் – எஸ்.பி.வேலுமணி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > அதிமுக பிளவு: பழனிசாமி அழைத்தால் பேச தயார் – எஸ்.பி.வேலுமணி
தமிழ்நாடு

அதிமுக பிளவு: பழனிசாமி அழைத்தால் பேச தயார் – எஸ்.பி.வேலுமணி

Admin
Last updated: May 15, 2026 10:36 am
Admin
Share
SHARE

சென்னை: அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்படும் சூழல் நிலவி வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளார். "நீங்கள் அழைத்தால் பேச நாங்கள் தயார். தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து, கழகத்தின் எதிர்காலத்தை அனைவரும் ஒன்றிணைந்து தீர்மானிப்போம்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுகவில் தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு குழுவும், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் மற்றொரு குழுவும் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 'பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் ஒன்றிணைந்து முறியடிப்போம்' என்று நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். இதற்கு பதிலளிக்கும் விதமாக எஸ்.பி.வேலுமணி தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

தனது அறிக்கையில் எஸ்.பி.வேலுமணி, "கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உண்மை நிலையை உணராமல் இப்படி ஒரு அறிக்கை விட்டிருப்பது வருத்தமளிக்கிறது. உங்கள் பிரசார உழைப்பை யாரும் மறுக்கவில்லை. ஆனால், கூட்டணி மற்றும் தேர்தல் செயல்பாடுகள் குறித்து யாரையும் கேட்காமல் தன்னிச்சையாக செயல்பட்டீர்கள். உங்கள் வார்த்தைகளை நாங்கள் தம்பிகளாக ஏற்றுக்கொண்டோம். ஆனால் தோல்விக்குப் பிறகு, தலைமை பொறுப்பில் இருப்பவர் இறங்கி வந்து அனைவரிடமும் பேச முன்வந்திருக்க வேண்டும். அதை விடுத்து 'நான் மட்டுமே எல்லாம்' என்ற நிலையில் பேசுவதை எந்த தொண்டனும் ஏற்க மாட்டான்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், "இதுவே கழகப் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தொண்டர்களின் கருத்தாக உள்ளது. மக்கள் அளித்த தீர்ப்பை மதித்து, மக்கள் ஆதரவு பெற்ற தற்போதைய அரசுக்கு ஆதரவு அளிக்கும் அரசியல் அறத்தோடு எங்கள் ஆதரவை வழங்கியுள்ளோம். யாரையும் அவமரியாதை செய்யும் எண்ணமோ, கழகத்தைப் பிரிக்கும் எண்ணமோ இல்லை. இப்போதும் நீங்கள் அழைத்தால், பேச நாங்கள் தயார். தோல்விக்கான காரணங்களை அனைவரும் சேர்ந்து ஆராய்வோம். கழகத்தின் எதிர்காலப் பாதையை அனைவரும் ஒன்றிணைந்து தீர்மானிப்போம். 'எந்தத் தியாகமும் செய்யத் தயார்' என்று நீங்கள் கூறியுள்ளீர்கள். நாங்கள் கேட்பது ஒன்றே ஒன்றுதான் – 'போங்க போங்க' என்று விரட்டி அடிக்காமல், 'வாங்க வாங்க' என்று ஒருமுறை அழைத்து பாருங்கள்! எல்லாமே மாறும்! கட்சி நன்றாக இருக்கும்!" என்று அவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ADMKAIADMKTamil Nadu Politicsஅதிமுகதமிழக அரசியல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்தில் சோகம்: மின் கசிவால் இளைஞர் பலி!
Next Article விவசாயிகள் போராட்டம்: மத்திய அரசின் விலை நிர்ணயத்தை கண்டித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

குழந்தையின் உயிரை பணயம் வைத்த தந்தை: கடும் கண்டனங்கள் குவிதல்

கர்நாடகாவில் குழந்தையின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தி, ஆபத்தான முறையில் பயணம் செய்த தந்தையின் செயலுக்கு…

June 29, 2026

சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு: மூன்றாவது மொழி தேர்வு கட்டாயமில்லை

சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு மாணவர்கள் மூன்றாவது மொழியில்…

June 29, 2026

ஆந்திராவில் 2 பல்கலைக்கழக விழாக்களில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பு

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஆந்திர பிரதேச…

June 29, 2026

மாநிலங்களின் கஜானாவை நிரப்பும் மதுபான விற்பனை

பல்வேறு மாநிலங்களின் கஜானா மதுபான விற்பனை மூலம்…

June 29, 2026

ராஜஸ்தான்: ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான மாணவி தற்கொலை

ராஜஸ்தானில், ஐ.ஐ.டி. கனவுடன் ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான…

June 29, 2026

You Might Also Like

தமிழ்நாடு

விஜய் பதவி ஏற்பு: வீட்டில் இருந்து புறப்பட்டார் திரிஷா

தமிழக சட்டசபை தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களை பிடித்தது. காங்கிரஸ், இரண்டு இடது சாரி கட்சிகள், விசிக, ஐ.யு.மு.லீ. ஆதரவுடன்…

1 Min Read
தமிழ்நாடு

மகளிர் உரிமைத் தொகை: நாளை வங்கியில் ரூ.1000 வரவு?

தமிழக அரசின் முக்கிய திட்டமான மகளிர் உரிமைத் தொகை, வரும் 10 ஆம் தேதி சுமார் 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளதாக…

1 Min Read
தமிழ்நாடு

பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு: ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழகத்தில் நிலவும் கடுமையான வெப்ப அலை காரணமாக, பள்ளிகள் திறப்பை ஒரு வார காலத்திற்கு தள்ளிவைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மாணவர்களின் நலனே…

1 Min Read
தமிழ்நாடு

தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. இந்த திடீர் முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?