MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: பணம் கேட்டு தாத்தா, பாட்டியை கொடூரமாக கொலை செய்த பேரன்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > க்ரைம் > பணம் கேட்டு தாத்தா, பாட்டியை கொடூரமாக கொலை செய்த பேரன்!
க்ரைம்

பணம் கேட்டு தாத்தா, பாட்டியை கொடூரமாக கொலை செய்த பேரன்!

Admin
Last updated: May 15, 2026 9:39 am
Admin
Share
SHARE

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள காரக்கோட்டை கிராமத்தில், வெளிநாட்டில் வேலை செய்யும் கலியபெருமாள் (58) மற்றும் அவரது மனைவி தேவி (50) ஆகியோரின் மகன் ஐயப்பன் (32) போதைக்கு அடிமையானதால் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. பொறியியல் பட்டம் பெற்றிருந்தும் வேலைக்கு செல்லாமல், மது மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான ஐயப்பன், திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இரண்டு நாட்களுக்கு முன்புதான் வீடு திரும்பியுள்ளார்.

சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய ஐயப்பன், அதே ஊரில் வசிக்கும் தனது தாத்தா பிச்சைமுத்து மற்றும் பாட்டி சந்திரா வீட்டிற்கு சென்று பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது, அவரது தாயார் தேவி, ஐயப்பனை சமாதானம் செய்து தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனாலும், பணம் கிடைக்காத ஆத்திரத்தில் ஐயப்பன், அடுத்த நாள் அதிகாலை 5 மணியளவில் மீண்டும் தாத்தா, பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு தூங்கிக்கொண்டிருந்த தாத்தா பிச்சைமுத்து மற்றும் பாட்டி சந்திரா மீது நாற்காலியை தூக்கி வீசி அவர்களை மயக்கமடைய செய்துள்ளார். பின்னர், வீட்டில் இருந்த தேங்காய் எண்ணெயை இருவர் மீதும் ஊற்றி தீயை கொளுத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார். இந்த கொடூர சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், வீட்டிற்குள் எரிந்த நிலையில் கிடந்த பிச்சைமுத்து மற்றும் சந்திரா ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலையில் ஈடுபட்ட ஐயப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போதை பழக்கத்தால் ஒரு பேரன் தனது தாத்தா, பாட்டியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:MDTV 24x7Tamil Nadu Crimeகொலைதிருவாரூர்பேரன்போதை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நீலகிரி: 27 டாஸ்மாக் கடைகள் மூடல் – அதிரடி உத்தரவு!
Next Article டெல்லி கார் குண்டுவெடிப்பு: 10 பேர் மீது 7,500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

குழந்தையின் உயிரை பணயம் வைத்த தந்தை: கடும் கண்டனங்கள் குவிதல்

கர்நாடகாவில் குழந்தையின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தி, ஆபத்தான முறையில் பயணம் செய்த தந்தையின் செயலுக்கு…

June 29, 2026

சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு: மூன்றாவது மொழி தேர்வு கட்டாயமில்லை

சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு மாணவர்கள் மூன்றாவது மொழியில்…

June 29, 2026

ஆந்திராவில் 2 பல்கலைக்கழக விழாக்களில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பு

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஆந்திர பிரதேச…

June 29, 2026

மாநிலங்களின் கஜானாவை நிரப்பும் மதுபான விற்பனை

பல்வேறு மாநிலங்களின் கஜானா மதுபான விற்பனை மூலம்…

June 29, 2026

ராஜஸ்தான்: ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான மாணவி தற்கொலை

ராஜஸ்தானில், ஐ.ஐ.டி. கனவுடன் ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான…

June 29, 2026

You Might Also Like

க்ரைம்

மதுரையில் சித்திரை திருவிழா மோதல்: சிறுவன் வெட்டி கொலை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சித்திரை திருவிழா மோதல் காரணமாக 17 வயது சிறுவன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக…

1 Min Read
க்ரைம்

புனே போர்ஷ் விபத்து: ஜாமீன் பெற்ற தந்தை பணமாலையுடன் குத்தாட்டம் – நெட்டிசன்கள் கொந்தளிப்பு!

புனே போர்ஷ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்காத நிலையில், ஜாமீனில் வெளிவந்த சிறுவனின் தந்தை பணமாலையுடன் நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

1 Min Read
க்ரைம்

காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டுகள் வீச்சு: கோவை அதிர்ச்சி

கோவையில், காதலை ஏற்க மறுத்த பெண்ணின் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்களை வீசி தீவைக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 4 பேர் மீது…

1 Min Read
உலகம்

அமெரிக்க விமான கண்காட்சியில் நடுவானில் மோதிய 2 போர் விமானங்கள்: 4 விமானிகள் தப்பினர்!

அமெரிக்காவின் இடாஹோ மாகாணத்தில் போர் விமான கண்காட்சியின்போது, சாகசத்தில் ஈடுபட்ட 2 போர் விமானங்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாகின. அதிர்ஷ்டவசமாக 4 விமானிகள் உயிர் தப்பினர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?