MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும்: புதிய அரசாணை வெளியீடு!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும்: புதிய அரசாணை வெளியீடு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும்: புதிய அரசாணை வெளியீடு!

தமிழ்நாடு

தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும்: புதிய அரசாணை வெளியீடு!

Fernandez
Last updated: ஆகஸ்ட் 13, 2026 7:47 காலை
Fernandez
Share
தமிழக அரசு வெளியிட்ட தமிழ்த்தாய் வாழ்த்து அரசாணை
தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும்: தமிழக அரசின் புதிய அரசாணை வெளியீடு
SHARE

தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளத்தை நிலைநிறுத்தும் வகையில், அனைத்து அரசு நிகழ்ச்சிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புகளின் தொடக்கத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் கட்டாயம் பாடப்பட வேண்டும் என தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணை, தமிழ் மொழிக்கும் தமிழர் பண்பாட்டிற்கும் அளிக்கப்படும் மரியாதையின் வெளிப்பாடாக அமைந்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர் மு.சாய் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மொழியப்பெற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தனித்தீர்மானத்தின் அடிப்படையில் இந்த ஆணை வெளியிடப்படுகிறது. தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்பது தமிழ்மொழிக்கும் தமிழர் பண்பாட்டிற்கும் செலுத்தப்படும் மரியாதையின் வெளிப்பாடாகும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 1970 ஆம் ஆண்டு ஜூன் 17 ஆம் தேதியிட்ட அரசாணை (நிலை) எண்.1393-இன் படி, பிரார்த்தனைப் பாடல்கள் பாடுவதில் சீரான தன்மையை உறுதி செய்வதற்காக, எந்தவொரு மதத்தினருக்கோ அல்லது பிரிவினருக்கோ தொடர்பு இல்லாத பாடலை பிரார்த்தனைப் பாடலாக வைக்க வேண்டும் என்ற அடிப்படையில், திரு. சுந்தரம் பிள்ளை எழுதிய 'மனோன்மணீயம்' நூலில் இருந்து ஆறு வரிகள் கொண்ட பாடல் பிரார்த்தனைப் பாடலாக வைக்கப்பட்டது.

பின்னர், 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதியிட்ட அரசாணை (நிலை) எண்.1037-இன் படி, 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடல் தமிழக அரசின் மாநிலப் பாடலாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என்றும் ஆணையிடப்பட்டது.

இந்நிலையில், மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்திடமிருந்து 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் தேதியிட்ட கடிதம் மூலம் மாநிலப் பாடல் பாடப்படுவது குறித்து தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒரு தனித்தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார்.

அந்த தீர்மானத்தில், 'தமிழ் உலகின் தொன்மை வாய்ந்த செம்மொழியாகவும், தமிழர் நாகரிகம் உலகின் மிகப் பழமையான பண்பாட்டு மரபுகளில் ஒன்றாகவும் திகழ்வதை இப்பேரவை பெருமையுடன் பதிவு செய்கிறது. மனோன்மணியம் சுந்தரனாரால் 1891-இல் எழுதப்பட்ட 'மனோன்மணீயம்' என்ற நாடக நூலின் பாயிரத்திலிருந்து எடுக்கப்பட்ட 'தமிழ்த்தாய் வாழ்த்து' 1970 நவம்பர் 23 முதல் அரசு விழாக்களில் முதலில் பாடப்படவேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. 2021 டிசம்பர் 17 முதல் மாநிலப் பாடலாக அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டு தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்படும் என்று ஆணையிடப்பட்டுள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 'இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகளின் அடிப்படையில், தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளத்தை நிலைநிறுத்தும் வகையில், தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும்' என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஏகமனதாக தீர்மானித்தது.

இந்த தீர்மானத்தின் நகல், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை செயலக செயலாளரிடமிருந்து பெறப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு அனுப்பப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், முதல்-அமைச்சரால் சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தனித்தீர்மானத்தை ஏற்று, தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகளின் அடிப்படையில், தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளத்தை நிலைநிறுத்தும் வகையில், அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன், தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என அரசு ஆணையிடுகிறது. இந்த அரசாணை, 1970 ஆம் ஆண்டு அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுடன் வெளியிடப்பட்டுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AssemblyGovernment OrderTamil CultureTamil LanguageTamil Nadu GovernmentTamil Thai Vazhthuஅரசாணைசட்டமன்ற பேரவைதமிழக அரசுதமிழ் பண்பாடுதமிழ் மொழிதமிழ்த்தாய் வாழ்த்து
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article வறுத்த பூண்டுடன் ஒரு கிண்ணம் வறுத்த பூண்டு: புற்றுநோய் முதல் இதய நோய் வரை குணப்படுத்தும் அற்புத உணவா?
Next Article வீட்டு வேலைகளை எளிதாக்கும் பல்வேறு ஸ்மார்ட் சாதனங்கள் ஸ்மார்ட் சாதனங்கள்: வீட்டு வேலைகளுக்கு குட்பை சொல்லுங்கள்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஆந்திராவின் வளர்ச்சியைப் பாராட்டிப் பேசுகிறார்

ஆந்திராவின் வளர்ச்சிக்கு குடியரசுத் தலைவர் பாராட்டு

ஆந்திர மாநிலத்தின் உண்மையான வளர்ச்சிக்கு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் ஆட்சி ஒரு சிறந்த…

ஆகஸ்ட் 13, 2026

திருப்பதி: இலவச தரிசனத்திற்கு 20 மணி நேர காத்திருப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்திற்காக பக்தர்கள்…

ஆகஸ்ட் 13, 2026

5 மாநில தேர்தல்: காங்கிரஸுக்கு ₹207 கோடி நன்கொடை

அசாம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி…

ஆகஸ்ட் 13, 2026

தனியார் மருத்துவமனை அறை வாடகை: 3 நட்சத்திர ஹோட்டல் கட்டணத்தை மிஞ்சக் கூடாது – குழு பரிந்துரை

தனியார் மருத்துவமனைகளில் அறை வாடகை, 3 நட்சத்திர…

ஆகஸ்ட் 13, 2026

கர்நாடகாவில் புகையிலை பொருட்களுக்கு ஓராண்டு தடை

கர்நாடகாவில் புகையிலை பொருட்களுக்கு ஓராண்டு தடை விதிப்பது…

ஆகஸ்ட் 13, 2026

You Might Also Like

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு

விழுப்புரம் அதிமுகவில் உட்கட்சி பூசல்: 500க்கும் மேற்பட்டோர் விலகல்!

விழுப்புரம் அதிமுகவில் உட்கட்சி பூசல் காரணமாக, முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்களான 500க்கும் மேற்பட்டோர் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளனர். இது பெரும் பரபரப்பை…

2 Min Read
நாய்கள் தாக்கியதில் உயிரிழந்த புள்ளிமான்
தமிழ்நாடு

நாய்கள் கடித்ததில் புள்ளிமான் பரிதாப சாவு: வீட்டிற்குள் புகுந்த மான் உயிர் தப்பியது

சென்னையில், வீட்டின் கதவு திறந்திருந்ததால் உள்ளே புகுந்த புள்ளிமான் ஒன்று, நாய்களிடம் இருந்து தப்பிக்க கழிவறையில் தஞ்சமடைந்தது. துரதிர்ஷ்டவசமாக, மற்றொரு புள்ளிமான் நாய்களால் கடித்து குதறி உயிரிழந்தது.

1 Min Read
அன்புமணி ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியின் 19வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிடுகிறார்
தமிழ்நாடு

பாமகவின் 19வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு: அன்புமணி ராமதாஸ்

பாமகவின் 19வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார். இதில் ரூ.93,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாய கடன்கள் தள்ளுபடி, இலவச கல்வி உள்ளிட்ட…

4 Min Read
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிடும் அமைச்சர் செ. கமலியால்
தமிழ்நாடு

கால்நடை மருத்துவப் படிப்புகள்: தரவரிசைப் பட்டியல் வெளியீடு

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று காலை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் செ. கமலியால் வெளியிடப்பட்டது. இதன் மூலம் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு விரைவில் தொடங்கும்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?