நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இணைந்துள்ள 'கருப்பு' திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகிறது. பலமுறை ஒத்திவைக்கப்பட்ட இந்தப் படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 9 மணிக்கு சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதி அளித்திருந்தது. ஆனால், வெளியீட்டிற்கு சில மணி நேரங்களே உள்ள நிலையில், இந்த சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தனது எக்ஸ் தளத்தில், 'தவிர்க்க முடியாத காரணங்களால் 'கருப்பு' திரைப்படத்தின் காலை 9 மணி சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. இதனால் ஏற்படும் சிரமங்களுக்கு வருந்துகிறோம்' என்று தெரிவித்துள்ளார். படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த 'கருப்பு' படத்தின் சிறப்பு காட்சி ரத்து, திரையரங்குகளில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் வெளியீடு குறித்த அடுத்தகட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.