MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அமித் ஷா பதவி விலக கோரிக்கை – கரப்பான் பூச்சி ஜனதா கட்சி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அமித் ஷா பதவி விலக கோரிக்கை – கரப்பான் பூச்சி ஜனதா கட்சி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - அமித் ஷா பதவி விலக கோரிக்கை – கரப்பான் பூச்சி ஜனதா கட்சி

தமிழ்நாடு

அமித் ஷா பதவி விலக கோரிக்கை – கரப்பான் பூச்சி ஜனதா கட்சி

Fernandez
Last updated: ஜூலை 31, 2026 10:24 காலை
Fernandez
Share
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜீத் திப்கே செய்தியாளர்களை சந்தித்து பேசுகிறார்
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜீத் திப்கே
SHARE

டெல்லியில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜீத் திப்கே செய்தியாளர்களை சந்தித்து பேசினார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் டெல்லியில் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர் போராட்டம் நடத்தியதன் விளைவாகவே அப்போதைய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக நேரிட்டதாக அவர் கூறினார்.

புதிதாக கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பிரகலாத் ஜோஷி ஒரு விசித்திரமான நபர் என்றும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேசுபவர்களை கல்வி அமைச்சராக நியமிப்பது நாட்டுக்கு என்ன செய்தியை சொல்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். பா.ஜனதாவில் ரவுடிகள்தான் நிரம்பியுள்ளதாகவும், ராம் ரகீம் போன்ற பாலியல் குற்றவாளிகள் இந்த ஆட்சியில் பரோலில் வெளியே வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இந்த அரசு ரவுடிகளுக்கும், குற்றவாளிகளுக்கும் ஆதரவாக செயல்படுவதாக அவர் விமர்சித்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விடுத்துள்ள கோரிக்கையை தான் முழுமையாக ஆதரிப்பதாகவும், அமித் ஷா கண்டிப்பாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அபிஜீத் திப்கே வலியுறுத்தினார். கடந்த 20-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றம் நோக்கிய பேரணியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட போலீஸ் தாக்குதலுக்கு அமித் ஷாவை தவிர வேறு யாரும் உத்தரவிட்டிருக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

தங்கள் கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி வருவதாக பரவும் வதந்திகள் உண்மையாக இருந்தால், அது அமித் ஷாவின் தோல்வியையே காட்டும் என்றும், வெளிநாட்டில் இருந்து இயங்கும் ஒரு இயக்கத்தை கூட கண்டுபிடிக்க முடியாவிட்டால் அவர் என்ன சாணக்கியர் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

டெல்லி போலீசார் கடந்த 19 மற்றும் 20-ஆம் தேதிகளில் அதிகாலையிலேயே மாணவர்கள் போராட்டம் நடந்த இடத்திற்கு கற்கள் நிரம்பிய லாரிகளையும், உடைந்த ஒரு வேனையும் கொண்டு வந்து நிறுத்தியதாக அவர் தெரிவித்தார். மாணவர்கள் கல்வீசி வன்முறையில் ஈடுபட்டதாக பழிபோட டெல்லி போலீசாரும், பா.ஜனதா குண்டர்களும் சேர்ந்து ஒரு சதித்திட்டம் தீட்டியதாக அவர் குற்றம் சாட்டினார். இதை நேரில் பார்த்ததாகவும், சமூக வலைத்தளங்களிலும் இது குறித்து கேள்வி எழுப்பியதாகவும் அவர் கூறினார்.

டெல்லி ஜந்தர் மந்தரில் போராடிய இளைய தலைமுறையினர் நாட்டின் கலாசாரத்தை சீரழித்துவிட்டதாக யோகா குரு பாபா ராம்தேவ் விமர்சித்தது குறித்து பேசிய அபிஜீத் திப்கே, மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்களை ஏந்தி, சட்டப்பூர்வமாக தங்கள் உரிமைகளுக்காக போராடுவது கலாசாரத்தை சீரழிப்பதாகாது என்று கூறினார். பாபா ராம்தேவ் முதலில் அவரது 'பதஞ்சலி' நிறுவன வியாபாரத்தை கவனிக்கட்டும் என்றும், சுப்ரீம் கோர்ட் அந்த நிறுவனத்தை கடுமையாக எச்சரித்ததை அவர் மறந்துவிடக்கூடாது என்றும், இல்லையெனில் வியாபாரம் படுத்துவிடும் என்றும் அவர் எச்சரித்தார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Amit ShahDelhiKarappan Poochi Janatha KatchiNEET Examஅமித் ஷாகரப்பான் பூச்சி ஜனதா கட்சிடெல்லிநீட் தேர்வு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article மத்திய அமைச்சர் நிதின் கட்காரி இ20 பெட்ரோலால் வாகனங்களுக்கு பாதிப்பா? நிதின் கட்காரி விளக்கம்
Next Article என்எல்சி இந்தியா நிறுவனத்தின் லோகோ அல்லது சூரிய மின்சக்தி தகடு என்எல்சிக்கு 900 மெகாவாட் சூரிய மின் திட்டத்திற்கான ஆர்டர்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கடலில் மீன் பிடிக்கும் மீனவர்

ரூ.15 ஆயிரத்திற்கு ஏலம் போன 1¼ கிலோ அரிய வகை மீன்!

புதுச்சேரி மீனவர் ஒருவரின் வலையில் 1¼ கிலோ எடையுள்ள அரிய வகை மீன்…

ஜூலை 31, 2026

ராமர் கோயில் காணிக்கை முறைகேடு: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

அயோத்தி ராமர் கோயில் உண்டியலில் காணிக்கை எண்ணும்…

ஜூலை 31, 2026

கேரளாவில் கனமழை: 5 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கேரளாவில் கனமழை காரணமாக எர்ணாகுளம், வயநாடு உள்ளிட்ட…

ஜூலை 31, 2026

குறைந்த சொத்துடைய முதல்வர்கள்: உமர் முதலிடம், சுவேந்து 2-ம் இடம்

குறைந்த சொத்துடைய முதல்வர்கள் பட்டியலில் உமர் அப்துல்லா…

ஜூலை 31, 2026

7000 மாணவர்களுக்கு எச்ஐவி தொற்றா? கர்நாடக அரசு விளக்கம்

கர்நாடகாவில் 7,000 மாணவர்களுக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்டதாக…

ஜூலை 31, 2026

You Might Also Like

தமிழ்நாடு

முதலமைச்சர் குறித்து அவதூறு: அனிதா ராதாகிருஷ்ணன் முன்ஜாமீன் மனு

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.…

1 Min Read
தமிழ்நாடு

லேசாக ஆடை விலகினாலும் விஷத்தை கக்கும் நெட்டிசன்கள் – கீர்த்தி சனோன் கொந்தளிப்பு!

நடிகைகள் மீது சமூக வலைதளங்களில் பரவும் எதிர்மறை கருத்துக்கள் குறித்து நடிகை கீர்த்தி சனோன் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். லேசாக ஆடைகள் விலகினாலும் விஷ கருத்துக்களை பரப்பும்…

1 Min Read
அமைச்சர் விக்னேஷ் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் குறித்து பேசுகிறார்
தமிழ்நாடு

டாஸ்மாக் ஊழியர் போராட்டம்: எதிர்க்கட்சி தூண்டுதல் – அமைச்சர் விக்னேஷ்

டாஸ்மாக் ஊழியர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களுக்கு எதிர்க்கட்சிகளே காரணம் என அமைச்சர் விக்னேஷ் குற்றம் சாட்டியுள்ளார். தொழிலாளர்கள் சூழ்ச்சிக்கு பலியாக வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

1 Min Read
தமிழ்நாடு

தூத்துக்குடி: கடல் சீற்றம் – 272 விசைப்படகுகள் நிறுத்தம்!

தூத்துக்குடி கடல் பகுதியில் வீசிய பலத்த சூறாவளி காற்றால், மீன்பிடி துறைமுகத்தில் 272 விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?