MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: இந்திய ஹாக்கி ஜெர்சி காவி நிறமா? சர்ச்சை விளக்கம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: இந்திய ஹாக்கி ஜெர்சி காவி நிறமா? சர்ச்சை விளக்கம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - இந்திய ஹாக்கி ஜெர்சி காவி நிறமா? சர்ச்சை விளக்கம்

தமிழ்நாடு

இந்திய ஹாக்கி ஜெர்சி காவி நிறமா? சர்ச்சை விளக்கம்

Fernandez
Last updated: ஜூலை 31, 2026 7:33 காலை
Fernandez
Share
இந்திய ஹாக்கி அணியின் காவி நிற ஜெர்சி
இந்திய ஹாக்கி அணியின் புதிய காவி நிற ஜெர்சி
SHARE

உலக கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணியின் ஜெர்சி நிறம் காவி நிறமாக மாற்றப்பட்டது குறித்து எழுந்த சர்ச்சைக்கு ஹாக்கி இந்தியா தலைவர் திலீப் டிர்கே விளக்கம் அளித்துள்ளார். பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் ஆகஸ்ட் 15 முதல் 30 வரை நடைபெறவுள்ள உலக கோப்பை ஹாக்கி தொடரில் பங்கேற்கும் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு வழக்கமான நீல நிற ஜெர்சிக்கு பதிலாக காவி நிற ஜெர்சி வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஜெர்சி மாற்றம் குறித்து முன்னாள் இந்திய ஹாக்கி கேப்டன்களான விரேன் ராஸ்கின்ஹா, பாஸ்கரன், அஜித் பால், பர்கத் சிங், தன்ராஜ் பிள்ளை உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து ஹாக்கி இந்தியா தலைவர் திலீப் டிர்கே கூறுகையில், 'இந்திய அணியின் ஜெர்சி தொடர்பாக நிறைய விமர்சனங்கள் எழுகின்றன. ஜெர்சியின் நிறத்தை மாற்றுவது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே 2014ல் மஞ்சள் நிறத்திலும், 2018ல் வெளிர் நீல நிறத்திலும் ஜெர்சி மாற்றப்பட்டுள்ளது. இம்முறை யாருடைய அழுத்தத்தினாலோ அல்லது கட்டளையின் பேரிலோ இந்த மாற்றம் செய்யப்படவில்லை. நமது வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் விருப்பப்படியே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், 'ஹாக்கி மைதானத்தின் ஆடுகளம் நீல நிறத்தில் இருப்பதால், ஜெர்சியும் நீல நிறத்தில் இருந்தால் வீரர்களுக்கு விளையாடும்போது சிரமமாக இருக்கும். எனவே, மஞ்சள் அல்லது காவி நிறம் பரிசீலிக்கப்பட்டது. இறுதியில், தேசிய கொடியுடன் தொடர்புடைய காவி நிற ஜெர்சி தேர்வு செய்யப்பட்டது. இது நிரந்தரம் அல்ல. வரும் காலங்களில் வீரர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஜெர்சியின் நிறம் மாற்றியமைக்கப்படும்' என்று கூறினார்.

ஜெர்சி தொடர்பான விமர்சனங்களை கடந்து, உலக கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணிக்கு ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் திலீப் டிர்கே கேட்டுக்கொண்டார். இந்த திடீர் ஜெர்சி மாற்றம் ஹாக்கி வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Dilip TirkeyHockeyIndian Hockey TeamJersey ChangeWorld Cup Hockeyஇந்திய ஹாக்கி அணிஉலக கோப்பை ஹாக்கிதிலீப் டிர்கேஜெர்சி மாற்றம்ஹாக்கி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article பல்வேறு பழச்சாறுகள் மற்றும் பழங்கள் அசைவ உணவுக்குப் பின் இந்த ஜூஸ்கள் குடிக்கலாம்!
Next Article துமகூரு நகைக்கடையில் திருடிய எலி ரூ.10 லட்சம் தங்க நகைகளைத் திருடிய எலி: துமகூருவில் பரபரப்பு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்

பாஜகவில் சேர மிரட்டல்: சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே குற்றச்சாட்டு

டெல்லியில் போராட்டம் நடத்தியபோது பாஜகவில் சேர அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும், மறுத்ததால் தனக்கும் பெற்றோருக்கும்…

ஜூலை 31, 2026

காயமடைந்த காவலர்களின் குடும்பத்தினர் கோரிக்கை

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டத்தின்போது காயமடைந்த காவலர்களின்…

ஜூலை 31, 2026

ரூ.15 ஆயிரத்திற்கு ஏலம் போன 1¼ கிலோ அரிய வகை மீன்!

புதுச்சேரி மீனவர் ஒருவரின் வலையில் 1¼ கிலோ…

ஜூலை 31, 2026

ராமர் கோயில் காணிக்கை முறைகேடு: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

அயோத்தி ராமர் கோயில் உண்டியலில் காணிக்கை எண்ணும்…

ஜூலை 31, 2026

கேரளாவில் கனமழை: 5 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கேரளாவில் கனமழை காரணமாக எர்ணாகுளம், வயநாடு உள்ளிட்ட…

ஜூலை 31, 2026

You Might Also Like

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
தமிழ்நாடு

சித்தா, ஆயுர்வேத பட்டப்படிப்பு சேர்க்கை: விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாட்டில் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி, யோகா இயற்கை மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. NEET மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.

3 Min Read
தமிழ்நாடு

அந்தியூர்: சிறுமியை திருமணம் செய்த சிறுவன் கைது

அந்தியூர் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. அதேபோல் பவானி அருகே உள்ள அத்தாணி பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுவன். இவரும், சிறுமியும் உறவினர்கள் ஆவர்.…

1 Min Read
தமிழக அரசு ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் உத்தரவு
தமிழ்நாடு

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உமாநாத் காத்திருப்போர் பட்டியலுக்கும், கிருஷ்ணனுன்னி கால்நடை பராமரிப்பு துறை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

1 Min Read
தேயிலை தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானைகள்
தமிழ்நாடு

நிலகிரியில் தேயிலை தோட்டத்தை சேதப்படுத்திய காட்டு யானைகள்

நீலகிரி மாவட்டம் காபி காடு பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்தன. இதனால் அப்பகுதியில் பெரும் அச்சம் நிலவியது. வனத்துறையினர் யானைகளை…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?