MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: காவிரி விவகாரம்: மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: காவிரி விவகாரம்: மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - காவிரி விவகாரம்: மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தமிழ்நாடு

காவிரி விவகாரம்: மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

Fernandez
Last updated: ஜூலை 28, 2026 6:29 மணி
Fernandez
Share
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
SHARE

காவிரி நதிநீர் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கர்நாடகா மாநிலத்திற்கு மற்ற மாநிலங்களின் ஒப்புதல் தேவையில்லை என்ற மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் கருத்து, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்றும், தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'காவிரி நதிநீர் தொடர்பான வழக்கில் 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவிதமான கட்டுமானத்தையும் கர்நாடக அரசு கட்டுவதற்கு தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநில அரசுகளிடம் ஒப்புதல் பெற வேண்டும்' என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில், தமிழக மக்களிடையே மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது உச்சநீதிமன்ற தீர்ப்பின் சாராம்சத்திற்கு எதிரானது.

2018-ஆம் ஆண்டு காவிரி நதிநீர் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பில், 'காவிரி ஆற்றின் மேல்புறத்தில் அமைந்துள்ள எந்த ஒரு மாநிலமும், ஆற்றின் கீழ்ப்புறத்தில் உள்ள மாநிலங்களுக்கு திட்டமிடப்பட்டபடி நீர் விநியோகம் செய்யப்படுவதை பாதிக்கும் வகையிலான எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளக் கூடாது' என்று மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சரின் பதில், காவிரி நதி பாயும் சம்பந்தப்பட்ட மாநில மக்களிடையே பதட்டத்தை உருவாக்கியுள்ளது.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28-ஆவது கூட்டத்தின் விவாதப் பொருளில் மேகதாது அணை விவகாரம் சேர்க்கப்பட்டதை மிகக் கடுமையாகக் கண்டித்தேன். தமிழகத்தை வஞ்சிக்க முயற்சிக்கும் எந்தப் பிரச்சனையையும் அதிமுக பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. காவிரி நதி தமிழகத்தின் ஜீவ நதி. பல ஆண்டுகளாக சட்டப் போராட்டங்கள் நடத்திய பின்பு, உச்சநீதிமன்றம் ஒரு நல்ல தீர்ப்பை வழங்கியது. இச்சூழ்நிலையில், மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சர் மாநிலங்களவையில் அளித்த பதில், தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, இதுபோன்ற மிக முக்கியமான பிரச்சனைகள் குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது, சம்பந்தப்பட்ட மாநில மக்களின் உணர்வுகளை மனதில்கொண்டு பதில் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். தமிழகத்தின் நலனுக்கு எதிராக செயல்படும் எந்தவொரு செயலையும் அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது. காவிரி நீர் உரிமையை நிலைநாட்டவும், தமிழகத்தின் நலன்களைப் பாதுகாக்கவும் அதிமுக எப்போதும் துணை நிற்கும்.

மத்திய அரசின் இந்த பதில், கர்நாடகாவிற்கு சாதகமாகவும், தமிழகத்திற்கு பாதகமாகவும் அமைந்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழகத்தின் ஜீவாதாரமான காவிரி நதிநீரைப் பாதுகாப்பதில் மத்திய அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKCentral GovtEdappadi PalanisamyKarnatakaKaveriSupreme Courtஅதிமுகஉச்சநீதிமன்றம்எடப்பாடி பழனிசாமிகர்நாடகாகாவிரிமத்திய அரசு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article விராட் கோலி மற்றும் சஞ்சு சாம்சன் கிரிக்கெட் மைதானத்தில் இருப்பது போன்ற படம் கோலியின் உடற்பயிற்சி ரகசியம்: சஞ்சு சாம்சன் வெளிச்சம் போட்டுக் காட்டினார்!
Next Article ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளை உருவாக்கும் மாதோபட்டி மற்றும் நயா பாஸ் கிராமங்கள் பற்றிய செய்தி இந்தியாவை ஆளும் 2 ரகசிய கிராமங்கள்: ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் தொழிற்சாலைகள்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு

கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

போராட்டங்களில் கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் மீதான…

ஜூலை 28, 2026

அசாம் எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளம் வெள்ள நிவாரணத்திற்கு நன்கொடை

அசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, ஒரு…

ஜூலை 28, 2026

நீட் வினாத்தாள் கசிவு: மத்திய அரசை சாடிய அகிலேஷ் யாதவ்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய…

ஜூலை 28, 2026

மாணவிகள் போல இல்லை, சாக்கடை போன்றவர்கள்: ஜென் சி தலைமுறையினரை விமர்சித்த கங்கனா ரணாவத்

பாஜக எம்பியும், நடிகையுமான கங்கனா ரணாவத், ஜென்…

ஜூலை 28, 2026

தானே மாவட்டத்தில் கனமழை: 18 பேர் உயிரிழப்பு – மீட்புப் பணிகள் தீவிரம்

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட…

ஜூலை 28, 2026

You Might Also Like

தமிழ்நாடு

குதிரை பேரம் அரசியல் அல்ல, அது துர்நாற்றம் வீசும் செயல் – டிடிவி தினகரன் கடும் விமர்சனம்

தங்களை தூய சக்தி என்று கூறிக்கொள்பவர்கள் தமிழ்நாட்டின் அரசியலில் கொண்டு வந்திருப்பது மாற்றம் அல்ல, சகிக்க முடியாத துர்நாற்றம் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக…

1 Min Read
தமிழ்நாடு

பேராசிரியர் நியமனங்கள்: தாமதமின்றி நடத்த அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

பேராசிரியர் நியமனங்கள் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 6 மாதங்களுக்கு முன்பே தேர்வு நடத்தப்பட்டும் முடிவுகள் வெளியிடப்படாதது குறித்து அவர்…

1 Min Read
முதல்வர் விஜய் மற்றும் சி.விஜயபாஸ்கர் சந்திப்பு
தமிழ்நாடு

முதல்வர் விஜய்யை சந்தித்த பின் சி.விஜயபாஸ்கர் நெகிழ்ச்சி பேட்டி

முதல்வர் விஜய்யை சந்தித்த பின் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நெகிழ்ச்சி பேட்டி அளித்துள்ளார். அதிகாரத்தால் ஆள்வது வேறு, அன்பால் ஆள்வது வேறு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

கோவை சிறுமி கொலை: அரசு கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

கோவை சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை வழங்கவும், இது போன்ற சம்பவங்களைத் தடுக்கவும்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?