MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: காவிரி விவகாரம்: மத்திய அரசுக்கு அண்ணாமலை கடும் எச்சரிக்கை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: காவிரி விவகாரம்: மத்திய அரசுக்கு அண்ணாமலை கடும் எச்சரிக்கை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - காவிரி விவகாரம்: மத்திய அரசுக்கு அண்ணாமலை கடும் எச்சரிக்கை

தமிழ்நாடு

காவிரி விவகாரம்: மத்திய அரசுக்கு அண்ணாமலை கடும் எச்சரிக்கை

Fernandez
Last updated: ஜூலை 28, 2026 4:02 மணி
Fernandez
Share
வீ தி லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை
வீ தி லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை
SHARE

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாடு திடீரென மாறியிருப்பது குறித்து, வீ தி லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை மத்திய அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குறிப்பாக, தமிழ்நாட்டின் ஒப்புதல் இன்றி கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே எந்தவொரு புதிய கட்டமைப்பையும் அமைக்க முடியாது என்ற முந்தைய நிலைப்பாட்டிலிருந்து மத்திய அரசு பின்வாங்கியதற்கான காரணத்தை அவர் கேள்விக்குள்ளாக்கியுள்ளார்.

இது தொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "கடந்த 16.02.2018 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய காவிரி நதி நீர் பங்கீடு தீர்ப்பில், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே புதிய கட்டமைப்பை ஏற்படுத்த, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் ஒப்புதல் பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் நேற்று மாநிலங்களவையில் அளித்த பதில் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், "கடந்த 05.08.2021 அன்று அன்றைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்கள், அணைக் கட்டுமானத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிப்புக்கு கர்நாடக மாநிலத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி நிபந்தனைக்குட்பட்டது என்றும், காவிரி கடைமட்டத்தில் பாயும் மாநிலங்களின், குறிப்பாக தமிழ்நாட்டின் ஒப்புதல் இன்றி நதியின் குறுக்கே அணைகள் போன்ற கட்டமைப்புகளை அமைக்க முடியாது என்றும் நாடாளுமன்றத்திலேயே தெளிவாகத் தெரிவித்திருந்தார்" என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், தமிழ்நாட்டு விவசாயிகளின் நலன்களைப் புறக்கணித்து, மத்திய அரசு தனது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து திடீரென பின்வாங்கியிருப்பது, கர்நாடகத் தேர்தல் அரசியலுக்காகவா என்ற சந்தேகத்தை எழுப்புவதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இத்தகைய முக்கிய விவகாரங்களில், மத்திய அரசு நேர்மையாகவும், வெளிப்படையாகவும், ஒரே நிலைப்பாட்டிலும் செயல்பட வேண்டும் என எதிர்பார்ப்பது தவறா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

"தமிழ்நாட்டு மக்களை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு சகோதர மாநிலங்களுக்கிடையேயான நல்லுறவைப் பாதிக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவிரி விவகாரத்தில் சட்டத்திற்கும் நீதிக்கும் உட்பட்டு செயல்படுமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன்" என்று தனது பதிவின் இறுதியில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசின் இந்த திடீர் நிலைப்பாடு மாற்றம், தமிழ்நாட்டு விவசாயிகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AnnamalaiCentral GovtKaveriஅண்ணாமலைகர்நாடகாகாவிரிதமிழ்நாடுமத்திய அரசு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article தமிழக முதல்வர் விஜய் மேகதாது அணைக்கு அனுமதி தரக்கூடாது: பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்
Next Article ஏசி ரயில் பெட்டியில் விளக்கேற்றி சாமி கும்பிடும் பயணி ஏசி ரயில் பெட்டியில் விளக்கேற்றி சாமி கும்பிட்ட பயணி: நெட்டிசன்கள் கண்டனம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் சட்டமன்ற உறுப்பினர்கள் வெள்ள நிவாரணத்திற்காக நன்கொடை வழங்குகின்றனர்

அசாம் எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளம் வெள்ள நிவாரணத்திற்கு நன்கொடை

அசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, ஒரு கட்சி தவிர அனைத்து எம்.எல்.ஏ.க்களும்…

ஜூலை 28, 2026

நீட் வினாத்தாள் கசிவு: மத்திய அரசை சாடிய அகிலேஷ் யாதவ்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய…

ஜூலை 28, 2026

மாணவிகள் போல இல்லை, சாக்கடை போன்றவர்கள்: ஜென் சி தலைமுறையினரை விமர்சித்த கங்கனா ரணாவத்

பாஜக எம்பியும், நடிகையுமான கங்கனா ரணாவத், ஜென்…

ஜூலை 28, 2026

தானே மாவட்டத்தில் கனமழை: 18 பேர் உயிரிழப்பு – மீட்புப் பணிகள் தீவிரம்

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட…

ஜூலை 28, 2026

நீட் போராட்டக்காரர்கள் விடுதலை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

நீட் தேர்வு போராட்டங்களில் கைது செய்யப்பட்ட 18…

ஜூலை 28, 2026

You Might Also Like

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வு குறித்து கருத்து தெரிவிக்கிறார்
தமிழ்நாடு

நீட் தேர்வை ஒழிக்க இதுவே சரியான நேரம் – மு.க.ஸ்டாலின்

நீட் தேர்வு ஒவ்வொரு அம்சத்திலும் தோல்வியடைந்து விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தத் தேர்வை முற்றிலும் ஒழிப்பதற்கான நேரம் இது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

2 Min Read
தமிழ்நாடு

குரூப் 1 காலி பணியிடங்கள்: ஜெயக்குமார் வலியுறுத்தல்

குரூப் 1 தேர்வில் காலி பணியிடங்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார். மாணவர்களின் நலன் கருதி அரசு செயல்பட வேண்டும்…

1 Min Read
தமிழ்நாடு

டெல்லியில் சோனம் வாங்சுக் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடக்கம்

கல்வி சீர்திருத்தம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கோரி, டெல்லி ஜந்தர் மந்தரில் சுற்றுச் சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். அவரது போராட்டம்…

1 Min Read
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்
தமிழ்நாடு

காவலர் நியமனத்தை தாமதிப்பது சட்டம் ஒழுங்கில் சமரசம்: நயினார் நாகேந்திரன்

தமிழக சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் காவலர் நியமனத்தை அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைத்த நிலையில், இது சட்டம் ஒழுங்கில் அரசு சமரசம் செய்வதற்கு சமம் என…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?