MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: டெஸ்ட் கிரிக்கெட்டில் 130 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் வீரர் நோமன் அலி புதிய வரலாற்றுச் சாதனை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: டெஸ்ட் கிரிக்கெட்டில் 130 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் வீரர் நோமன் அலி புதிய வரலாற்றுச் சாதனை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - டெஸ்ட் கிரிக்கெட்டில் 130 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் வீரர் நோமன் அலி புதிய வரலாற்றுச் சாதனை

விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்டில் 130 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் வீரர் நோமன் அலி புதிய வரலாற்றுச் சாதனை

Admin
Last updated: மே 12, 2026 7:59 மணி
Admin
Share
SHARE

பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர் நோமான் அலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளார். தனது 39 வயது 217 நாட்களில் இந்த மைல்கல்லை எட்டியதன் மூலம், 100 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய வயதில் மூத்த சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில், மெஹிதி ஹசன் மிராஜின் விக்கெட்டை வீழ்த்தியபோது நோமான் அலி இந்தச் சாதனையை அடைந்தார். இங்கிலாந்து வீரர் பாபி பீல் 1896-ஆம் ஆண்டில், 39 வயது 180 நாட்களில் இதேபோன்ற சாதனையை நிகழ்த்தியிருந்தார். 130 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த சாதனையை நோமான் அலி தற்போது முறியடித்துள்ளார்.

ஷேர் பங்களா தேசிய ஸ்டேடியத்தில் நடந்த அந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில், மெஹிதி ஹசன் மிர்ராஸ் 24 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். நோமானின் துல்லியமான சுழற்பந்து, மிராஜின் மட்டையின் விளிம்பைத் தொட்டு, ஸ்லிப்பில் நின்ற வீரரிடம் எளிதான கேட்ச்சாக மாறியது. இது ஒரு சிறந்த சுழற்பந்து வீச்சாளரின் விக்கெட்டிற்கு உதாரணமாக அமைந்தது.

இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், 200 பந்துகளில் 91 ரன்கள் எடுத்திருந்த மோமினுல் ஹக்கை எல்.பி.டபிள்யூ முறையில் வீழ்த்தி நோமான் அலி ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்திருந்தார். ஆனால், ஆடுகளத்தின் உதவியுடன், இரண்டாவது இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பாகச் செயல்பட்டார்.

இரண்டாவது இன்னிங்ஸில் வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ 150 பந்துகளில் 87 ரன்கள் எடுத்திருந்தபோது எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதேபோல் மெஹிதி ஹசன் மற்றும் தைஜுல் இஸ்லாம் ஆகியோரையும் அவர் வெளியேற்றினார். இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வயதில் மூத்த பந்துவீச்சாளர்கள் பட்டியலில் நோமான் அலி முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

நோமான் அலி 2021-ஆம் ஆண்டில் தனது 34-வது வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். பாகிஸ்தானின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான யாசிர் ஷாவுக்கு ஏற்பட்ட அவசர கால மாற்று வீரராகவே அவர் அணியில் இடம்பிடித்தார். வங்கதேசத்திற்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டி, நோமான் அலி விளையாடிய 22-வது டெஸ்ட் ஆகும்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் விரைவாக 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஏழாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். பாகிஸ்தான் வீரர்களில், யாசிர் ஷா (17 டெஸ்டுகள்), சயீத் அஜ்மல் (19 டெஸ்டுகள்), வக்கார் யூனிஸ் (20 டெஸ்டுகள்), முகமது ஆசிப் (20 டெஸ்டுகள்) ஆகியோருக்கு அடுத்தபடியாக, 22 டெஸ்டுகளில் இந்தச் சாதனையை எட்டி, நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார் நோமான் அலி.

இந்த வரலாற்றுச் சாதனையை நோமான் அலி நிகழ்த்திய போதிலும், இந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி இக்கட்டான சூழ்நிலையில்தான் இருந்தது. 268 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கிப் போராடிய பாகிஸ்தான், 154 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. அப்போது நோமான் அலி 9 பந்துகளைச் சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink1
Previous Article தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: டாஸ்மாக் இயக்குனரும் அடக்கம்
Next Article மனித உரிமைகள் குறும்பட போட்டி: ரூ.2 லட்சம் பரிசு – தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஜூ மகாஜன் அறிவிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

வந்தே பாரத் ரயில்

பிரேக் செயலிழந்தும் 463 கி.மீ. ஓடிய வந்தே பாரத் ரயில்: விசாரணை தீவிரம்

பிரேக் செயலிழந்த நிலையில் சுமார் 463 கி.மீ. தூரம் பயணித்த வந்தே பாரத்…

நவம்பர் 16, 2026

டேட்டிங் செயலி காதல்: கனடா பெண் இந்தியா வருகை

டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான இளைஞரை திருமணம்…

நவம்பர் 16, 2026

பசியின் கோரம்: நாயிறைச்சியை உண்ட இளைஞர் – ஒடிசாவில் அதிர்ச்சி சம்பவம்

ஒடிசாவின் சம்பல்பூர் மாவட்டத்தில், சாலையில் இறந்த நாயின்…

நவம்பர் 15, 2026

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்திற்கு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு இல்லை: பிரியங்கா காந்தி

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை நடத்துவது குறித்து எதிர்க்கட்சிகளுக்கு…

நவம்பர் 14, 2026

இந்தியா, உலகத்துடன் நவீன ஆராய்ச்சிகளைப் பகிர வேண்டும்: பிரதமர் மோடி

இந்தியாவின் பண்டைய அறிவு மற்றும் நவீன ஆராய்ச்சிகளின்…

நவம்பர் 13, 2026

You Might Also Like

விளையாட்டு

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு டிஎஸ்பி பதவி: பீகார் அரசு பரிந்துரை

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஆகாஷ் தீப் மற்றும் முகேஷ் குமார் ஆகியோருக்கு டிஎஸ்பி பதவி வழங்க பீகார் மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது. இந்த…

1 Min Read
ஐபிஎல் 2027 ஏலம் நடைபெறும் கோவா மைதானம்
விளையாட்டு

ஐபிஎல் 2027 ஏலம்: கோவாவில் டிசம்பரில் நடக்கிறது – பிசிசிஐ அறிவிப்பு

ஐபிஎல் 2027 சீசனுக்கான வீரர்களின் மினி ஏலம் டிசம்பர் மாதம் கோவாவில் நடைபெறும் என பிசிசிஐ செயலர் தேவஜித் சைகியா அறிவித்துள்ளார். வெளிநாடுகளில் நடைபெற்ற ஏலம் மீண்டும்…

1 Min Read
சஞ்சு சாம்சன் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் புகைப்படம்
விளையாட்டு

சஞ்சு சாம்சன் நீக்கம் அல்ல, ஓய்வு: பிசிசிஐ விளக்கம்

ஜிம்பாப்வே டி20 தொடரில் சஞ்சு சாம்சன் இடம் பெறாதது குறித்து பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது. அவர் நீக்கப்படவில்லை, ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

2 Min Read
இந்திய கிரிக்கெட் கேப்டன் சுப்மன் கில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகிறார்
விளையாட்டு

டிரா ஏமாற்றம்: WTC பைனலுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது: சுப்மன் கில்

இலங்கை டெஸ்ட் போட்டி சமனில் முடிந்ததில் ஏமாற்றம் தெரிவித்த இந்திய கேப்டன் சுப்மன் கில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு செல்ல இன்னும் வாய்ப்பு இருப்பதாக நம்பிக்கை…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?