MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை வழக்கு: பிஹார், உ.பி.யைச் சேர்ந்த மூன்று கூலிப்படையினர் கைது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை வழக்கு: பிஹார், உ.பி.யைச் சேர்ந்த மூன்று கூலிப்படையினர் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை வழக்கு: பிஹார், உ.பி.யைச் சேர்ந்த மூன்று கூலிப்படையினர் கைது

இந்தியா

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை வழக்கு: பிஹார், உ.பி.யைச் சேர்ந்த மூன்று கூலிப்படையினர் கைது

Admin
Last updated: மே 12, 2026 11:52 காலை
Admin
Share
SHARE

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் தனிப்பட்ட உதவியாளரான சந்திரநாத் ரத் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், பிஹார் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த மூன்று கூலிப்படையினரை சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் கைது செய்துள்ளனர்.

பிஹார் மாநிலம் பக்சர் பகுதியில் மயங்க் ராஜ் மிஸ்ரா, விக்கி மௌரியா ஆகிய இருவரும், உத்தரப் பிரதேச மாநிலம் பலியா மாவட்டத்தில் ராஜ் சிங் என்பவரும் கைது செய்யப்பட்டனர். கைதான ராஜ் சிங் மீது ஏற்கெனவே 15-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

முன்னாள் விமானப் படை வீரரும், மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் தனிப்பட்ட உதவியாளருமான சந்திரநாத் ரத், கடந்த மே 6-ஆம் தேதி இரவு தனது காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மத்தியம்கிராம் பகுதியில் மர்ம நபர்களால் வழிமறித்துச் சுடப்பட்டார். சுமார் ஏழு கிலோமீட்டர் தூரம் துரத்தி வரப்பட்ட அவரது காரை வழிமறித்த அந்தக் கும்பல், அவர் மீது ஐந்து முறை துப்பாக்கியால் சுட்டது.

இந்தத் துப்பாக்கிச்சூட்டில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சந்திரநாத் ரத்தின் காரை ஓட்டி வந்த புத்ததேவ் பேரா, மூன்று குண்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேற்கு வங்கத்தில் 15 ஆண்டுகால திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து பாஜக வெற்றி பெற்ற இரண்டே நாட்களில் இந்தக் கொலை சம்பவம் நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தனது உதவியாளர் என்பதால், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அவர் கொல்லப்பட்டதாக சுவேந்து அதிகாரி குற்றம் சாட்டினார். பாஜக தலைவர்கள் இந்த கொலைக்கு திரிணமூல் காங்கிரஸே காரணம் என்று கூறி வரும் நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சி இந்த வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

கைது செய்யப்பட்ட மூன்று பேரும் திங்கள்கிழமை பாராசாத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 13 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இவர்கள் மூவரும் கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இவர்களை ஏவிவிட்ட முக்கியக் குற்றவாளிகள் யார், கொலையின் பின்னணியில் உள்ள உண்மையான நோக்கம் என்ன என்பது குறித்துத் தனிப்படை போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஜாக்குலின் அப்ரூவராக மாற அமலாக்கத் துறை கடும் எதிர்ப்பு
Next Article நடிகை ரவீணா ரவிக்கு மலையாள இயக்குநருடன் திருமணம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜெய்ப்பூரில் பள்ளி கேண்டீன் உணவு உண்ட மாணவன் உயிரிழந்த சம்பவம் குறித்த செய்தி

பள்ளி கேண்டீன் சோகம்: பிளஸ் 2 மாணவன் உயிரிழப்பு – மருத்துவமனைக்கு தாமதமாக அழைத்துச் சென்றதால் சர்ச்சை

ஜெய்ப்பூரில் பள்ளி கேண்டீன் உணவு சாப்பிட்ட பிளஸ் 2 மாணவன் உயிரிழந்தான். மருத்துவமனைக்கு…

ஆகஸ்ட் 14, 2026

ஆந்திராவில் 83 பேர் கொண்ட மெகா கூட்டுக்குடும்பம்: தலைமுறைகள் தாண்டிய ஒற்றுமை

ஆந்திராவில் 83 பேர் கொண்ட ஒரு மெகா…

ஆகஸ்ட் 14, 2026

சாவர்க்கர் சர்ச்சை: ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு தள்ளுபடி – உச்ச நீதிமன்றம்

சுதந்திரப் போராட்ட வீரர் வி.டி. சாவர்க்கர் குறித்து…

ஆகஸ்ட் 14, 2026

பிரிவினையின்போது மோடி பிரதமராக இருந்திருந்தால்: யோகி ஆதங்கம்

இந்தியப் பிரிவினையின்போது நரேந்திர மோடியைப் போன்ற ஒருவர்…

ஆகஸ்ட் 14, 2026

குட்கா தடை: 24 மணி நேர கெடு விதித்த பாஜக எம்.பி ராகவேந்திரா

கர்நாடகாவில் குட்கா விற்பனை மீதான தடையை 24…

ஆகஸ்ட் 14, 2026

You Might Also Like

மராட்டிய அரசு ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கான புதிய சட்டத்திருத்தம்
இந்தியா

மராத்தி தெரியாவிட்டால் உரிமம் ரத்து: மராட்டிய அரசு அதிரடி

மராட்டிய அரசு, ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் மராத்தி மொழி அறிந்திருக்க வேண்டும் என அறிவித்துள்ளது. மொழி தெரியாதவர்களுக்கு உரிமம் ரத்து செய்யப்படும்.

1 Min Read
மத்திய பிரதேச அமைச்சரவை கூட்டம்
இந்தியா

திருமணமானவர் ‘லிவ்-இன்’ உறவில் இருந்தால் 5 ஆண்டு சிறை: ம.பி. அமைச்சரவை ஒப்புதல்

மத்திய பிரதேசத்தில், திருமணமான ஒருவர் 'லிவ்-இன்' உறவில் இருந்தால் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் சட்ட மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

1 Min Read
இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்
இந்தியா

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் அந்தமான் பயணம்

துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், வரும் 8 ஆம் தேதி அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு வளர்ச்சி திட்டங்கள் குறித்து நிர்வாக அதிகாரிகளுடன்…

1 Min Read
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்ஸ்டாகிராமில் சாதனை படைத்ததைக் குறிக்கும் படம்
இந்தியா

இன்ஸ்டாகிராமில் ராகுலை முந்திய முதல்வர் விஜய்!

இன்ஸ்டாகிராமில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பின்னுக்குத் தள்ளி தமிழக முதல்வர் ஜோசப் விஜய் முன்னிலை பெற்றுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் அவருடைய மக்கள் செல்வாக்கை…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?